Home இரகசியகேள்வி-பதில் ஆண்களின் பாலியல் தொடர்பான வாசகர் கேள்வி பதில்

ஆண்களின் பாலியல் தொடர்பான வாசகர் கேள்வி பதில்

139

ஆண்மைக் குறைபாடு என்று சொல்லுவதில் உள்ள தவறான கருத்துகள் என்னென்ன ?
உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை
என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான
ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக
எடைபோடுகின்றனர்.
முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப்
பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக
வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பம் கொள்ளுதல் தவறு என்று
எண்ணுதல், போன்றவையாகும்.

ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை.ஏனென்றால் ? உடலுறுவு
கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட
பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரிய தாக
இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை
அளிக்காது!. பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக
தவறான கருத்தாகும்.

விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும்,
விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக
நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும்.
துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும்.
எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும்.
விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு
சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது
ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது.
ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள் ஏதேனும் உண்டா? –
* விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது
கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர
யோகாவும் நல்ல பலனை தரும்.ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவாதற்கு முன்
தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவர, பலவீனங்கள் சரியாகும்.
முருங்கைப் பூவை காய்ச்சி ஒரு அவுன்ஸ் பாலுடன் கலந்து குடிக்கலாம்.ஆண்மை
பெருக அத்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம், முருங்கை
கீரை, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம். மாதுளம் பழத்தினை
தினந்தோறும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை தினந்தோறும்
சாப்பிட்டுவரலாம்.
———————————
பாலியல் சம்பந்தமான பிரச்சினைகள் (Sexual Problems)

பாலியல் என்றால் என்ன?
பாலியல் என்பது தன்னை வெளிபடுத்துவதாகும்.இது சிந்தனைகள், உணர்வுகள், பாலியல் என்பவற்றை உள்ளடக்கியது.

பாலியல் சுகாதரம் என்றால் என்ன?
ஒருவரின் பாலியல் உணர்வுகளை, இலிங்க நோய் பிரச்சினையின்றி, தேவையற்ற பிரசவங்கள் இன்றி வெளிப்படுத்துவதாகும்.

பால் என்றால் என்ன?
ஒருவரின் உயிரியல் சம்பந்தமானவை

* கட்டமைப்பு: மார்பகம், யோனி(பெண்), ஆண்குறி, விதை(ஆண்).
*தொழிற்பாடு: மாதவிடாய் சச்சரம்(பெண்), விந்துற்பத்தி(ஆண்).
* பிறப்புரிமை: XX(பெண்), XY(ஆண்).

பாலியல் விருப்பு என்றால் என்ன?
அடுத்த பாலுடனான, அதே பாலூடான(தன்னின சேர்க்கை), இருபாலாருடனான ஈர்ப்பு.

பாலியல் பழ‌க்கவழக்கம் என்றால் என்ன?
ஒருவரின் பாலியலை வெளி கொண்டு வருவதற்கு செய்யப்படுபவை.
உதாரணம்: தொடுதல், முத்தமிடல்…

பாலியல் சக்கரம் என்றால் என்ன?
பாலியல் உணர்ச்சியினால் உடலில் எற்படும் தொழிற்பாட்டு மற்று உளரீதியான மாற்றங்கள்.

இது 4 நிலைகளை கொண்டது…

1. தூண்டப்படுதல்..
இது சில நிமிடங்கள் முதல் பல மணித்தியாலங்கள் வரை காணப்படலாம். இதன் போது இருதய துடிப்பு, மூச்சு விடுதல் அதிகரிக்கும். தசை இழுவையிலும் இலிங்க அங்கங்களுக்கான் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.
பெண்களில் மார்பக காம்புகள் நேராகும், மற்றும் மார்பகங்கள் பெருக்கும். ஆண்களில் விதைகள் வீங்கும்

2.சமனிலை
முழுமையான உணர்ச்சி நிலை அடைந்ததும் ஒரு சமனிலைக்கு உடல் வரும்..

