Home அந்தரங்கம் இன்பமான தாம்பத்திய வாழ்க்கைக்கு கட்டில் உறவின் அவசியம் தெரியுமா?

இன்பமான தாம்பத்திய வாழ்க்கைக்கு கட்டில் உறவின் அவசியம் தெரியுமா?

112

அந்தரங்க உறவு அவசியம்:பாலுறவு என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும். பாலுறவு என்பது அன்பு, பாசம், காதல் ஆகிய உணர்வுகளின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது. ஒரு சந்தோஷ அனுபவமாகவும், முற்றிலும் உடல் இன்பத்தின் ஒரு வழியாகவும் கூடக் கருதப்படுகிறது. செயல்மிகு பாலியல் வாழ்க்கை கொண்டிருப்பதன் நன்மைகள் படுக்கையறையையும் தாண்டி, வாழ்வில் பல்வேறு தளங்களில் விளைவை ஏற்படுத்தும். பாலியல் உறவில் ஈடுபடுவதால் பல நன்மைகள் உள்ளன, அவற்றில் முக்கியமானவற்றை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

1. கலோரிகளை எரிக்க உதவுகிறது
பாலுறவு என்பது ஒரு சிறந்த உடற்பயிற்சி. பாலுறவின்போது பல்வேறு தசைப் பகுதிகளைப் பயன்படுத்துவீர்கள். அதுமட்டுமின்றி பாலுறவின்போது சிறிது நேரம் இதயத் துடிப்பும் வேகமாகிறது. புணர்ச்சியின் நேரம் மற்றும் தீவிரத்தன்மை ஆகியவற்றைப் பொறுத்து, ஃபோர்பிளே செய்யும்போது கணிசமான கலோரிகள் எரிக்கப்படும், ஆகவே இதனை ஒரு சிறந்த உடற்பயிற்சி என்று கருதலாம். ரன்னிங் ஓடும் அளவிற்கு கலோரிகள் எரிக்கப்படாது, ஆனால் உடலுழைப்பின்றி சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதை விட இது அதிக கலோரிகளை எரிக்கும்!

ஓர் ஆய்வில், பாலுறவின்போது எவ்வளவு ஆற்றல் செலவாகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அளவிட்டனர். பாலியல் செயல்பாடுகளின்போது சராசரியாக, ஆண்களுக்கு 101 கலோரிகளும் பெண்களுக்கு 69.1 கலோரிகளும் செலவாகிறது என்று அவர்கள் கண்டறிந்தனர். அவர்கள் பாலுறவை, ஒரு மிதமான உடற்பயிற்சியாகக் கருத முடியும் என்று முடிவைத் தெரிவித்தனர்.

2. மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது
அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவது இதயத்திற்கு நன்மை பயக்கக்கூடும். உடலுறவினால் ஏற்படும் உடல்ரீதியான மற்றும் உணர்வுரீதியான விளைவுகள் இரண்டுமே, இதயத்திற்கு இப்படி நன்மை ஏற்படக் காரணமாக இருக்கலாம். உடலுறவின்போது நடைபெறும் உடல் செயல்பாடுகள், நேரடியாகவே இதயம் மற்றும் இரத்த ஓட்டம் சம்பந்தப்பட்ட நன்மைகளை அளிக்கின்றன. கூடுதலாக, அடிக்கடி பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு, உணர்வளவிலும் ஒரு நெருக்கமும், ஆதரவும், கிடைக்கும். இதனால் மன அழுத்தம் குறைவதுடன் சமூக ஆதரவும் கிடைப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

ஆண்கள் பங்கேற்ற நீண்ட கால ஆய்வுகளில், பாலியல் உறவின் இதய ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் நிரூபணமாயின. 40 முதல் 70 வயதிற்கு உட்பட்ட 1000க்கும் அதிகமான ஆண்கள் ஆண்களின் வயது அதிகரிப்பு ஆய்வு (மாசூச்செட்ஸ் மேல் ஏஜிங் ஸ்டடி) எனப்பட்ட ஆய்வில், பங்கேற்ற ஆண்கள் குறிப்பிட்ட இடைவேளைகளில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். மாதம் ஒரு முறை அல்லது அதற்கும் குறைவாக உடலுறவில் ஈடுபடும் ஆண்களுடன் ஒப்பிடும்போது, வாரம் குறைந்தபட்சம் இரண்டு முறை உடலுறவில் ஈடுபடும் ஆண்களுக்கு, உயிருக்கே ஆபத்தான இதயப் பிரச்சனைகள் வரும் வாய்ப்பு 45% குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.

3. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது
பாலுறவு உங்கள் நோயெதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தக்கூடும்.

