Home சூடான செய்திகள் எய்ட்ஸ் வாராமல் தடுக்க பின்வரும் தகவல்களை நினைவில் வைக்க

எய்ட்ஸ் வாராமல் தடுக்க பின்வரும் தகவல்களை நினைவில் வைக்க

189

சூடான செய்திகள்:உலக எய்ட்ஸ் தினம். உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பயபடக்கூடிய ஒரு நோயென்றால் அது எய்ட்ஸ்தான். 1981 ஆம் ஆண்டும் சிம்பன்சி வகை குரங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவிய இந்த வைரஸ் இன்று உலகத்தையே அசுறுத்தக்கூடிய ஒரு அரக்கனாக மாறி நிற்கிறது. எய்ட்ஸ் நோயை கண்டு மனிதர்கள் அதிகம் பயப்பட காரணம் அதற்கு இன்னும் மருந்து கண்டறியப்படவில்லை என்பதுதான். உலகம் முழுவதும் கிட்டதட்ட நான்கு கோடி மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை உலகில் மூன்று கோடி மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின் படி கிட்டத்தட்ட 42 இலட்சம் குழந்தைகள் உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 74 சதவீதத்தினர் ஆண்கள் எனவும் 26 சதவீதத்தினர் பெண்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வளவு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் எய்ட்ஸ் நோய் நம்மை தாக்காமல் இருக்க வேண்டுமெனில் அதற்கு நமது சுயஒழுக்கமும், ஆரோக்கியமுமே முக்கியமானவை. எய்ட்ஸ் நோயிலிருந்து தப்பிக்க நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமானவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிக மற்றும் குறைந்த ஆபத்துக்களை புரிந்துகொள்ள வேண்டும் எய்ட்ஸ் தடுப்பு என்று வரும்போது அனைவருக்கும் இருக்கும் ஒரே பயம் ” எனக்கு எதிலிருந்து எல்லாம் எய்ட்ஸ் தாக்கும் அபாயம் உள்ளது ? என்பதுதான் “. இதற்கு முக்கிய காரணம் எய்ட்ஸ் பரவும் விதம் பட்க்ரி நம்மி சுற்றி திரியும் கட்டுக்கதைகள்தான். இதனை குறைவாக மதிப்பிடுவது எவ்வளவு தவறோ அதேஅளவு அதனை மிகைப்படுத்துவதும் தவறானது. இது பரவும் முறைகளை சரியாக தெரிந்துகொண்டு அதன்பின் உங்களுடைய எந்த பழக்கம் மூலம் உங்களை எய்ட்ஸ் தாக்க வாய்ப்புள்ளது என்பதை அறிந்துகொண்டு அந்த பழக்கத்தை தவிர்க்கவேண்டும்.

PrEP மருந்தை எடுத்துக்கொள்ளுங்கள் Pre-exposure prophylaxis (PrEP) அதாவது முன்- வெளிப்பாடு தடுப்பு மருந்தை தினமும் எடுத்துக்கொள்வது உங்களை வைரஸ் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும். நிருபிக்கப்பட்ட இந்த முறையை பின்பற்றுவது எய்ட்ஸ் நோயிலிருந்து சிறந்த பாதுகாப்பை அளிக்கும். இதனை பயன்படுத்தும் முன் மருத்துவருடன் ஆலோசிப்பது பக்கவிளைவுகளை தடுக்கும்.

பரவுவதை தடுக்கும் தெரபி Treatment as Prevention (TasP) என்பது எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் உடலில் வைரஸின் தாக்கத்தை குறைத்து அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்கும் முறையாகும். இந்த சிகிச்சை மூலம் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவுவது 96 சதவீதம் தடுக்கப்படுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

பொதுவான காண்டம் தவறுகளை தவிர்க்கவும் காண்டம் பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. சொல்லப்போனால் எய்ட்ஸ் பரவுவதை தடுக்க வெற்றிகரமான வழி என்றால் அது காண்டம் பயன்படுத்துவதுதான். ஆனால் இதில் முக்கியமான தவறு என்னவென்றால் காண்டத்தால் ஏற்படுவதல்ல, காண்டதின் சீரற்ற அல்லது தவறான பயன்பாட்டால்தான். குறிப்பாக பாதுகாப்பான உறவு என்றால் நீங்கள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒவ்வொரு முறையும் புது காண்டம் பயன்படுத்தவேண்டும்.

கவனமாக கருத்தரிப்பது எவ்வாறு என்று அறிய வேண்டும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தம்பதிகள் செரோடிஸ்கார்டன்ட் என்று அழைக்கப்படுவார்கள். அதாவது தம்பதிகளில் ஒருவருக்கு எய்ட்ஸ் இருக்கும், ஒருவருக்கு இருக்காது. ஆன்டிரெட்ரோவைரல் தெரபி மூலம் 90 சதவீதம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்படாதவர்ளுக்கு பரப்பாமல் கருத்தரிக்க வைக்க முடியும். இந்த சிகிச்சைக்கு முன் மருத்துவரை ஆலோசிக்க வேண்டியது அவசியம்.

தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவுவதை தடுப்பது Prevention of mother-to-child transmission (pMTCT) முறையானது குழந்தைக்கு கர்ப்பகாலத்தின் அனைத்து காலகட்டத்திலும் அம்மாவிடம் இருந்து எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்கும். பிரசவத்திற்கு பின்னும் பாதுகாக்கும். இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் ஆரம்பகட்டத்திலே கண்டறிவதுதான். சரியான பராமரிப்பு மற்றும் அம்மா மற்றும் குழந்தை இருவருக்குமே ஆன்டிரெட்ரோவைரல் தெரபி வழங்குவதன் மூலம் இதன் வெற்றிசதவீதம் 98 சதவீதமாக உயர்ந்துள்ளது.