Home பெண்கள் அழகு குறிப்பு அடர்த்தியான கூந்தலைப் பெற ஆனியன் ஜூஸை எப்படி பயன்படுத்த வேண்டும்?

அடர்த்தியான கூந்தலைப் பெற ஆனியன் ஜூஸை எப்படி பயன்படுத்த வேண்டும்?

19

captureபெண்கள் தங்கள் சருமத்தையும் தலைமுடியையும் பராமரிப்பதற்குள் ஒரு வழியாகிவிடுகிறார்கள். விளம்பரங்களில் வரும் அத்தனை ஷாம்புகளையும் எண்ணெயையும் போட்டு, அவர்களும் சோர்வடைந்து, முடி உதிர்வதும் அதிகமாகி, என்ன செய்வதென்றே தெரியாமல் பார்லரில் பணத்தை இறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நம்முடைய வீட்டு கிச்சனில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே நம்முடைய முடி உதிர்தலைக் கட்டுப்படுத்துவதோடு, நீண்டு செழிக்க வளரச் செய்யவும் முடியும்.முடி உதிர்தலைத் தடுப்பதில் வெங்காயம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

வெங்காய ஜூஸ்

வெங்காயத்தில் அதிக அளவில் சல்பர் இருக்கிறது. இது முடியின் வளர்ச்சியைத் தூண்டும் கொலாஜனை அதிகரிக்கச் செய்கிறது. வெங்காயச் சாறினை முடியின் வேர்க்கால்களில் தேய்த்து வர முடி உதிர்வது விரைவில் நின்றுவிடும்.

வெங்காயத்தை மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொண்டு, அதை அரைத்து ஜூஸை பிழிந்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஜூஸை தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படியாக தேய்த்து மசாஜ் செய்து 15 நிமிடங்கள் வரை ஊற விட வேண்டும். சாறு முழுவதும் வேர்க்கால்களுக்குள் இறங்கியவுடன் முடி உலர்ந்தது போல் இருக்கும். அப்போது நல்ல ஷாம்பு கொண்டு தலைமுடியை அலச வேண்டும்.

தலைமுடியை அலசியவுடன் கடமை முடிந்தது என்றிருக்காமல் உடனடியாக தலைமுடியை உலர வைக்க வேண்டும்.
இதை வாரத்துக்கு இரண்டு முறை முயற்சி செய்தாலே போதும். முடி உதிர்வது குறைந்து, அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.