Home ஜல்சா எல்லைமீறிய பாலியல் விளையாட்டுகளால் மரணமடையும் ஜேர்மானியர்கள்

எல்லைமீறிய பாலியல் விளையாட்டுகளால் மரணமடையும் ஜேர்மானியர்கள்

26

ஜேர்மனியில் எல்லை மீறிய பாலியல் விளையாட்டுகளால் ஆண்டுக்கு 100 ஆண்கள் வரை மரணமடைவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் பெரும்பாலும் சுவாசிக்க ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிகழ்ந்துள்ளது எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜேர்மனியில் பாலியல் உறவின்போது வயது உள்ளிட்ட காரணங்களால் ஒன்று அல்லது 2 மரணங்கள் ஆண்டுக்கு நடப்பதுண்டு, ஆனால் எல்லை மீறிய பாலியல் விளையாட்டுகளால் ஆண்டு தோறும் 80-ல் இருந்து 100 பேர் வரையில் இறப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இருப்பினும் இதுபோன்ற உயிரிழப்புகள் புகார் செய்யப்படாத எண்ணிக்கை பல மடங்கு அதிகம் எனவும் அதிகாரிகள் பகீர் தகவலை வெளியிட்டுள்ளனர்.

இத்தகைய உயிரிழப்புகளில் பெரும்பாலும் சிக்குவது ஆண்களே என்றபோதும் பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு என தெரிய வந்துள்ளது. 1983 முதல் 2003 வரை வடக்கு ஜேர்மனியில் இதுபோன்ற உயிரிழப்புகள் 40 எண்ணிகையில் பதிவாகியுள்ளது.

இதில் அனைவரும் ஆண்கள் எனவும், 13 முதல் 79 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி இதுபோன்ற பாலியல் விளையாட்டால் உயிரிழப்பு பிரபலங்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

கடந்த 1997 ஆம் ஆண்டு பிரபல பாடகர் Michael Hutchence தமது கழுத்தில் பெல்ட்டால் பிணைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதேபோன்று 2009 ஆம் ஆண்டு பிரபல அமெரிக்க நடிகர் David Carradine கழுத்து நெரிபட்ட நிலையில் ஹொட்டல் கழிவறையில் இருந்து சடலமாக மீட்கபட்டார்.

ஆனால் இந்த வழக்குகள் அனைத்தும் எல்லை மீறிய பாலியல் விளையாட்டுகளால் நேர்ந்தது என வெளி உலகிற்கு தெரியப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.