Home சூடான செய்திகள் கட்டில் உறவுவின் பின் ஆண்கள் இவற்றை சாப்பிடக்கூடாது

கட்டில் உறவுவின் பின் ஆண்கள் இவற்றை சாப்பிடக்கூடாது

100

சூடான செய்திகள்:மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவாக இருக்கும் ஒரு குணம் தன்னுடைய எதிர்பாலினத்துடன் உறவில் ஈடுபடுவது. கணவன்- மனைவி இடையே அன்பு அதிகரிக்கவும், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு அவர்களுக்கு இடையேயான நெருக்கம் அதிகரிக்கவும் உறவில் ஈடுபடுவது எளிமையான, பயனுள்ள வழியாகும். இரு பாலினத்தை சேர்ந்தவர்களுமே உடலுறவில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டத்தான் செய்கிறார்கள்.

உறவில் ஈடுபடுவது என்பது இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் சிறந்த உடற்பயிற்சியாகவும் இருக்கிறது. உறவில் ஈடுபடும் ஓவ்வொரு அரை மணி நேரத்திற்கும் 150 கலோரிகள் உங்கள் உடலில் எரிக்கப்படுகிறது. ஆனால் உறவில் ஈடுபட்ட பிறகு உங்கள் உடலின் இயக்கங்கள் சிறிது நேரத்திற்கு சீராக இருக்காது. அந்த நேரங்களில் சில உணவுகளை சாப்பிடுவது உங்களுக்கு பல ஆரோக்கிய பிரச்சினைகளை உண்டாக்கும். எந்தெந்த உணவுகளை உறவில் ஈடுபட்ட பிறகு சாப்பிடக்கூடாது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பீட்சா நிபுணர்களின் கூற்றுப்படி, உறவில் ஈடுபட்ட பிறகு சுத்திகரிக்கப்பட்ட மாவுடன் சீஸ் சேர்த்து சாப்பிடுவது உங்கள் உடலில் எரிச்சலை உண்டாக்கலாம். எனவே உறவில் ஈடுப்பட்டவுடன் பீட்சா போன்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இந்த தருணத்தில் உங்கள் உடலில் இரத்த ஓட்டம் மிகவும் அதிகமாக இருக்கும், எனவே பீட்சா போன்ற உணவுகளை உங்கள் செரிமான மண்டலம் செரிக்க வைக்க அதிக சிரமப்படும்.

காபி மற்றும் டீ காபி மற்றும் டீ இரண்டிலுமே காஃபைன் உள்ளது, எனவே உறவில் ஈடுபட்டு பிறகு இவற்றை குடிப்பது உங்களை தூங்க விடாமல் செய்வதோடு தூக்கத்தை தூண்டும் ஹார்மோன்களின் உற்பத்தியை தடுக்கும். எனவே உறவில் ஈடுபட்ட பிறகு நன்கு தூங்குவது உங்கள் உடலையும், மனதையும் அமைதிப்படுத்தும்.

சிப்ஸ் எண்ணெயில் வறுக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட சிப்ஸ்களில் அதிகளவு சோடியம் உள்ளது. உறவில் ஈடுபட்டவுடன் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும்போது இதனை சாப்பிடும்போது உங்கள் இரத்தத்தில் கலக்கும் சோடியம் உங்களை அதிக சோர்வுக்குள்ளாக்கும்.

சீஸ் சீஸில் சோடியம் மற்றும் கொழுப்புகள் அதிகம் உள்ளது. ஈரல் மற்றும் செரிமான பிரச்சினை உள்ளவர்கள் உறவில் ஈடுபட்டவுடன் சீஸ் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது செரிமான மண்டலத்தின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும், இதனால் உணவுகள் செரிக்காமல் இருப்பதுடன் வேறு சில வயிறு தொடர்பான பிரச்சினைகளும் நேரிடலாம்.

மது உறவில் ஈடுபட்ட பிறகு சாப்பிடக்கூடாத பொருட்களில் மிகவும் முக்கியமானது மது ஆகும். ஏனெனில் இது வளர்ச்சிதை மாற்றத்தை குறைக்கும், மேலும் எரிச்சல், தலைசுற்றுதல் மற்றும் மயக்கம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

முட்டை முட்டை ஆரோக்கியமான பொருள் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் உறவில் ஈடுப்பட்ட பிறகு முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல. குறிப்பாக முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிடவேகூடாது. ஏனெனில் இதனால் அதீத சோர்வு மற்றும் அமைதியற்ற தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது.

நார்ச்சத்து உணவுகள் பொதுவாக காய்கறிகள் ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. ஆனால் அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளை உடலுறவில் ஈடுபட்ட பிறகு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல. ப்ரோக்கோலி, காலிப்ளவர் போன்ற அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளை சாப்பிடுவது உங்கள் செரிமான மண்டலத்தை பலவீனமாக்குவதோடு அதீத சோர்வை ஏற்படுத்தும்.

Previous articleகுழந்தை வேண்டுமா? முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள்
Next articleஉங்களுக்கு அடிக்கடி அந்தரங்க கனவு வருகிறதா? இதுதான் காரணம்