Home இரகசியகேள்வி-பதில் அந்த’ நேரத்தில முகம் எப்படி இருக்கும்?

அந்த’ நேரத்தில முகம் எப்படி இருக்கும்?

564

செக்ஸ் ஃபேஸ், இப்படி ஒரு விஷயம் பரவலாக இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியாது. இதுப் போன்ற பல சமாச்சாரங்கள் நாம் யாரிடம் இருந்து கற்றுக் கொள்ள முடியாது. ஆனால், கூகிள் எனும் இன்டர்நெட் ஆசான். இதை அக்குவேறு ஆணிவேராக நமக்கு கற்பிக்கும்.

செக்ஸ் ஃபேஸ் என்றால் என்ன? செக்ஸ் ஃபேஸ் என்பது உறவில் ஈடுபடும் போது துணையிடம் இருந்து வெளிப்படும் முக பாவனை / ஃபேஸ் ரியாக்ஷன். இது செக்ஸியாக தான் இருக்க வேண்டும் என்று விரும்பும் சிலரும் இருக்கிறார்கள்.

Peoples Confession on Their Sex Face Reaction!
ஆனால், இணையங்களில் தங்கள் செக்ஸ் ஃபேஸ் குறித்து பேசியிருப்பவர்களில் பலரும் தங்கள் அல்லது தங்கள் துணையின் செக்ஸ் ஃபேஸ் கேலியாக அல்லது மோசமானதாக தான் இருக்கிறது என்று தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.

உண்மையில் இதெல்லாம் வேண்டாத வேலை. தாம்பத்தியத்தில் இணையும் போது இதை எல்லாமா கவனித்துக் கொண்டிருப்பீர்கள் என்று வேறு ஒரு சாராரும் தங்கள் பங்குக்கு கருத்து பதிவு செய்துள்ளனர்.

இந்த கலாட்டாக்களுக்கு எல்லாம் மத்தியில் விஸ்பர் எனும் டேட்டிங் தளத்தில் தங்கள் செக்ஸ் ஃபேஸ் அனுபவங்கள் சிலர் பகிர்ந்துக் கொண்ட கருத்துக்களை தான் இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கிறோம்.

மோசம்…

அந்த நேரத்தில் என் துணையின் முக பாவனையானது கொஞ்சம் மோசமாகவும், கொஞ்சம் அலங்கோலமாகவும் தான் இருக்கும். ஆகையால், நான் உறவில் ஈடுபடும் போது என் துணையின் முக பாவனையை பார்ப்பதை தவிர்த்து விட்டேன்.

மறைத்துக் கொள்வேன்…

நான் உறவில் ஈடுபடும் போது எனது முகத்தை மறைத்துக் கொள்வதுண்டு. செக்ஸ் ஃபேஸ் குறித்தும், அந்த ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பது குறித்தும் ஆன்லைனில் படித்ததில் இருந்து, நான் எனது முகத்தை உறவில் ஈடுபடும் போது துணை பார்க்காதது போல மறைத்துக் கொள்வதை என் வழக்கமாக வைத்திருக்கிறேன்.

தெரியாது…

செக்ஸ் ஃபேஸ் பற்றி எனது தோழமைகள் கூறி நான் அறிந்தது உண்டு. சிலருக்கு அது மோசமாகவும், சிலருக்கு அது செக்ஸியாகவும் இருக்கும் என்று அவர்கள் கூறியது உண்டு. ஆனால், நானோ, எனது துணையோ அது குறித்து கவலைப்பட்டதே இல்லை. இதில் என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.

ஜிம்மிலேயே அப்படி…

நான் தினமும் ஜிம் போகும் பழக்கம் கண்ட நபர். அங்கே சிலர் வெயிட் தூக்கும் போதும், புல்அப், புஷ் அப் எடுக்கும் போது வெளிப்படுத்தும் முக பாவனையே கொஞ்சம் கொடூரமானதாக தான் இருக்கும். அப்படி எனில், அவர்களது செக்ஸ் ஃபேஸ் எப்படி இருக்கும் என்று எண்ணி நான் நகைத்துக் கொண்டதுண்டு.

சங்கோஜம்!

எனது துணை ஒருமுறை எனது செக்ஸ் ஃபேஸ் கண்டு நகைத்து கேலி செய்ததில் இருந்து நான் பகல் அல்லது வெளிச்சத்தில் உறவில் ஈடுபட நாட்டம் காண்பிப்பது இல்லை. எத்தனயோ முறை சாரி கேட்டும் கூட, நான் அதற்கு சம்மதிப்பது இல்லை. இருளில் மட்டுமே உறவில் ஈடுபடுகிறோம்.

எதற்கு?

செக்ஸ் ஃபேஸ் பற்றி எனக்கு இணையத்தின் மூலமாக தான் அறிய வந்தது. இதை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டுமா என்ன? ஏற்கனவே சிலர் முக்கியமாக பெண்கள் தாய்மை அடைந்தவுடன் உறவில் ஈடுபட தங்கள் உடல் உருவ மாற்றம் காரணத்தால் தயக்கம் காட்டுவது உண்டு. இதில் இதை பற்றி எல்லாம் பேசவோ, கலந்தாலோசிக்கவே அவசியமே இல்லை.

தூக்கம்!

என் துணை கூறுவார்… எனது செக்ஸ் ஃபேஸ் நான் ஆழமான உறக்கத்தில் இருப்பது போல இருக்கிறது என்று. நல்லவேளையாக தூங்குவது போல தானே இருக்கிறது, அது மோசமானதாக இல்லை என்று எண்ணி மகிழ்ந்து கொள்கிறேன். இதை எல்லாம் யார் தான் கண்டுப்பிடித்தார்கள் என்று தெரியவில்லை.

