Home குழந்தை நலம் உங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தை அறிவாளியாகப் பிறக்க வேண்டுமா?

உங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தை அறிவாளியாகப் பிறக்க வேண்டுமா?

34

பொதுவாக எல்லா கர்ப்பிணிப் பெண்களுக்குமே தனக்குப் பிறக்கப்போகும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டும் என்ற கவலை இருக்கும்.

அதற்காக தன்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வார்கள். அதேசமயம் வயிற்றில் வளரக்கூடிய குழந்தையின் மூளை அமைப்பை தன்னால் மாற்றியமைக்க முடியும்.

தன்னுடைய குழந்தை பிறக்கும்போதே புத்திசாலி குழந்தையாகப் பிறக்கும் வாய்ப்பு இருக்கிறதென்றால் இன்றைய போட்டி நிறைந்த உலகில் தாய்மார்கள் அந்த வாய்ப்பைத் தவறவிடுவார்களா என்ன?

பிறக்கும் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என அல்பெர்ட்டா பல்கலைக்கழக ஆய்வு ஒன்றின் முடிவு தெரிவிக்கிறது. இந்த ஆய்வின் முதன்மை ஆராய்ச்சியாளர் ஃபியூஸ் மந்னே குறிப்பிடுகையில்,
கனடா நாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 3500 கைக்குழந்தைகளும் அவர்களுடைய குடும்பங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் பல குழந்தைகளின் புலனுணர்வு அபார வளர்ச்சி பெற்றிருந்ததும் மூளை வளர்ச்சி பல மடங்கு மேம்பட்டு இருந்ததும் கண்டறியப்பட்டது.

அதன் காரணத்தை ஆராந்து பார்த்தபோது, அக்குழந்தைகள் அவர்களுடைய தாயின் வயிற்றில் இருந்தபோது, தாய் தன்னுடைய உணவில் பழங்களை மிக அதிகமாக எடுத்துக் கொண்டது தெரிய வந்தது. அதனால் அந்த குழந்தையுடைய மூளையின் லிம்பிக் சிஸ்டம் அபார வளர்ச்சி பெற்றிருந்ததும் கண்டறியப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த முடிவுகளை அடிப்டையாக வைத்துக்கொண்டு ஆய்வு மேலும் தொடரப்பட்டது. பழங்கள் அதிகமாக உட்கொள்ளும்போது மரபணுக்கள் உறுதியடைவதுண்டு.

ஆனால் குழந்தையின் மூளை மற்றும் பரிணாம வளர்ச்சி, தாய் வயிற்றில் இருக்கும்போதே மேம்பட்டு இருப்பது மருத்துவ உலகில் பல புதிய ஆய்வுகளுக்கு வழிவகுத்தது. குழந்தை பிறந்த பிறகு, பழச்சாறுகள் நிறைய குடிக்கும் பாலூட்டும் தாய்மார்களும் பழங்கள் நிறைய உண்ணும் கர்ப்பிணிகளும் இந்த ஆய்வில் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டனர்.

மேலும், கர்ப்ப காலத்தில் உண்டாகும் நீரிழிவு நோய் பிரச்னைகள், எடை மிக அதிகமாதல் போன்ற சிக்கல்கள் பற்றி ஆராயப்படவில்லை என்றாலும்கூட, இயற்கையாக உள்ள சர்க்கரையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும்பொழுது சிக்கல்களையே உண்டாக்கும்.

உடலில் சர்க்கரையின் அளவைக் கூட்டிவிடும். ஆகையால் சர்க்கரையின் அளவு குறைவாக உள்ள பழங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் எடை அதிகரித்தல், நீரிழிவு போன்ற அபாயமும் இல்லை. குழந்தையும் ஆரோக்யமாக, அறிவாளியாகப் பிறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.