Home இரகசியகேள்வி-பதில் எனக்கு பிடித்த நபர்கள் பாலியல் உணர்வுகளோடு மனதில் வந்து போகிறது

எனக்கு பிடித்த நபர்கள் பாலியல் உணர்வுகளோடு மனதில் வந்து போகிறது

292

பாலியல் கேள்வி பதில்:கேள்வி: அடிக்கடி எனக்கு தெரிந்த நபர்களின் முகம், பாலியல் உணர்வுகளோடு மனதில் வந்து போகிறது. அது தவறு என்று தெரிந்தாலும், எண்ணங்களை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. குற்ற உணர்ச்சி என்னை உறுத்துகிறது. என்ன செய்வது என சொல்லுங்கள் பிரெண்ட்.

பதில் : நியாயமான உணர்வுகளுக்கு என்றும் மதிப்பு உண்டு .உங்கள் எண்ணம் தவறு என்று தெரிந்த உடனே ,குற்ற உணர்ச்சியை முன்வைத்து கேள்வி எழுப்புதல் பாராட்டுக்கு உரிய செயல். தெரிந்தவர்கள் என்று சொல்லின் உட்பொருள் என்ன ,அந்த நபர்கள் உங்களுக்கு எப்படிப்பட்டவர்கள் என்று விளக்க முடியாத சூழலில் நீங்கள் தற்போது இருக்கவே வாய்ப்பு அதிகம் என நினைக்கிறேன் .

பொதுவாக இவ்வாறான சூழல்களில் பரிச்சயமில்லாத முகங்கள் புலப்படலாம் அவை நம்மை கவரலாம் .ஓர் அளவோடு நின்றுவிட்டால் எதிலும் சிக்கல் இல்லை . ஆனால் தெரிந்தவர்கள் என சொல்லும் பொழுது அதன் பின்புலத்தில் உள்ள விஷயம் மிக ஆபத்தானதாக மாறலாம்.

இன்னொரு விஷயமாக ,உங்களுக்கு யார் மீதாவது ஈர்ப்போ ,காதலோ இருக்கிறதா? இல்லையா? என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை .ஒரு வேளை அப்படி ஏதேனும் இருக்குமானால் நேரடியாக அந்த நபரிடம் வெளிப்படுத்தி விடுங்கள் .அப்படி செய்யாமல் இருப்பதால் கூட இப்படிப்பட்ட எண்ணங்கள் வரலாம் .

எண்ணம் எண்ணமாக மட்டுமே இருக்கும்போதே கேள்வி எழுந்தது ஒரு நல்ல அறிகுறி .இதனை மறுக்கும் அல்லது மறுக்கும் மனதில் எண்ணமே நிலையாகி ,பின் நோயாகி ,பின் ஆளுமையையே சிதைத்து போட்ட கதைகள் ஆயிரம் ஆயிரம் உண்டு .உறுத்தலை தவிர்த்திட தற்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் பணிகளில் கவனம் செலுத்தவும் . கூடுதலாக , வாசிப்பு பழக்கமும் இசையும் நிற்கும் கருவிகளாக இருக்கட்டும் .

——————————————
கேள்வி : நான் ஒரு கல்லூரி மாணவி. வயது 22. நான் பூப்பெய்தி ஆறு வருடங்கள் ஆகிரது. எனக்குப் பிறப்புறுப்பு பகுதியில் ரோம வளர்ச்சியே இல்லை. இதைப்பற்றி பிறரிடம் கேட்கவும் கூச்சமாக இருக்கிறது. இதனால் பிற்காலத்தில் ஏதேனும் பிரச்சனைகள் வருமா?

பதில் : பிறப்புறுப்பு என்பது மிக மெல்லிய செல்களால் ஆனது. எனவே அங்கே அடிபடாமலிருப்பதற்காகப் பாதுகாப்புக் கவசமே ரோம வளர்ச்சி. பிறப்புறுப்பு என்றில்லை. உடலின் வேறு சில பகுதிகளில் ரோம வளர்ச்சி காணப்படுவதும் இதற்காகவே. நீங்கள் வயதுக்கு வராமலிருந்து, முடி வளர்ச்சியும் இல்லை என்றால்தான் கவலைப்பட வேண்டும். வயதுக்கு வந்துவிட்டதால் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். ஒருசிலருக்கு திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகும்கூட ரோம வளர்ச்சி வரலாம். எனவே இதற்கும் உங்கள் எதிர்கால தாம்பத்ய வாழ்க்கைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. எல்லா பெண்களைப்போல நீங்களும் திருமணத்திற்குத் தயாராகலாம்.

