Home இரகசியகேள்வி-பதில் உடலுறவுவின் பின் உறுப்புக்களை சுத்தம் செய்யனுமா??

உடலுறவுவின் பின் உறுப்புக்களை சுத்தம் செய்யனுமா??

67

554959_423370191082939_251882866_n-copyஉடலுறவு முடிந்தவுடன் பெண், தங்கள் உறுப்புகளை சுத்தம் செய்ய சென்றுவிடலாமா?
அல்லது
15 முதல் 30 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்யலாமா?
உடனே பெண் எழுந்து சென்றால் விந்தணுக்கள் பெண் உறுப்பிலிறுந்து வெளியே வந்துவிடுமே?
ஆதலால், கர்ப்பம்தரிக்க தடைபடுமே?
பதில்
இது நிறையப் பேருக்கு ஏற்படும் சந்தேகமே.உண்மையில் விந்தணுக்கள் அசைவின் மூலம்(நீந்துவதன் மூலம்) பெண்ணின் முட்டையைச்
சென்றடையும். அதனால் உடலுறவின் பின் உடனடியாக எழுந்து போனாலும் கர்ப்பம் தரிக்கும் சந்தர்ப்பம் உள்ளது.
இருந்தாலும் கர்ப்பத்திற்காக எதிர்பார்த்திருக்கும் பெண்கள் உடலுறவின் பின் இருபது நிமிடங்களுக்கு படுக்கையிலே இருப்பது
நல்லது என்று சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் இடுப்பின் கீழே ஒரு தலையனைய வைத்து உங்கள் இடுப்புப் பகுதியை உயர்த்தி
வைப்பதும் கருத்தரிப்பதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
அதேநேரம் கால்களை ஒன்றன்மேல் ஒன்று போட்டவாறு படுத்திருப்பதும் உகந்தது.

2. குழந்தைக்கு ஒரு நாளைக்கு எத்தனை தடவை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?
பிள்ளை பசியெடுத்து அழுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொடுங்கள். எத்தனை தடவை கொடுக்க வேண்டும் என்று வரையறை இல்லை. குழந்தைகளின் இரப்பை மிகவும் சிறியது என்பதால் அதிகமான உணவை ஒரே தடவியில் ஏற்று சமிபாடு அடையச் செய்ய முடியாது. அதனால் அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொடுக்க வேண்டும்.

3. எவ்வளவு காலத்திற்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?
இதற்கும் வரையறை இல்லை .எத்தனை வருடத்திற்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
எந்தப்பாதிப்பும் ஏற்படாது. ஆனாலும் முதல் 5-6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆறு மாத முடிவில் தாய்ப்பாளினால் தனியே குழந்தைக்குரிய போசாக்கினை வழங்க முடியாது போவதால் மற்றைய உணவுகளை ஆரம்பிக்க வேண்டும்.
4. தாய்ப்பால் கொடுக்கும் பெண் கர்ப்பம் தரித்தால் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாமா?
நிச்சயமாக .அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

5. தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கச் செய்வது எப்படி?
தொடர்ச்சியாக தாய்ப்பால் கொடுக்கவேண்டும். குழந்தை மார்பகத்தை உறிஞ்சும் போதே தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.அதுதவிர தாய் போதியளவு நீராகாரம், பழ ரசம் போன்றவை அருந்த வேண்டும்.
=——————————————————————————————-
பாதுகாப்பற்ற‍ உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள்

பால்வினை நோய்கள் உடல் உறவின் மூலம் தான் மிகமுக்கியமாக வருகின்றன. வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் ஆகியவையே இவற்றிற்குக் காரணமாகும். இவ்வகையில் குறைந்தபட்சம் 25 வேறுபட்ட பால்வினை நோய்கள் உள்ளன.

இவை எல்லாமே 5 விதமான அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன. பிறப்புறுப்புப்புண் இந்த வகைப் புண்கள் ஒன்றோ பலவோ இருக்கும். இவை வலியுடனோ வலி இல்லாமலோ இருக்கும். இவை சாதாரணக் கட்டியாகவோ நீருடன் கூடிய சிறுசிறு கொப்புளங்களாகவோ காணப்படும். இவை ஆண், பெண் இருவருக்கும் வரும்.

பிறப்புறுப்பிலிருந்து வெளிவரும் அசாதாரணப்போக்கும் ஒரு மனிதனின் சிறுநீர் துவாரத்தின் வழி சீழ் வெளிப்படுமானால் அது நிச்சயமாகப் பால்வினை நோயின் அறிகுறியாகும். இது அடிக்கடி சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலுடனோ வலியுடனோ வெளிப்படும்.

பெண்களுக்குத் துர்நாற்றத்தோடு ஒழுக்கு வெளிப்பட்டு துணிகள் கறை படியுமானால் அது பால்வினை நோயின் அறிகுறியாகும். கவட்டியில் நெறிகட்டுதல் ஆண், பெண் இரு பாலருக்கும் கவட்டியில் அதாவது இடு‌ப்பு‌ம் காலு‌ம் இணையு‌ம் பகு‌தி‌யில் நெறி கட்டுதல். இது மிகவும் வலியினை ஏற்படுத்தும்.

ஆ‌ண்களு‌க்கு விதைப்பை வீக்கமும் வலியும் பால்வினை நோயின் அறிகுறியாக இருக்கலாம். அடிவயிற்றில் தொடர்ச்சியான வலி பெண்களுக்கு தொடர்ச்சியான அடிவயிற்று வலி பால்வினை நோயாக இருக்கலாம்.

உடலுறவின் போது எப்போதும் மிகுந்த வலி ஏற்படுமானால் அது நிச்சயமாகப் பால்வினை நோயின் அறிகுறியே ஆகும். இ‌தி‌ல் ஒரு சில அ‌றிகு‌றிக‌ள் வெறு‌ம் தொ‌ற்றுக் ‌கிரு‌மிகளாலு‌ம் ஏ‌ற்படலா‌ம். ஆனா‌ல் எதுவாக இரு‌ந்தாலு‌ம் உடனடியாக மரு‌த்துவ ப‌ரிசோதனை செ‌ய்து ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்வது ‌மிகவும் மு‌க்‌‌கிய‌ம்.

Previous articleசிறந்த கணவனாக திகழ 7 விஷயங்கள்….
Next articleகர்ப்ப கால தாம்பத்தியம் சிசுவை பாதிக்குமா?