Home குழந்தை நலம் குழந்தைகள் என்ன விரும்புவார்கள் தெரியுமா?

குழந்தைகள் என்ன விரும்புவார்கள் தெரியுமா?

20

downloadகுழந்தைகளுக்கு தாய் ஊட்டும் உணவை விட அவர்களுக்கு ஒவ்வொரு பருவத்திலும் விளையாட்டு பொருள்கள் மீது ஆர்வம் அதிகமாகும்.

அப்படி ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகள் என்னென்ன விளையாட்டு பொருள்கள் விரும்புவார்கள் என்பதை பார்ப்போம்.

முதல் மன்று மாதங்கள்

இந்த பருவத்தில் குழந்தைகளின் விளையாட்டு பொருள் பெற்றோர்கள் தான். தன் தாயின் கண்கள், விரல்கள், முகம், உடைகள் என இவற்றையே திரும்ப திரும்ப பார்க்கும். இந்த பருவத்தில் குழந்தைகளை பெற்றோர்கள் மார்புடன் தூக்கி வைத்துக் கொண்டாலே போதுமானது.

மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை

இப்பருவத்தில் குழந்தை தன்னை தானே விளையாட்டு பொருளாக எடுத்துக் கொள்ளும். அதாவது, விரல்களை மூடித் திறந்து பார்ப்பது, கையை வேகமாக அசைத்து மகிழ்வது, சமயங்களில் முகத்தில் வேகமாக இடித்துக் கொள்வது, விரலை வாயில் போட்டுப் பழகிக் கொள்வது எல்லாமே இந்தப் பருவத்தில்தான்.

இதில் குழந்தைகளை விரலை வாயில் வைக்கும் நேரத்தில் பெற்றோர்கள் மிக ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஓராண்டு வரை

குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் பருவம் இது. இதனால் அவர்களிடம் ஒரு பிளாஸ்டிக் கூடையில் போட்டு அவர்கள் கையில் கொடுத்து விட்டால் ரொம்பவும் போதுமானது, அவர்கள் அப்படி விளையாடுவதை பார்க்கும் போது நமக்கு சந்தோஷமாக இருக்கும்.

ஒன்று முதல் இரண்டு வயது வரை

இப்பருவத்தில் குழந்தைகளின் ரசனையைத் தெரிந்து கொண்டு வளர்ப்புச் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தர வேண்டும். அதே வேளையில், அவசியம் குழந்தைகளின் ரசனை அறிந்து விளையாட்டுப் பொருட்கள் வாங்கித்தர வேண்டும்.