பென்சில்வேனியாவில் உள்ள வில்க்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் 112 கல்லூரி மாணவர்களை பின்வரும்படி வகைப்படுத்தினர்: பாலியல் செயல்பாடுகளற்றவர்கள், எப்போதாவது பாலியல் செயல்பாட்டில் ஈடுபடுபவர்கள் (வாரம் ஒரு முறை), அடிக்கடி ஈடுபடுபவர்கள் (வாரத்திற்கு ஒன்று முதல் இரண்டு முறை), மிகவும் அடிக்கடி ஈடுபடுபவர்கள் (வாரத்திற்கு மூன்று முறைக்கு மேல்). இந்த நான்கு குழுவினரின் உடலிலும் உள்ள குறிப்பிட்ட ஆன்டிபாடியின் (நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போரிடுவதற்காக நோயெதிர்ப்பு மண்டலம் உற்பத்தி செய்யும் புரதங்கள்) அளவுகளை ஒப்பிட்டனர்.அடிக்கடி உடலுறவில் ஈடுபட்ட குழுவினருக்கு, இந்த ஆன்டிபாடி அளவு பிற குழுக்களில் இருந்தவர்களை விட 30% அதிகமாக இருந்தது.

ஆன்டிபாடி அளவு அதிகமாக இருந்தால், பாக்டீரியா, வைரஸ் மற்றும் உடலில் நுழையும் பிற கிருமிகளை எதிர்த்துப் போரிட அது உதவிகரமாக இருக்கும்.

4. மன அழுத்தத்தைக் குறைக்கிறது
நல்ல உடலுறவு வாழ்க்கையின் தினசரி மன அழுத்தங்களையும் பரபரப்பையும் குறைக்கவும் உதவக்கூடும். உடலுறவில் ஈடுபடும்போது, ஆக்சிடோசின் போன்ற “நன்றாக இருக்கிறது” என்ற உணர்வை அளிக்கும் ஹார்மோன்களும் மூளையில் உள்ள மகிழ்ச்சி மையத்தைத் தூண்டிச் செயல்படுத்துகின்ற என்டோர்பின்களும் சுரக்கின்றன. இவை ஆசுவாசம், நெருக்கம், மன அமைதி, மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை அளிக்கின்றன. மனக்கலக்கம், மன இறுக்கம் போன்றவற்றைக் குறைக்கவும் தடுக்கவும் உதவுகின்றன.

மேற்கு ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், உடலுறவில் ஈடுபடாத நபர்களுடன் ஒப்பிடுகையில், அடிக்கடி உடலுறவில் ஈடுபடுபவர்கள், மன அழுத்தம் தரும் சூழ்நிலைகளை (பலர் முன்னிலையில் பேசுதல், கடினமான பார்வையாளர்கள் முன்னிலையில் கணக்குகளைத் தீர்த்தல் போன்ற) சிறப்பாக சமாளிக்கின்றனர் என்றும், அது போன்ற செயல்களுக்குப் பிறகு விரைவில் இரத்த அழுத்தம் இயல்பு அளவிற்குத் திரும்புகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

அரிசோனா மாநிலப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், நடுத்தர வயதுள்ள 58 பெண்களை 36 வாரங்கள் ஆய்வு செய்தனர். அதில் முந்தைய தினம், இணையருடன் பாசத்தைக் காட்டுவது மற்றும் உடலுறவில் ஈடுபடுவதற்கும், அடுத்த நாள் எதிர்மறை மனநிலையும் மன அழுத்தமும் குறைவாக இருப்பது மற்றும் நல்ல மனநிலையில் இருப்பதற்கும் தொடர்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டது. சுருக்கமாக, உடலுறவும், உடல் ரீதியான நெருக்கமும், அடுத்த நாள் அவர்கள் நல்ல மனநிலையிலும் மன அழுத்தம் குறைவாகவும் இருக்க உதவியது.

5. நன்றாகத் தூங்க உதவுகிறது
உடலுறவு நல்ல தூக்கத்திற்கு உதவும். உடலுறவின்போது ஆக்சிடோசின் ஹார்மோன் அதிகம் சுரக்கும், கார்டிசோல் எனப்படும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் குறையும்.

ஆண்களுக்கு புணர்ச்சிப்பரவச நிலையின்போது புரோலாக்டின் எனும் ஹார்மோன் சுரக்கும். அது ஆசுவாச உணர்வை அளித்து, தூக்கத்தை வரவழைக்கும் ஹார்மோன் ஆகும். பெண்களுக்கு, உடலுறவின்போது ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரிக்கும், அது REM சுழற்சியை அதிகரிக்கும், இதனால் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.

உடலுறவுக்குப் பிறகு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களின் மொத்த விளைவால், மனம் அமைதியடைவதால் எளிதில் தூக்கம் வருகிறது.