Home சமையல் குறிப்புகள் ஆந்திரா ஸ்பெஷல் முட்டை முருங்கைகாய் தக்காளி குழம்பு

ஆந்திரா ஸ்பெஷல் முட்டை முருங்கைகாய் தக்காளி குழம்பு

24

முட்டை முருங்கைகாய் தக்காளி குழம்பு ஆந்திராவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு டிஷ் ஆகும். இத்தகைய முட்டை முருங்கைகாய் குழம்பின் சுவை கூடுதல் அதிகம். இதில், முட்டை, முருங்கைகாய், தக்காளியில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

தேவையான பொருட்கள்

முருங்கைகாய் – 2
வெங்காயம் – 1 கப்
கடுகு – 1/2 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்
கரம் மசாலா -1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி- 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
புளிக்கரைசல் – 3 டீஸ்பூன்
முட்டை-3
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
கருவேப்பிலை – 5
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் -4
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை – 1/2 டீஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் முட்டையைப் போட்ட வேக வைத்து ஆறிய பின் அதன் ஓட்டை எடுத்து விடவும்.

வெங்காயம், முருங்கைகாயை நறுக்கிக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், சீரகம், கடுகு, வெந்தயம், கருவேப்பிலையைச் சேர்க்கவும்.

பிறகு, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

மிதமான தீயில் முருங்கைகாயை இட்டு 3 நிமிடங்கள் நன்கு கிளறி விட்டு வதக்கவும்.

குறைவான தீயில் வேகவைத்த முட்டையை சேர்த்து 2 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

இதையடுத்து, புளிக்கரைசல் சேர்த்து 2 கிளாஸ் தண்ணீர் விட்டு 12 நிமிடங்கள் வேக வைக்கவும். குழம்பில் சாறுடன் முருங்கைகாய் , முட்டை கலந்தவுடன் அடுப்பை அணைத்து அதன் மேலாக கொத்தமல்லி இலை தூவி விடவும்.

முட்டை முருங்கைகாய் தக்காளி குழம்பு ரெடி!

சூடான முட்டை முருங்கைகாய் தக்காளி குழம்பை இட்லி, தோசை, சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.