Home பாலியல் அந்தரங்க பகுதியில் ஏற்படும் அரிப்புக்களைப் போக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்!

அந்தரங்க பகுதியில் ஏற்படும் அரிப்புக்களைப் போக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்!

698

antharankam,antharanka uruppu, uruppu arippu,pennuruppu arippu,aan uruppu arippu, sexual part, sexual desise,அந்தரங்க பகுதி சுகாதாரம் என்பது ஒருவருக்கு மிகவும் இன்றியமையாதது. பெண்களை விட ஆண்கள் தங்களது அந்தரங்க பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை என்று தான் கூற வேண்டும். இதனால் தான் ஆண்கள் எப்போதும் அந்தரங்க உறுப்பில் அரிப்பை அனுபவிக்கின்றனர்.

ஆனால் இப்படி அந்தரங்க உறுப்பில் அரிப்பு ஏற்படும் போது, அதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை எடுத்து வராவிட்டால், பின் அவ்விடத்தில் காயம் ஏற்பட்டு, இரத்தக்கசிவை உண்டாக்கி, தொற்றுக்களை உண்டாக்கும். ஆரம்பத்திலேயே இயற்கை வழிகளின் மூலம் சிகிச்சை மேற்கொண்டால், விரைவில் அரிப்புக்களைப் போக்கலாம்.
சரி, இப்போது அந்தரங்க பகுதியில் ஏற்படும் அரிப்புக்களைப் போக்கும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.

டீ-ட்ரீ ஆயில் இந்த எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது அரிப்புக்களைப் போக்குவதுடன், அவ்விடத்தை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும். அதற்கு சுத்தமான டீ-ட்ரீ ஆயிலை 3 துளிகள் எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். பின் ஒரு பஞ்சுருண்டையைப் பயன்படுத்தி, அந்த எண்ணெயை அந்தரங்க பகுதியில் தடவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், விரைவில் அரிப்புக்கள் அடங்கும்.

கற்றாழை கற்றாழை ஜெல்லை ஒரு ஸ்பூனில் எடுத்து, அதனை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, பின் அந்தரங்க பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் தடவி மசாஜ் செய்து வர அரிப்புக்களை அடங்கிவிடும்.