Home குழந்தை நலம் குழந்தை கீழே விழுந்து விட்டதா? .

குழந்தை கீழே விழுந்து விட்டதா? .

28

சுட்டிக்குழந்தையின் விளையாட்டை அழகாக பார்த்து ரசிக்கலாம், ஆனால் அந்த விளையாட்டினால் அவர்களுக்கு விபரீதம் நடந்தால் அதை தாங்கி கொள்ள முடியாது.

அங்கும் இங்கும் ஓடி விளையாடி, நமக்கு மகிழ்ச்சி அளிப்பார்கள். ஆனால் அத்தகைய சுட்டிக் குழந்தைகள் கீழே விழுந்தாலோ அல்லது நோய்களில் பாதிக்கப்பட்டாலோ, என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்போம்.

மேலும் சில குழந்தைகள் திடீரென்று அழத் தொடங்கும். ஆகவே அவ்வாறு குழந்தைகளை என்ன நோய்கள் அடிக்கடி தாக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொண்டு, குழந்தைகளை அவஸ்தையிலிருந்து தடுக்கலாம்.

குழந்தை விளையாடும் போது கீழே விழுந்து அடி

பஞ்சு மற்றும் பாண்டேஜ் துணி ஆகியவற்றால் மட்டும் அந்தப் பகுதியை அழுத்திக் கட்டினால் போதும். பெரிய காயம் என்றால் மருத்துவ உதவி தேவை. வீட்டு வைத்தியம் என்ற பெயரில் மஞ்சள் பொடி, சர்க்கரை, காபி பொடி என்று எடுத்து பூச வேண்டாம்.

தலைக்குள் நீர் கோர்த்துக் கொள்ளுதல்

நீலகிரி தைலம் எனப்படும் யூக்கலிப்டஸ் எண்ணெய்யின் ஆவி பயனளிக்கும். மிகவும் சிறிய குழந்தை என்றால் தலையணையைக்கு மேல் குழந்தையின் தலையை சுற்றி யூகலிப்டஸ் எண்ணெய் நனைக்கப்பட்ட துணி ஒன்றை வைக்கலாம்.

திடீர் காய்ச்சல்

க்ரோசின் என்ற மாத்திரைகளை நாடுவதற்கு முன் நீரினால் ஸ்பான்ஞ் பாத் கொடுங்கள். நேரடியாக ஐஸ் தண்ணீரில் உடலை ஒத்தியெடுக்கக்கூடாது. குளிரால் நடுக்கம் வந்துவிடலாம்.

சாதாரணமான தண்ணீரில் ஈரத்துணியை நனைத்து உடலைத் துடைக்க வேண்டும். டர்க்கி டவலாக இருந்தால் மேலும் நல்லது. முக்கியமாகப் பெரிய ரத்தக்குழாய்கள் உள்ள அக்குள் மற்றும் தொடை இடுக்குப் பகுதிகளில் நன்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும். பதினைந்து முறையாவது இப்படிச் செய்ய வேண்டும். உடனடி நிவாரணம் தரும்.

தசைப்பிடிப்பு மற்றும் சுளுக்கு

விரல்களால் அந்தப் பகுதியை அழுத்தி நீவுவது, எண்ணெய்யைக் கொதிக்க வைத்து அந்தப் பகுதியில் ஒத்தடம் கொடுப்பது என்பதெல்லாம் விஷயத்தைச் சிக்கலாக்கிவிடும்.

ஐஸ் கட்டியை ஒரு துணியில் சுற்றி அந்தப் பகுதியில் ஒத்தி ஒத்தியெடுங்கள். பெரும்பாலும் சரியாகிவிடும். (ஐஸ் கட்டியை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதியில் வைக்கவேண்டாம்).