Home ஜல்சா மகன் முன்னிலையில் நிர்வாணமாகவே நடமாடும் ஹாலிவுட் நடிகை! – ஏன் தெரியுமா?

மகன் முன்னிலையில் நிர்வாணமாகவே நடமாடும் ஹாலிவுட் நடிகை! – ஏன் தெரியுமா?

40

தன் மகன் முன்னிலையில் எப்போதும் நிர்வாணமாகவே இருப்பேன் என்று கூறியுள்ள ஹாலிவுட் நடிகை ஆம்பர் ரோஸ் அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

அயல்நாடுகளில் குழந்தை வளர்ப்பு என்பது நாம் கடைபிடிக்கும் முறையைவிட முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதை பல்வேறு செய்திகள் மூலம் கண்டறிகிறோம்.

அந்த வகையில் ஹாலிவுட் பிரபலங்கள் பலர் கர்ப்பமான காலத்திலிருந்தே தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளுக்கான திட்டங்களையும், தேவைகளையும் செய்யத் தொடங்குகின்றனர்.

பலர் தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை பகிரங்கமாக அறிவித்து, பின்னர் அக்குழந்தைக்கு வேண்டியவற்றை பிறப்புக்கு முன்பிருந்து ஏற்பாடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில், ஹாலிவுட் ஹாட் மாடல், நடிகையான ஆம்பர் ரோஸ், தனது 5 வயது மகன் முன்னிலையில் எப்போது நிர்வாணமாகவே இருப்பேன் என்று அதிர்ச்சி ஏற்படுத்தும் கருத்தை தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் கூறியிருக்கும் காரணம் விநோதமாகவும் அமைந்திருந்தது.

முற்றும் திறந்து நிர்வாண கோலத்தில் இருப்பது குறித்து ஆம்பர் ரோஸ் கூறியதாவது,

மகன் செபாஸ்டின் ஆண் பெண்ணியவாதியாக வளர வேண்டும் என விரும்பினேன். எனவே அவன் முன்னிலையில் நான் நிர்வாணமாகவே இருந்து வருகிறேன். வீட்டில் இருக்கும்போது நிர்வாணமாகவே அங்கும் இங்கும் நடப்பேன்.

அவன் பெண்களின் உடல் உறுப்புகளை பற்றி நன்கு தெரிந்துகொண்டால், இளம் வயதில் பெண்களுக்கு உரிய மதிப்பையும், பெண்களுடன் இருப்பதை செளகர்யத்தையும் உணருவான் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.