Home ஆண்கள் ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறிகள்!

ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறிகள்!

53

ஆண்மை குறைபாடு என்பது பொதுவாக இருவகை சார்ந்திருக்கிறது. ஒன்று விந்தணு திறன், மற்றொன்று விந்தணு எண்ணிக்கை. பல ஹார்மோன் மாற்றங்கள் அல்லது இடையூறுகள் காரணமாக ஆண்மை குறைபாடு ஏற்படலாம்.

உடல் மற்றும் மனம் என இரண்டில் எதில் பாதிப்பு அல்லது தாக்கம் ஏற்பட்டாலும் ஆண்மையிலும் அதன் விளைவுகள் எதிரொலிக்கும்.

சில சமயங்களில்முழுமையாக வளராத விதை பைகளும் கூட ஆண்மை குறைபாடு ஏற்பட காரணியாக அமையலாம்.

அதிகப்படியான உடற்பயிற்சி, உடலில் அதிகமாக நச்சுத்தன்மை ஏற்படுதல் மற்றும் ஒருசில உடல்நிலை மாற்றங்கள் வைத்தும் ஆண்மை குறைபாட்டை அறியலாம்….

முடி உதிர்தல் / மெலிதல்

முடியின் திறனில் வேறுபாடும் ஆண்மை குறைபாடு கண்டறிவதற்கான ஓர் அறிகுறியாக தான் திகழ்கிறது.

திடீரென முடி உதிர்தல் அல்லது முடி மெலிதல் போல ஏற்படுகிறது எனில், விந்தணு திறன் குறைபாடு ஏற்படுகிறது என்று கண்டறியலாம்.

பாலியல் உணர்ச்சி

பாலியல் உணர்ச்சி அல்லது உடலுறவு சார்ந்த வேட்கை குறைவது, அதில் எண்ணம் குறைவது போன்றவையும் ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறி தான்.

விதை பை

விதை பையில் வலி, கட்டி அல்லது வீக்கம் ஏற்படுவதும் ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கான ஒரு அறிகுறியாக அறியப்படுகிறது.

விறைப்பு

ஆண் குறி விறைப்பு அல்லது விந்து வெளிப்படுதலில் ஏதேனும் பிரச்சனை ஏற்படுவதும் ஆண்மை குறைபாட்டிற்கான அறிகுறியாக தான் காணப்படுகிறது.
விதைகள்

சிறிய அல்லது முழுமையாக வளராத விதிகளும் கூட ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கிறது

விந்து வெளிப்படுதல்

முன் கூட்டியே அல்லது விரைவாக விந்து வெளிப்படுதல் போன்றவையும் ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறியாக தான் காணப்படுகிறது.
பரிசோதனை

பெரும்பாலும் ஆண்மை குறைபாடு ஏற்பட்டுள்ளதா என சிறுநீர் அல்லது இரத்த பரிசோதனைகளை வைத்தே கண்டறிந்துவிடலாம்.

இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். சில சிகிச்சைகள் மூலம் இதற்கு தீர்வு காண வழிமுறைகள் இருக்கின்றன.