=====================================

கேள்வி: நான் இல்லத்தரசி. என் கணவர் வேலைக்கு செல்பவர். என் மகளை இந்த வருடம் கல்லூரி படிப்பிற்காக விடுதியில் சேர்த்த பிறகு வீட்டிற்குள் இருக்கவே எனக்கு பிடிக்கவில்லை. எனக்கென்று யாருமே இல்லாதது போல உணர்கிறேன். இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்க?

பதில்: இது மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டு கையாளப்பட வேண்டிய ஒரு சூழல். அதிலும் ஆசிய கண்டத்தின் பெரும்பாலான நாடுகளில் இந்த சூழல் பரவலாக உள்ளது. இதில் இந்தியா போன்ற ஒரு மாபெரும் தேசமும் விதிவிலக்கு அல்ல. தற்போதைய தலைமுறையை சேர்ந்த பல பெண்கள் இந்த சூழலே இல்லாமல் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தாலும், முந்தைய தலைமுறை பெண்களிடையே இந்த சிக்கல் காணப்படுவது நிதர்சனம்.

ஒரு தீர்வு சொல்லட்டா #Friends
அப்படி ஒரு நிலையில் இருப்பவர்களை வழி நடத்தி புதிய வாழ்க்கை முறைக்கு தயார்படுத்துவது ஒரு முக்கிய பணி என்று கருதுகிறேன். அந்த வகையில் தீர்வு சொல்லக்கூடிய என்னால் தீர்வு தேடி வந்த உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டால் மகிழ்வேன். நீங்கள் உணரும் தனிமைக்கு நேர் எதிர் சூழல் உலகில் உண்டு. நீங்கள் எந்த பின்னணியை சேர்ந்தவர் என்பதை தெளிவுபடுத்தவில்லை.

நீங்கள் நகர்ப்புற பின்னணியை சேர்ந்தவராக இருந்தால், புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் இருந்தால் மொழி கற்றலை முன்னெடுக்கலாம். இந்திய மொழிகள் உட்பட உலகின் முக்கிய மொழிகள் பலவற்றை கற்றுத் தரும் மையங்கள் உண்டு. ஏதேனும் ஒரு மொழியை கற்றுத் தரும் வகுப்பில் சேர்வதன் மூலம், அறிவுத் தேடலுக்கு உணவையும், தனிமை உணர்வுக்கு மருந்தையும் அடையலாம். பிற விஷயங்களையும் இந்த முறையில் கற்கலாம் என்றாலும், மொழி கற்றல் என்று வந்துவிட்டால் உரையாடல் என்னும் விஷயம் பாடம் தொடர்பாக நிகழ்ந்தே ஆக வேண்டும்.

அதன் மூலம் நட்புக்களும், ஆசிரியர் மாணவர் என்ற வகையில் ஏற்படும் பந்தமும், வாழ்க்கையை அதுவரை அணுகாத கோணத்தில் அணுக வைக்கும். ஒருவேளை கிராமப்புற பின்னணியில் இருப்பவர் என்றால் ஏதேனும் கைத்தொழில் கற்க முனையலாம். இதிலும் மேற்சொன்ன சூழல் பொருந்தும். இரண்டில் எந்த புகுதியை சேர்ந்தவர் எனினும் தயவு செய்து தொலைக்காட்சி மற்றும் இணைய பழக்கத்தை குறைக்கவும். முடிந்தால் மொத்தமாகவே தவிர்க்கவும். வாழ்த்துக்கள். வெல்வோம்!

—————————————–

Previous articleமனைவியை திருப்தி படுத்த தவறிய ஆண்களுக்கு என்ன நடக்கும்? குட்டி கதை
Next articleதமிழ் பெண்களின் முதல் உறவு எப்படி இருக்கும் தெரியுமா? இது ஹனிமூன்