Home ஆண்கள் ஆண்குறி சிறியதாக இருக்கிறது என்ற கவலையா?…அப்போ இத மொதல்ல நீங்கதான் படிக்கணும்…

ஆண்குறி சிறியதாக இருக்கிறது என்ற கவலையா?…அப்போ இத மொதல்ல நீங்கதான் படிக்கணும்…

46

ஆண் பிறப்புறுப்பின் அளவு பற்றிக் கவலைப்படுவது தேவையில்லாதது. எனவே, மற்ற ஆண்களின் பிறப்புறுப்புடன் ஒப்பிட்டு தனக்கு மட்டும் சிறிதாக உள்ளது, தன்னை மட்டும் கடவுள் ஏமாற்றிவிட்டான் என்று கவலைப்படுவதால் எந்தப் பலனும் இல்லை.

சிறிய உறுப்பு இருந்தால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாது என்று ஆண்களிடம் இருக்கும் பயத்தைப் போலி டாக்டர்களும், மருந்து தயாரிப்பாளர்களும் மிகவும் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

சிறிய உறுப்பு கொண்டவர்களின் பயத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் பணம் சம்பாதிக்கும் விஷயமாக மாற்றிக்கொள்வதற்கே, ‘ஆண் உறுப்பைப் பெரிதாக்க முடியும்’என்ற ரீதியில் விளம்பரம் செய்கிறார்கள்.

‘சிறு வயதில் செய்த காம லீலைகள் காரணமாக ஆணுறுப்பு சுருங்கி இருக்கிறது. மருந்து சாப்பிடவில்லை என்றால் மேலும் மேலும் சுருங்கிவிடும்’ என்று அதிகம் பயம் காட்டி பணம் சம்பாதிக்கிறார்கள்.

ஆனால், உண்மையில் 18 வயதுக்கு மேல் உடல் உறுப்புகளின் வளர்ச்சி பெரும்பாலும் நின்றுவிடுகிறது.

வளர்ந்த எந்த உறுப்பும் எக்காரணம் கொண்டும் சிறிதாகாது என்பதுதான் மருத்துவ நிதர்சனம்.

எந்த மருந்து மாத்திரைகள் மூலமும், உடற்பயிற்சி மூலமும் ஆண் உறுப்பை வளர்க்க முடியாது என்பதும் விஞ்ஞான ரீதியான உண்மை.

பொதுவாக, இதுபோன்ற பயங்களும், தாழ்வுமனப்பான்மையும் உள்ள ஆண்களுக்கு நம்பிக்கையை விதைக்க வேண்டியது முக்கியம்.

இந்த விஷயத்தில் பெண்களுக்கும் முழுமையான புரிதல் தேவை.

அப்போதுதான், ஆண்களின் உறுப்பைப் பற்றித் தவறான எண்ணங்கள் இருக்காது.

தன் உடலைக் காதலிக்க ஆண்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

என்ன இருக்கிறது, எந்த அளவில் இருக்கிறது என்பதல்ல, அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதுதான் முக்கியம்.

நம்பிக்கையும், தன்னுடைய இணை மீது காதலும் விருப்பமும் இருந்தால்போதும், உச்சகட்ட இன்பத்தை எளிதில் அடைய முடியும். ஒரு சில ஆண்களுக்குப் பிறப்பிலேயே ஆணுறுப்பு நீளம் மிகக் குறைவாகவும், விதைப்பைகள் இல்லாமலும் இருக்கக்கூடும்.

இந்த நிலையைச் சரிசெய்ய போதுமான சிகிச்சை முறை இதுவரை உருவாகவில்லை.

‘ஜி ஸ்பாட்’ ஆண்களுக்கு உண்டா? உடலில் இன்பம் தரக்கூடிய அனைத்துப் பகுதிகளுமே ‘ஜி ஸ்பாட்’தான்…