Home பாலியல் பாலியல் நோய் தாக்கத்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

பாலியல் நோய் தாக்கத்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

107

பாலியல் நோய்கள்:பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் (எஸ்.டி.டி) என்பது மிகவும் பொதுவான ஒன்றாகும். ஆனால் நம்மில் பலரும் இதற்கான எந்த அறிகுறியும் தெரியாமல் இருப்போம். ஒருவேளை, ஏதேனும் அறிகுறி தெரிந்தால், அவை மிதமான அளவு முதல் தீவிரமான அளவு வரை இருக்கக்கூடும்.

அரிப்பு மற்றும் சிவத்தல்;பூஞ்சை மூலமாக உண்டாகும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள், இடுப்பும் தொடையும் சேரும் பகுதியில் அரிப்பை ஏற்படுத்தி, சிவக்க வைக்கும். பெண்ணுறுப்பு அல்லது ஆணுறுப்பில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல் உணர்ச்சி தான் பூஞ்சை தொற்றுக்கான பொதுவான அறிகுறிகளாகும். சொறி சிரங்குகள் இரவு நேரத்தில் தீவிர அரிப்பை ஏற்படுத்தும். அந்தரங்க இடத்தில் பேன்கள் கூட தீவிர அரிப்பை ஏற்படுத்தும். 

ட்ரைகோமோனியாசிஸ் எனப்படும் ஒட்டுண்ணி தொற்று பிறப்புறுப்புகளில் அரிப்பு, எரிச்சல், சிவத்தல் அல்லது புண்களை ஏற்படுத்தும். சிபிலிஸ் வியாதியின் இரண்டாம் நிலையில் வாய், பெண்ணுறுப்பு, அல்லது ஆசனவாயின் சளி சவ்வுகளில் சொறி, சிகப்பு அல்லது பழுப்பு நிற நிறம் மாறுதல் போன்றவற்றை காணலாம். உள்ளங்கை அல்லது உள்ளங்கால்களிலும் கூட இது ஏற்படலாம். ஹெர்ப்ஸ் தோல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்தால் சரும மேற்பரப்பில் கொப்புளங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே எரிச்சல் உணர்வு உண்டாகும். 

அல்சர்கள்;க்ரானுலோமா இன்குவினேல் எனப்படும் நோய் இடுப்பும் தொடையும் சேரும் பகுதியில் பெரும்பாலும் வலியில்லா பிறப்புறுப்பு அல்சர்களாக ஏற்படும். மேலும் சான்ஸ்ராய்ட் எனப்படும் பால் நோய்க்கட்டி இருக்கும் போது பிறப்புறுப்பில் வலிமிக்க அல்சர்கள் உண்டாகலாம். 

கொப்புளங்களும்…புண்களும்…ஹெர்ப்ஸ் எனப்படும் தோல் அழற்சி தொற்று ஏற்படும் போது தெளிவான நீர் அடங்கிய சிறிய கொப்பளங்களை கொத்தாக பிறப்புறுப்புகள், மலக்குடல், ஆசன வாய் அல்லது வாயில் புண்ணாக காணலாம். இந்த கொப்பளங்கள் மிகவும் உணர்ச்சி மிக்கவையாகும். எப்போது வேண்டுமானாலும் அவைகள் வெடித்து, அதிலுள்ள நீர் வெளியேறலாம். இந்த கொப்பளங்கள் வெடித்த பிறகு, ஆறுவதற்கு முன்பு, பாதிக்கப்பட்ட சரும பகுதிகளில் கட்டி ஒன்று உருவாகும். இதன் அறிகுறியாக சிறிய கொப்பளங்களை உதட்டிலும் கூட காணலாம். 

தொற்று பரவியுள்ள உடல் பகுதியில் (பொதுவாக பிறப்புறுப்பு, மலக்குடல், நாக்கு அல்லது உதடுகள்) சிறிய வலியில்லாத புண் ஏற்படுவது தான் சிபிலிஸ் நோயின் முதன்மை அறிகுறியாகும். புண் ஏற்பட்ட 10 நாட்களுக்கு பிறகு, உடலில் (உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் உட்பட) சிவப்பு அல்லது சிவப்பு கலந்த பழுப்பில், சிறிய அளவிலான சொறிகள் அல்லது புண்களை காணலாம். இது சிபிலிஸ் நோயின் இரண்டாம் நிலை அறிகுறியாகும். சான்ஸ்ராய்ட் இருக்கையில் பிறப்புறுப்பில் வலிமிக்க புடைப்பு அல்லது புண் ஏற்படலாம். மேலும் அது ஒரு நாளைக்குள் சாம்பல் அல்லது மஞ்சள் கலந்த சாம்பல் நிறத்திலான அல்சராக ஏற்படும். 

மருக்கள்;ஹ்யூமன் பாப்பில்லோமா வைரஸ் (எச்.பி.வி) பிறப்புறுப்பில் மருக்களை உண்டாக்கும். இரண்டு நபர்களின் சருமம் மிக அருகில் வரும் போது இது பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பிறப்புறுப்பு பகுதியில் இந்த மருக்கள் சிறியதாக, தசை நிறத்தில் அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும். பாதிக்கப்பட்ட நபருடன் ஒருவர் வாய்வழி செக்ஸில் ஈடுபட்டால் அவருடைய வாய் அல்லது தொண்டையில் கூட இது உருவாகலாம். சில நேரங்களில், காலிஃப்ளவர் அளவிற்கு பெரியதாகவும் உண்டாகும். 

மஞ்சள் நிறத்திலான சருமமும் கண்களும்;மஞ்சள் நிறத்திலான சருமமும், கண்களும் கல்லீரல் அழற்சியில் காணலாம். 

பருக்கள்;பாலுண்ணிகளை சருமத்தில் சிறிய பருக்களாக பார்க்கலாம். பிறப்புறுப்பு தோல் அழற்சி கூட சிறிய சிவப்பு புடைப்புகளாக ஏற்படலாம்…..!