Home ஜல்சா பல பெண்களை படுக்கைக்கு அழைத்து சீரழித்துள்ளார் – உண்மையை போட்டுடைத்த ஸ்ரீலீக்ஸ் நடிகை…!!

பல பெண்களை படுக்கைக்கு அழைத்து சீரழித்துள்ளார் – உண்மையை போட்டுடைத்த ஸ்ரீலீக்ஸ் நடிகை…!!

53

சமீப காலமாக நடிகர் – நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி தென்னிந்திய சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஸ்ரீலீக்ஸ்:

கடந்த ஆண்டு சுசிலீக்ஸ் வெளியாகி எப்படி பல நடிகர் நடிகைகளை பயத்தில் உறைய வைத்தோ அதே போல் தற்போது நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்டு வரும் ஸ்ரீலீக்ஸ் தெலுங்கு திரையுலக நடிகர் நடிகைகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலு நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

சேகர் கம்முலு பதிலடி:

சேகர் கம்முலு நடிகை நயன்தாரா நடித்த படமான ‘நீ எங்கே என் அன்பே’ படத்தை தமிழிலும் தெலுகில் ‘அனாமிகா’ என்றும் இரண்டு மொழிகளில் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீரெட்டி கூறிய புகாருக்கு பதில் கொடுத்த இயக்குனர் சேகர் கம்முலு, இதனை முற்றிலும் மறுத்ததுடன் இந்த நடிகை மீது வழக்கு தொடரப்போவதாக எச்சரித்தார். இதற்கெல்லாம் சற்றும் அசராத ஸ்ரீ சட்ட ரீதியாக இவரை சந்திக்க தயார் என்றும், இவரை குற்றவாளி என நிரூபிக்கும் ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தார்.

நடிகர் பற்றி கூறிய ஸ்ரீ:

இந்த பிரச்சனையே இன்னும் கொளுந்து விட்டு எரிந்து வரும் நிலையில்… தற்போது பிரபல நடிகர் பற்றி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளது…. “அந்த நடிகர் சினிமாவிலும், நிஜ வாழ்க்கையிலும் இயல்பாக நடிக்க தெரிந்தவர். யாரையும் உணர்வுப் பூர்வமாக அணுகி அவருடைய வலையில் எளிதில் சிக்க வைப்பவர்.

மக்கள் முன் நாடகமாட தெரிந்தவர், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும், ‘ராம் சரண்’, ‘மகேஷ் பாபு’, ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட நடிகர்களே இவரிடம் இருந்து நடிப்பு பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் தவறான நடத்தை உள்ள இவர் பல பெண்களை படுகைக்கு அழைத்து சீரழித்துள்ளார் உள்ளார். கண்டிப்பாக ஒரு நாள் நிச்சயம் கடவுள் அவரை தண்டிப்பார் என்று புதிர் போட்டுள்ளார் ஸ்ரீலீக்ஸ் நடிகை. ஆனால் இதுவரை அவருடைய பெயரை மட்டும் வெளியிட வில்லை… இவர் யாரை கூறி இருப்பார் என தெலுங்கு திரையுலகமே தீவிரமாக யோசித்து வருகிறார்களாம்.

Previous articleகருச்சிதைவுக்கு பின் கர்ப்பமாக ஆசையா? இதெல்லாம் மறக்காதீங்க
Next articleகஞ்சாவும் ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையும் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை