Home பாலியல் அவ எனக்கு ஒத்துழைக்கவே மாட்றான்னு இனிமே சொல்ல கூடாதுன்னா இதப் படிங்க!

அவ எனக்கு ஒத்துழைக்கவே மாட்றான்னு இனிமே சொல்ல கூடாதுன்னா இதப் படிங்க!

244

செக்ஸுவல் ரிலேஷன்சிப் பற்றி பலருக்கும் பல விதமான கருத்துக்கள் இருக்கும்.இது அந்தந்த பருவத்தில் நிகழ்கிற ஓர் ஹார்மோன் மாற்றம்.இதை தவறென்று சொல்வது அபத்தம் தானே தவிர வேறொன்றும் இல்லை.

இங்கே கூட நமக்கு பிரச்சனை ஏற்படுவதில்லை. இந்த செக்ஸுவல் ரிலேசன்ஷிப் பிரச்சனை எங்கே ஆரம்பிக்கிறது தெரியுமா? உங்களுக்கான ஜோடியை தேர்ந்தெடுக்கும் போது தான். அதைத் தாண்டி என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது. குறிப்பாக இந்த செக்ஸுவல் ரிலேஷன்ஷிப்பில் ஆண்கள் என்ன விரும்புவார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

போர்ன் வீடியோ :
இன்றைக்கு போர்ன் வீடியோ பார்க்கும் பழக்கம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் இன்றைக்கு ஸ்மார்ட் போன் பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

இதனால் ரியல் லைஃபில் நடக்கிறதும் இயற்கைக்கு மாறாக போர்ன் வீடியோவில் பார்த்தது போன்றே செய்ய வேண்டும் என்ற ஆசை உண்டாகிறது. இந்த வக்கிரங்களின் ஆரம்பம் அங்கே தான் முளைவிடுகிறது.

பெண்கள் :

பாலியல் ரீதியாக மிகவும் வக்கிரமாக நடந்து கொள்கிறான் என்று நீங்களும் பெட்ல எனக்கு கோ ஆப்ரேட் செய்யவே மாட்றா என்று ஆண்களும் புலம்பி , உங்களது சந்தோஷ மனநிலையை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.

ஆண்கள் படுக்கையில் அப்படி என்ன தான் எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள்.

#1

முதலில் தயக்கத்தையும் பயத்தையும் விட்டொழியுங்கள். பெண்களுக்கு ஆரம்பத்தில் இதில் தயக்கமும் அதை விட பயமும் மேலோங்கியிருக்கும்.

உங்களது ஆணை நம்பி படுக்கையறை வரை வந்த பிறகு இன்னமும் பயந்து கொண்டு இருப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது.

இது ஆண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

#2

அந்த ஐந்து முதல் ஏழு நிமிட உச்சநிலையை எட்டுவதற்கு பல பிரயத்தனங்கள் பட வேண்டியிருக்கும். இதன் போது தைரியமாக இருங்கள் .

உங்களது போல்ட்னெஸ் பெரிதும் விரும்பப்படும். அதே போல செக்ஸுவல் பொசிசன்கள் எல்லாம் பெண்களிடத்தில் பெரும்பாலும் அறிமுகமாகியிருக்காது. இதை ஆண்களும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. பயத்தை விலக்கிவிட்டு தைரியமாக இருங்கள்.

அதுவே ஆண்கள் அடிப்படையில் விரும்புவார்கள்.

#3

இது பலரும் செய்கிற தவறு, அவன் முதலில் ஆரம்பிக்கட்டும் என்றும் அவள் முதலில் ஆரம்பிக்கட்டும் என்றும் இருவரும் காத்திருப்பது.

இதில் நவநாகரிக யுகத்தில் படுக்கையறை வரை தைரியமாக சென்றவர்களுக்கு அந்த ஆரம்பிக்கும் விஷயத்திலிருந்து மட்டும் இன்னும் மாறவே முடியவில்லை.

இதிலும் ஈகோ பார்ப்பது எல்லாம் வேண்டாம்.

#4

பெண்களே இந்த விளையாட்டை ஆரம்பித்தால் ஆண்கள் மிகவும் விரும்புவார்கள். இந்த நேரத்தில் ஆண்கள் வேண்டாம் என்பார், விலகி விடுவார் என்றெல்லாம் நினைக்கவே நினைக்காதீர்கள்.

துவக்கம் மட்டுமே உங்களது வேலையாக இருக்கும் அதன் பிறகு ஆண்களின் கை விளையாட ஆரம்பிக்கும்.

எப்படியும் சிறிது நேரத்தில் அவர்களே ஆரம்பிப்பார்கள் என்றாலும் முதல் அடி உங்களிடத்திலிருந்து கிடைத்தால் அது ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

#5

சின்ன சின்ன விளையாட்டுக்கள் இதில் அவசியமாகும். நான் படுக்கையறையில் மட்டும் தான் சீண்டுவேன் என்று முரட்டுப் பிடுவாதம் பிடித்து காத்திருக்காதீர்கள். படுக்கையறைக்குச் சென்றதும் மூட் வருவதற்கு நம் உடலில் எங்கும் ஆன்/ஆஃப் ஸ்விட்ச் பொறுத்தப்படவில்லை.

குறுஞ்செய்திகள் வழியாகவோ அல்லது இருவரும் ஒரேயிடத்தில் இருந்தால் சின்ன சின்ன சில்மிஷங்கள் மூலமாகவோ உங்களது ஆசையை வெளிப்படுத்துங்கள்.

