Home ஆண்கள் ஆண்மை பெருக ஆண்களின் விந்தணு ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணங்கள்

ஆண்களின் விந்தணு ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணங்கள்

131

ஆண்களின் விந்தணுக்களை பாதிக்கும் காரணிகள், மற்றும் அதிலிருந்து விடுபடும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன
அனைவருக்கும் தனது குடும்பம் விருத்தியடைய வேண்டும். வீட்டில் ஒரு குழந்தை ஓடி விளையாட வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கும். இந்த ஆசைக்கு தடைக்கல்லாக இருப்பது கருவுறாமை. கருவுறாமைக்கு காரணம் பெண்கள் மட்டுமே என்று பலர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சில காரணங்களால் ஆண்களும் கருவுறாமைக்கு காரணமாகின்றனர். ஆண்களின் கருவுறாமை பிரச்சனை எதனால் உண்டாகிறது, அதை எவ்வாறு குணமாக்கலாம், வராமல் தடுப்பது எப்படி என்பது பற்றி காண்போம்.

விந்தணுக்கள் குறைபாட்டிற்கு காரணங்கள் 1. புகைப்பிடித்தல் 2. மருந்துகளின் பயன்பாடு 3. மது அருந்துதல் 4. டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு 5. சேதமடைந்த விந்தணு திட்டுகள் 6. க்ளின்ஃபெல்டரின் சிண்ட்ரோம் 7. வைட்டமின் சி, இரும்பு சத்து, மற்றும் ஜிங்க் குறைபாடு 8. இறுக்கமான உள்ளாடைகளை 9. உடலின் நச்சுகள் வெளிப்பாடு 10. மன அழுத்தம் இது போன்ற காரணங்களால் விந்தணுக்களின் வலிமை குறைகிறது.

ஆண்களின் விந்தணுக்களை வலிமையாக்க என்ன செய்யலாம்? ஆண்களின் கருவுறாமை பிரச்சனையை போக்க சில செயற்கையான மருந்துகள் இருந்தாலும், அவை பின்விளைவுகளை தருகின்றன. நமது வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் எவ்வாறு கருவுறாமை பிரச்சனையை தீர்க்கலாம் என பார்க்கலாம்.

1. நன்றாக சாப்பிட வேண்டும் ஆரோக்கியமான உணவு பழக்கம் வாழ்க்கை முறையில் பல மாற்றங்களை கொண்டு வரும். அனைத்து சத்துக்களும் உள்ளடங்கிய உணவுகளை சாப்பிடும் போது, உடலில் ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாமல் போகிறது. இதனால் கருவுறுதலுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. உங்களுடைய உணவில் மினரல், விட்டமின்கள், இரும்பு சத்துக்கள் ஆகியவை இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.

2. புகைப்பிடித்தலை விடுங்கள் இது உங்கள் புகைப்பழக்கத்தை விட மிகச்சரியான நேரம். இது ஆண்களின் விந்தணுக்களுக்கு சேதத்தை உண்டாக்குகிறது. மேலும் உடல்நலத்திற்கும் புகைப்பிடித்தல் உகந்ததல்ல. எனவே இன்றே புகைப்பிடிப்பதை கைவிடுங்கள்.

3. மது பழக்கம் மது அருந்துதல் ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு காரணமாக உள்ளது. எனவே மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

4. அதிக வெப்பநிலை நீங்கள் அதிக சூடான நீரில் குளிப்பவரா? இது உங்கள் உயிரணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும்.

5. இறுக்கமான ஆடை இறுக்கமான ஆடைகள் உங்கள் தோற்றத்தை வேண்டுமானால் மேம்படுத்தி காட்டலாம். ஆனால் இது உங்களது உயிரணுக்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. எனவே இறுக்கமான உள்ளாடைகள், ஜீன்ஸ் மற்றும் பேண்டுகள் அணிவதை தவிர்க்கவும்.

6. மன அழுத்தம் வேண்டாம் கருவுறாமைக்கு மன அழுத்தம் ஒரு காரணமாகிறது. எனவே நன்றாக தூங்குங்கள், பிரச்சனைகளை எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள். தியானம் செய்யுங்கள்.

7. போதுமான ஊட்டச்சத்து உணவு நிறைய சத்துக்கள் நிறைந்த உணவுகள் உங்களது விந்தணுக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். விட்டமின்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.