3.உச்ச கட்டம்(Orgasm)
பாலியல் உணர்வுகளின் தீடீர் வெளிப்பாடு இது சமனிலையின் உச்ச நிலையில் ஏற்படும். இது சில நொடிகளே நீடிக்கும். பெண்களில் பிறப்புறுப்பு இறுக்கமடையும். ஆண்களில் ஆண்குறி சுருங்குதலும், சுக்கில பாய்பொருள் வெளியேற்றமும்.

4.முதன்மை நிலை..
உடல் படிப்படியான அதன் ஆரம்ப நிலைக்கு செல்லும். ஆண்களுக்கு ஒரு உச்ச கட்டத்தின் பின் நேர அவகாசம் தேவை.
பெண்களுக்கு பல உச்சக்கட்டங்கள் அடையலாம்.

…………………………
உடலுறவு இதயத்தைப் பாதிக்குமா???

நம் நாட்டில் மட்டுமல்ல உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகளில் வாழும் மக்கள் இதயத்துக்கும் உடலுறவுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி தவறான கருத்துகளைக் கொண்டுள்ளனர்.
ஆனால் இது பற்றி ஆய்வு நிகழ்த்திய காம இயல் வல்லுநர்கள் (Sexologists) உடலுறவால் எந்த ஆரோக்கியமான இதயமும் பாதிக்கப்படுவதில்லை என்று உறுதியாகக் கூறுகின்றனர். உண்மையில் ஒத்த மனத்துடன் உடலுறவில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவதால் மாரடைப்பு ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும். அந்த வகையில் உடலுறவு என்பது நமக்கான பாதுகாப்புக் கவசமாகவே செயல்படுகிறது. எப்படி என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

உடலுறவு நிகழ்வுகளை காமஇயல் வல்லுநர்கள் கீழ்கண்ட நான்கு நிலைகளாகப் பிரித்துள்ளனர்.

எழுச்சி நிலை (Excitement Phase)
கிளர்ச்சி நிலை (Plaeau Stage)
உச்ச நிலை (Orgamic Phase)
மீள் நிலை (Resolution Phase)

மேற்கூறிய நான்கு நிலைகனிலும், இதயமானது பலவகையான ஆரோக்கியமான மாற்றங்களை அடைகிறது.

மாரடைப்புக்கான காரணங்களை ஆராய்ந்த இதய மருத்துவர்கள் அவற்றை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர். அதாவது இதயத்துக்குப் போதுமான உடற்பயிற்சி இல்லாதது, உடலின் எடை அதிகமாதல், மன இறுக்கம் ஆகியவைதான் அடிப்படையான காரணங்கள். இந்த மூன்று காரணங்களையும் வெல்லக்கூடிய ஆற்றல், உடலுறவுக்கு உண்டு என ஆணித்தரமாகக் கூறுகிறார்கள்.

உடலுறவானது இதயத்திலும் இதயம் தொடர்பான ரத்தக் குழாய்களிலும் ஏற்படுத்தும் மாற்றங்களானது மூன்று வகையான காரணங்களை அடிப்டையாகக் கொண்டு அமைந்துள்ளது. அதாவது உடலுறவில் ஈடுபடுபவர்களின் வயது, திருமணத்தின் போது வயது, உறவில் ஈடுபடுபவர்கள் திருமணம் செய்து கொண்டவர்களா அல்லது திருமண பந்தத்துக்கு அப்பாற்பட்டு உடலுறவில் ஈடுபடுபவர்களா ஆகிய மூன்று அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.

உடலுறவின்போது ஏற்படும் உடலியல் மாற்றங்கள் யாவும் ஒரே மாதிரியாக இருந்தாலும் இதற்காக எடுத்துக் கொண்ட நேரம் உடலுறவின் தன்மை போன்றவை ஒவ்வொருவருக்கும் மாறுபடக்கூடும்.