சங்கடம்…

நான் முன்கூட்டிய செக்ஸ் ஃபேஸ் பற்றி அறிந்திருந்ததால்… என் துணைக்கு தெரியாமல் என் முக பாவனையை எங்கள் படுக்கை அறை கண்ணாடியில் கண்காணித்து வந்தேன். ஒருவேளை நான் இயல்பாக ஈடுபடாமல், என் முகபாவனை எப்படி இருக்கிறது என்று கண்காணித்து கொண்டே இருந்ததால் அப்படி இருந்ததா என்று தெரியவில்லை. வாயுத்தொல்லை வந்தால் எப்படி முக பாவனை இருக்குமோ, அப்படியாக இருந்தது எனது செக்ஸ் ஃபேஸ்.

அடக்க முடியவில்லை…

நான் முன்னதாக இந்த செக்ஸ் ஃபேஸ் குறித்து அறிந்தது இல்லை. ஆனால், நண்பர் மூலமாக இது அறிந்த பிறகு அடுத்த முறை உறவில் ஈடுபடும் போது என் துணையிடம் இதை கவனிக்க வேண்டும் என்று எண்ணினேன். என் துணையின் செக்ஸ் ஃபேஸ் கொஞ்சம் கேலியாக இருந்த காரணத்தால் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தேன்.

நைஸ்!

என் துணையின் செக்ஸ் ஃபேஸ் நன்றாக தான் இருக்கும். சிலர் இணையங்களில் செக்ஸியான செக்ஸ் ஃபேஸ் கொண்ட துணை கிடைத்தால் லக்கி என்று பதிவிடுவதை கண்டிருக்கிறன். அந்த வகையில் பார்த்தால்… நான் நிஜமாகவே லக்கி தான். என் துணையின் செக்ஸ் ஃபேஸ் மிகவும் செக்ஸியானது.

நானே…

எங்கள் படுக்கை அறையில் மூன்று பக்கமும் கண்ணாடி சுவர். ஆனால், இந்த செக்ஸ் ஃபேஸ் நான் ஆரம்பத்தில் அறிந்ததே இல்லை. அறிந்த பிறகு தான் உறவில் ஈடுபடும் போது எனது மற்றும் என் துணையின் செக்ஸ் ஃபேஸ் கவனித்தேன். நாங்கள் இருவருமே நார்மலான செக்ஸ் ஃபேஸ் தான் கொண்டுள்ளோம்.

ஆனால், இப்போதெல்லாம் நான் என் துணையின் செக்ஸ் ஃபேஸ் கவனிக்கிறேன் என்பது அவருக்கு தெரியாது. மேலும், என் துணைக்கு செக்ஸ் ஃபேஸ் என்றால் என்னவென்று தெரியுமா என்றே எனக்கு தெரியாது.

தலையணை!

நான் ஆன்லைனில் செக்ஸ் ஃபேஸ் குறித்து படித்த போது, பெரும்பாலும் அது கேலியாகவும், மோசமாகவும் தான் இருக்கும் என்று அறிந்தேன். அதில் இருந்து என் துணையுடன் உறவில் ஈடுபடும் போது என் முகத்தை மறைத்துக் கொள்வேன். பெரும்பாலும் நாங்கள் இரவில் மட்டும் தான் உறவில் ஈடுபடுகிறோம் என்பதால் கவலை இல்லை. ஆயினும், என் துணை என் ரியாக்ஷனை கண்டுவிடுவாரோ என்று முகத்தை மூடிக் கொள்கிறேன்.

கண்டுக்காதிங்க!

இணையத்தில் இப்படியான பல விஷயங்கள் கூறுவார்கள். ஆனால், தாம்பத்தியத்திற்கு அதெல்லாம் தேவையே இல்லை. நான் என் துணை இருவருமே செக்ஸ் ஃபேஸ் குறித்து நன்கு அறிவோம். ஆனாலும், நாங்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வது இல்லை.. எதில் எல்லாம் கேலி, கிண்டல், செக்ஸி காண்பது என்று இவர்களுக்கு தெரிவதே இல்லை.

அச்சம்!

செக்ஸ் ஃபேஸ் பற்றி அறிந்ததில் இருந்து எனக்குள் ஒரு அச்சம் இருக்கிறது. எங்கே என் செக்ஸ் ஃபேஸ் என் துணைக்கு பிடிக்காமல் போய்விடுமோ என்று. அதனால், குளியலறை கண்ணாடியில் எனது செக்ஸ் ஃபேஸ் எப்படி இருக்கும் என்று நானே ரியாக்ட் செய்து பார்த்துக் கொள்வேன். அது நிஜமாகவே அப்படி தான் இருக்குமா? அல்லது சூழல் குறித்து மாறுமா என்பது எல்லாம் எனக்கு தெரியவில்லை.

நானுமா?

பார்ன் வீடியோக்கள் அல்லது என் தோழர்கள் மூலம் செக்ஸ் ஃபேஸ் மோசமானதாக இருக்குமா என்பது குறித்து பேசும் போதெல்லாம், ஒருவேளை நானும் அப்படியான செக்ஸ் ஃபேஸ் தான் கொண்டிருப்பேனா என்று சந்தேகம் வரும். சரி! இருட்டில் ஈடுபடும் போது இதை எல்லாமா கவனிப்பார்கள். அல்லது பகலிலும் உறவில் ஈடுபடுவார்களா? என்று சந்தேகித்துக் கொண்டே அது பற்றி மறந்துவிடுவேன்.