Home ஆரோக்கியம் அடிக்கடி குளிப்பதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரியுமா?

அடிக்கடி குளிப்பதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரியுமா?

37

அடிக்கடி குளிப்பதால் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
தினமும் குளிப்பதால் உடல் ஆரோக்கியத்துடன், நோய் வராமல் இருப்போம் என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில், லண்டலின் நடத்தப்பட்ட ஆய்வில் அடிக்கடி குளிப்பதால் உடல் உபாதைகள் ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்கள் குளிக்காமல் இருப்பதால் உடலில் இருந்து துர்நாற்றம் வீசும் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் அடிக்கடி குளிப்பதால் செரிமான பிரச்னை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு மற்றும் இதயக்கோளாறுகள் வரை ஏற்படுகின்றன.

உத்தா பல்கலைக்கழகத்தில் உள்ள ஜெனிடிக் சயின்ஸ் சென்டர் நடத்திய ஆய்வில் அதிக அளவிற்கு உடலை சுத்தம் செய்வதால் உடலை பாதுக்காக்க கூடிய பாக்டீரியா, வைரஸ் ஆகியவை உடலில் இருந்து நீக்கப்படுகின்றன. அவை உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க தேவையானவை. அந்த வகை பாக்டீரியா மற்றும் வைரஸ் அடிக்கடி குளிப்பதால் வெளியேறுகின்றன. அதனால் அடிக்கடி குளிப்பதை தவிர்க் வேண்டும். அதே போல் குளிக்கும் போது அடிக்கடி ஷாம்பூ உபயோகிப்பதாலும் உடல் உபாதைகள் ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.