உடலுறவில் ஏற்படும் தம்பதிகளின் வயதுக்கும், அவர்களின் உடலில் ஏற்படும் உடலியல் மாற்றங்களுக்கு மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

உடலுறவு கொள்ளும் தம்பதியர்களின் வயது இருபதாக இருந்தால் அவர்களின் உடலில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் மற்ற தம்பதியர்களைவிட அதிகமாக இருக்கும். இளமையின் விளிம்பில் இருப்பதால் உடலில் உள்ள பரிவு நரம்பு அமைப்பு அளவுக்கு அதிகமாகச் செயல்பட்டு ரத்த அழுத்தத்தின் அளவு உயர்வதோடு அல்லாமல் இதயத்துடிப்பின் அளவும் பன்மடங்கு அதிகமாகிறது.

உடலுறவின் உச்சக்கட்டத்தின்போது (Orgasm) ரத்த அழுத்தத்தின் அளவானது 220/110 என்ற அளவுக்கு உயரும். இவ்வாறு உச்ச நிலைக்குச் சென்ற ஓரிரு நிமிடங்களில் மறுபடியும் சாதாரண ரத்த அழுத்த நிலைக்கு மீள்கிறது. இதுபோல் உடலுறவின் உச்சநிலையில் ஒரு நிமிடத்துககு இதயம் சுமார் 180 என்ற அளவுக்கு மிகவும் வேகமாகத்துடிக்கும். ஆனால் உச்ச நிலையில் இருந்து மீண்ட ஒரு நிமிடத்துக்குள் இதயத்துடிப்பானது பழைய நிலைக்கு திரும்பிவிடும்.

வயதானவர்கள் உடலுறவில் ஈடுபடும்போது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் இளம் வயது தம்பதிகள் உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் உடலியல் மாற்றங்களைவிடக் குறைவானவே இருக்கும்.

ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும்போது செலவாகும் கலோரிகளின் எண்ணிக்கை, உடலுறவில் ஈபடுபவர்களின் வயது, அவர்களின் உடல் நிலை, அவர்களின் திருமண வயது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாறுபடும். பொதுவாக சாதாரண உடலுறவின்போது 150 கலோரிபள் செலவழிக்கப்படகிறது. இந்த ஆற்றலானது சாதாரண மனிதன் இரண்டு அடுக்குகள் கொண்ட ஒரு கட்டடத்தின் மாடிப்படிகளில் ஏறும்போது செலவிடும் ஆற்றலுக்கு இணையானது.

பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள், உடலுறவு என்பது உடலுக்கு பல நன்மைகளைத் தரக்கூடிய மிகச்சிறந்த உடற்பயிற்சி என்றே கூறுகின்றன. உடலுறவு அசைவுகளின்போது அந்தப் பகுதியில் உள்ள தசைகள் மட்டுமல்லாமல் முதுகுத்தண்டுவடப் பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறுகின்றன. அதோடு முதுகுத் தண்டுவடப் பகுதியில் உள்ள சிறிய முள்கள்போன்ற எலும்பு அமைப்புகளும் சிதைவு மாற்றங்களுக்கு ஆளாகாமல் தடுக்கப்படுகின்றன.

ஒரு மனிதன் 30 நிமிட நேரம் மெல்லோட்டத்தில் ஈடுபடும்போது ஏற்படும் பலன்கள், ஒருமுறை உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் பலன்களுக்கு இணையானது என்று சொல்லப்படுகிறது.

அதாவது கடுமையான குளிர்காலத்தில் அதிகாலையில் ஒரு பூங்காவை நான்கு முறை சுற்றினால் கிடைக்கும் பலன்களை ஒருமுறை உடலுறவு கொள்ளும்போது பெற முடியும்.

Previous articleஉச்சகட்டத்தை விரும்பும் பெண்கள்;ஆய்வுகள 18+
Next articleஅனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்…