Home ஆரோக்கியம் பொது மருத்துவம் உங்களுக்கு அடிக்கடி வரும் தலைவலிக்கு இதுதான் காரணம்

உங்களுக்கு அடிக்கடி வரும் தலைவலிக்கு இதுதான் காரணம்

167

பொது மருத்துவம்:சில நேரங்களில் கணனி முன் வேலை செய்து கொண்டிருக்கும் போதோ அல்லது எதைப் பற்றியாவது ஆழமாக சிந்திக்கும் போது தலைவலி ஏற்படுகிறதா? அந் நேரங்களில் 1000 யானை நடப்பது போல வலி ஏற்படும்.

இவ்வாறு அடிக்கடி சிலருக்கு தலை வலி ஏற்படுகின்றது. இதற்கு காரணம் தான் என்ன?

1. அதிகமாக கோப்பி குடித்தல்:
சரியான அளவில் கோப்பியைக் குடிப்பதனால் உடலிற்கு சக்தி கிடைக்கும். ஆனால் அளவுக்கதிகமாக குடிப்பதனால் மனச் சோர்வை ஏற்படுத்துவதுடன் தலைவலியையும் ஏற்படுத்துகின்றது.

2. அதிகமாக தூங்குதல்.
அளவுக்கதிகமாக தூங்குவதில் நேரத்தை செலவிடும் போது திடீரென எழுந்து கொள்ளும் போது தலைவலி ஏற்படச் செய்கின்றது.

3. வேலை செய்யும் இடத்தை வெறுத்தல்:
அதிகமான நேரத்தை வேலைத் தளங்களிலேயே செலவிடுகிறோம். அந்த வேலைத் தளங்களில் அதிகளவான மன அழுத்தமும், பிரச்சினைகளும் ஏற்பட்டால் தலைவலி வருவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

4. தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகள்:
வீட்டில் அமைதியும் சந்தோக்ஷமான சூழ்நிலையும் இருப்பது ஒவ்வொருவருக்கும் அவசியமானது. நெருக்கமானவர்களுடன் சண்டை பிடிப்பது, அதிகளவு சக்தியை விரயமாக்குவதுடன், தலைவலியையும் ஏற்படுத்தும்.

5. கணனியின் திரை அதிக பிரகாசமாக இருத்தல்:
அதிக பிராகாசம் உள்ள கணனித் திரையை நீண்ட நேரம் பயன்படுத்துவதனால் கண்களிற்கு பாதிப்புக்கள் ஏற்பட்டு இதனால் தலைவலி ஏற்படும். எப்பொதும் கணனித் திரையின் பிரகாசத்தை குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.

6. சரியான நிலைப்பாடு இல்லாமை:
கழுத்து, தோற்பட்டை, முள்ளந்தண்டு பகுதிகள் அவற்றின் தசைகள் சரியான நிலையில் வைத்திருக்கவில்லை என்றால் அதனால் ஏற்படும் அழுத்தம் வலி காரணமாக தலைவலி ஏற்படுகின்றது.

7. அதிகமான வாசனைத் திரவியங்களை முகர்தல்:
அதிக வாசனை உள்ள இரசாயண திரவியங்களை அதிகளவில் பயன்படுத்துவதனால் அதன் வாசனை சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தும்.
8. தலையை இறுக்கிக் கட்டுதல்:
தலை முடியைக் கட்டும் போது பாண்டாக இருந்தாலும் சரி, கிளிப்பாக இருந்தாலும் சரி அதிகளவான அழுத்தத்தை தலைக்கு கொடுப்பதனால் தலைவலி ஏற்படுகின்றது.

9. தொலைபேசியை எப்போதும் பயன்படுத்தல்:
தொலைபேசியை நீண்ட நேரத்திற்கு குனிந்து பார்த்துக் கொண்வதனால் அதிகளவான அழுத்தத்தை கழுத்தின் அடிப்பகுதிக்கு கொடுக்கின்றோம். இதனால் தலைவலி ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.

10. அடிக்கடி அதிக சூரிய வெளிச்சத்திற்குள் செல்லுதல்:
சூரிய வெளிச்சம் அளவுக்கதிகமாக கிடைப்பதனால் உடல் வறட்சி ஏற்படுவதுடன், அந்த வெப்பத்தினாலும் அடிக்கடி தலை வலி ஏற்படுகின்றது.