#6

பெண்கள் உச்சநிலை அடைவதைப் பார்க்க பெரிதும் ஆண்கள் விரும்புவார்கள். இது ஆண்களின் சைக்காலஜி . என்னால் ஒரு பெண்ணை திருப்திபடுத்த முடிகிறது என்ற கர்வம் அவர்களுக்கு பிடித்தமான ஒன்று.

அதை விரும்புவார்கள். உறவில் ஈடுபடும் போது, சட்டென விலகுவதோ அல்லது பயந்து கொண்டு தள்ளிவிடுவதோ செய்யாதீர்கள்.

#7

பெரும்பாலான நேரங்களில் இந்த விஷயத்தை துவங்குவதிலிருந்து மெயின் ரோல் எடுத்து செயல்படுவது எல்லாமே ஆண்களாகத்தான் இருக்கும். இதில்பெண்கள் தங்கள் பாத்திரத்தை கச்சிதமாக செய்தால் ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

#8

குறிப்பாக இந்த விஷயத்தில் தயார்படுத்துதல் என்பது ஒரு கலை என்றே கூறலாம். உங்கள் இருவருக்கும் விருப்பம் ஏற்பட்டு படுக்கறைக்குச் செல்லும் நேரத்தில் கூட முன் அபிப்ராயங்கள் கொண்டு செல்லாதீர்கள். நீங்கள் தயார் என்பதை அவர்களுக்கு குறிப்பால் உணர்த்துங்கள்.

#9

பெண்களுக்கு இருக்கிற பயம் காரணமாக உறவு கொள்ளும் போது லைட் போடுவதை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் ஆண்களுக்கு இது கொஞ்சம் இடைஞ்சலான விஷயம் என்றே சொல்லலாம்.

அவர்கள் உறவில் ஈடுபடும் போது உங்களையும், உங்களது உடலையும் பார்க்க பெரிதும் விரும்புவர்.

#10

ஆண்கள் ஒன்றும் பெண்கள் மனதில் நினைப்பதை வாசிக்கும் ஆற்றல் படைத்த அதியமல்ல. அவர்கள் செய்வது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றோ இதைச் செய் என்றோ அவர்களிடத்தில் சொல்லுங்கள்.

அவர்களது விளையாட்டின் ரியாக்ஷன் உடனே வருவது அவர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.

#11

ஆண்களுக்கு அங்கீரம் கொடுத்தால் ரொம்ப பிடிக்கும். அதற்காக உறவில் ஈடுபடும் போதே நொடிக்கு ஒரு முறை அவர்களை பாராட்ட வேண்டும் என்றில்லை.

முடிந்த பிறகு ஆசுவாசமாக இருவரும் படுத்திருக்கும் நேரத்தில் கொஞ்சம் ரிலேக்ஸா இருக்கு… நீ இப்டி பண்ணது எனக்கு ரொம்ப பிடிச்சது என்று உங்களது பாராட்டினை சொன்னால் போதும்.

இதை ஆண்கள் எதிர்ப்பார்ப்பார்கள் ஆனால் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

#12

பெண்களின் முனகல் சத்தம் ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு வகையில் இந்தச் சத்தம் அவர்களின் செக்ஸ் உணர்வை தூண்டும் அமைதியாக இருக்காமல் உங்களிடமிருந்து வரும் முனகல் சத்தங்களையும் இன்னும் வேண்டும் என்கிற உங்களது அறிகுறிகளையும் பெரிதும் விரும்புவார்கள்.

#13

உறவில் ஈடுபடும் போது ஆரம்பம் முதல் இறுதி வரை ஆண்களின் கையே ஒங்கியிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை நீங்களும் ஆண்களை மகிழ்விக்கும் செயல்களில் ஈடுபடலாம்.

அவர்கள் செய்து நீங்கள் மகிழ்வதைக் காட்டிலும் நீங்கள் செய்வது அவர்களுக்கு பெரும் மகிழ்வை உண்டாக்கும். அதை விட உச்சநிலையை சீக்கிரம் அடைவார்கள்.

#14

உச்ச நிலையை அடைந்த பிறகு சில நிமிடங்களாவது ஆசுவாசமாக அணைத்துக் கொண்டு இருக்க விரும்புவார்கள். அந்த நேரத்தில் பயத்துடன் புலம்பாமல் இது சம்பந்தமாகவே பேசுங்கள்.

உங்களது பேச்சில் உன்னால் நான் திருப்தியடைந்தேன், நீ அதைச் செய்யும் போது எனக்கு மிகவும் பிடித்தது போன்ற பாராட்டுக்களையும் ஒன்றிரண்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.

#15

ஃபோர்ப்ளே எனப்படக்கூடிய விளையாட்டில் பெண்கள் களமிறங்கினால் ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் இருவரும் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாகவோ அல்லது தனியாக இருக்கும் போதோ ஃபோர்ப்ளேயில் ஈடுபடுங்கள்.

ஆண்களின் கையை இறுக்க கோர்த்துக் கொண்டு இருப்பது அவர்களுக்கு பிடிக்கும். இருவருக்கும் இடையிலான பிசிக்கல் டச் மிகவும் அவசியமான ஒன்று . இது உங்களுக்கு அரவணைப்பை கொடுக்கும் ஆண்களுக்கு மனநிறைவைக் கொடுக்கும்.

Previous articleசைஸ் பெரிசா? சிறிசா? பெண்கள் விரும்புவது என்ன?
Next articleஆண்களின் பாலியல் செயல்பாடு மற்றும் செயல்திறனை அதிகரிப்பதற்கான சில டிப்ஸ்!