Home பாலியல் மாதவிடாய் முடிந்தபின் பெண்களுக்குள் ஏற்படும் படிப்படியான‌ மாற்றங்கள் . !

மாதவிடாய் முடிந்தபின் பெண்களுக்குள் ஏற்படும் படிப்படியான‌ மாற்றங்கள் . !

36

மாதவிடாய்க்குப்பின் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு(ள்) ஏற்படும் மாற்றதை அழ காக விளக்கும் கட்டுரை இது. திருமணமா ன ஒவ்வொருவரும் இக்கட்டுரையிலுள்ள விஷயங்களை மனதில் பதிய வைத்துக் கொண்டால் இல்லறம் இனிதாக இனிக்கு ம் என்பதில் சந் தேகமில்லை.

1 முதல் 5-ம் நாள் வரை

மாதவிலக்கு சுழற்சியின் ஆரம்ப நாட்களா ன இவற்றில் பெண்ணின் உடலில் ஈஸ்ட் ரோஜென் சுரப்பு குறைவாக இருக்கும். அதன் விளைவாக அவள் அமைதியின்றி யும், தூக்கமின்றியும், டென்ஷனுடனும் காணப்படுவாள். பெரும்பாலும் இந்நாட்க ளில் பெண் அதற்குத் தயாராக இருப்பதில்லை. செக்ஸுக்கு அவ ளைக் கட்டாயப்படுத்தாமல், வேறு வேலைகளில் பிசியாக வைத்திருப்பது நல்லது.

6 முதல் 9-ம் நாள் வரை

பெண் உடலளவிலும், மனதள விலும் ரொம்பவே உற்சாகமா க உணரும் நாட்கள் இவை. எதைப் பற்றிப் பேசினாலும் டென்ஷனாக மாட்டாள். அவ ளது உடல் செக்ஸ் உறவுக்குத் தயாராக இருக்கும்.

10 முதல் 15-ம் நாள் வரை

ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிக மாக இருக்கும் நாட்கள் இவை. எனவே இந்நாட்களில் செக்ஸ் உணர்வுகள் அவளுக்கு அதிகமிருக்கும். மற்ற நாட்களில் செக்ஸ் உறவின்போது தேவைப்படுகிற முன் விளையாட்டுக்கள் இந்நாட்க ளில் அதிகம் தேவையிருக்காது. கணவனின் கிசுகிசுப்புக் குரலுக்கு ம், லேசான ஸ்பரிசத்திலுமே அவ ளது உடல் உடனடியாக ஒத்துழை க்கும்.

15-ம் நாள்

பெண்ணின் செக்ஸ் உணர்வுகள் உச்சத்தில் இருக்கும் நாளாம் இது. இந்த நாள் அவள் கருத்தரிக்கவும் ஏற்ற மிகச் சரியான நாளாம். இந் நாளில் பெரும்பாலும் தன் கணவர் தன்னுடனேயே இருக்க வேண்டு ம் எனப் பெண் விரும்புவாள். மற்ற நாட்களில் சாத்தியப்படாத உறவின் போ தான உச்சக்கட்டம், இந்நாளில் இரண்டு, மூன்று முறை கூடக் கிட்டுமாம்.

16 முதல் 23-ம் நாள் வரை

ஈஸ்ட்ரோஜென் மீண்டும் கொஞ்சம் குறை ய ஆரம்பிக்கிற காலமிது. இந்நாட்களில் பெண்ணுக்குள் ஆண்மை உணர்வு கொஞ் சம் தலை தூக்கியிருக்குமாம். கணவனின் வழக்கமான ஆதிக்கத்தை உறவின் போது இந்நாட்களில் பெண் விரும்புவதில்லை என்கின்றன ஆராய் ச்சிகள்.

பிராஜஸ்டரோன் என்கிற ஹார்மோன் சுர ப்பு அதிகமாக இருக்கும். எடுத்ததற் கெல் லாம் எரிச்சலடைவது, படபடப்பாவது என பெண்ணின் மனநிலை வேறுமாதிரி இருக்கும். தன் தோற்றம் எப்படியிருக்கிறது, மற்றவர்க ள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்கிற கவலை அதி கமிருக்கும்.

குழந்தைகளிடமும் கோபப்படுவாள். இந்நாட்களில் மனைவியுடன் பிக்னிக் செல்வது, பேட்மின்ட்டன் மாதிரியான விளையாட்டுக்களில் ஈடுபடுவது அல்ல து அவளை பிசியாக வைத்திருப்பது போ ன்றவை ஏற்றதாக இருக்கும் என்கிறார் கள் மருத்துவர்கள். செக்ஸ் விஷயத்தை ப் பொறுத்தவரை, அது அவளது விருப்ப ம். இந்நாட்களில் செக்ஸ் ஆர்வம் என்பது பெண்ணுக்குப் பெண் வே றுபடும் என்பதால், அதை அவளது விருப்பத்துக்கே விட்டுவிடு வது நல்லது. கட்டாயப்படுத்து வது கூடாது.

27 மற்றும் 28-ம் நாட்கள்

அடுத்த மாதவிலக்குக்குத் தயாராகும் நாட்கள் இவை. அவளது உடலில் ஈஸ்ட்ரோ ஜென் மற்றும் பிராஜஸ்ட்ரோ ன் என இரண்டு ஹார் மோன் களுமே குறைந்து காணப்படு ம்.

ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைந்து காணப்படுவதால், சாக்லேட் மாதிரி யான கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணும் ஆவல் அவளுக்கு அதிகமிருக்கும்.

இம்மாதிரியான உணவுகள் அவள து மனநிலையை ஓரளவுக்கு சரியா க்கும் என்றாலும் அதன் விளைவா க அவளது உடல் எடை எக்குத்தப்பா க எகிறுவதும் இந்நாட்களில்தான்.

வெளியிடங்களுக்குச் செல்லவும், வெளியே சாப்பிடவும் இந்நாட்களி ல் விருப்பம் அதிகமிருக்கும் என்ப தால் கணவர்கள் அதற்கு ஆவன செய்யலாம். இதற்குப் பிரதிபலன் பட்டியலின்படி பார்த்தால் பதினைந்தாம் நாள் கணவனுக்குத் திரும் பக் கிடைக்கும்.