Home ஆண்கள் நீண்ட ஆணுறுப்பின் நூதன அமைப்பு

நீண்ட ஆணுறுப்பின் நூதன அமைப்பு

89

capture-424திமிர்த்த மார்புகளை திரும்பிப் பார்க்காதவர்கள், இடை : புட்ட விகிதாச்சாரம் கவனிக்காதவர்கள், ஸ்கூட்டி பெண்ணை அரை மீட்டர் இடைவெளியில் பைக்கில் துரத்தாதவர்கள் இதைப் படிக்க வேண்டாம். காரணத்தை கடைசியில் சொல்கிறேன்.
மேற்கின் போர்ன் இலக்கியம் மற்றும் திரைப்படங்களில் ஒரு கறுப்பன் தோன்றி நம்மூர் ரித்தேஷ் துப்பாக்கி உருவுவது போல் தன் அண்டுராயர் விலக்கி உறுப்பைக் காட்டுவான். தசாவதாரம் என்பது போல் எதிருலுள்ள பருவப் பெண்ணோ/பதிவிரதையோ நெட்டுயிர்த்து எச்சில் முழுங்கி அவனிடம் சரண் புகுவார்கள். கறுப்பர்களின் நீண்டு விடைத்த குறி பற்றிய மித்துதான் இத்தகைய காட்சிகளுக்கு பின்னணி.
என் மாமியார் “காமராஜருக்கு முழங்கால் வரை நீளும் கை” என்று அடிக்கடி பிரதாபிப்பார். நான் கேட்டேன் “என்ன நின்று கொண்டே தேங்காய் பறிக்கவா?”

முதலில் சொன்ன மித்தின் வேர் நீளமான உறுப்பு கொண்டு மட்டுமே பெண்ணை திருப்தி அடைய வைக்க முடியும் என்ற பாமரத்தனமான கற்பனைதான். பெண்ணுறுப்பின் அதிஉணர்வு நரம்புப் பின்னல்கள் இரு உள், வெளி உதடுகள் மற்றும் கிளிட்டோரிஸ் எனும் நுண் குறியில் தான் உள்ளன. ஆழத்தில் இந்த உணர்வுகள் இருக்காது. இருட்டில் தாத்தா கண்ணாடி தேடும் விளையாட்டு மட்டும் தான் அது. உறுப்பு நீளப் பருமனுக்கு வேறொரு நிஜ நோக்கம். விந்தை கருமுட்டையின் அருகில் கொண்டு சேர்ப்பது.
ஆன்மீகவாதிகளில் காந்தி விந்தை அடக்கினால் ஆற்றல் விகாசிக்கும் என்று நம்பினார் (செய்தாரா என்று தெரியவில்லை). பாலகுமாரன் தனது கண்ணன் பற்றின நாவலில் வாசுதேவன் தேவகி காம உணர்வின்றி கூடியதாக ஒருமுறை குறிப்பிட்டார். புணர்ச்சி இன்றி பிறந்தவர் ஏசு.

புணர்ச்சிக்கு இன்ப நுகர்தல், பிறப்பு அறுத்தல், சுவர்க்க வாசல் அப்பாற்பட்டு சில முக்கிய நடைமுறை நோக்கங்கள் உள்ளன. புணர்ச்சி ஒரு பெரும் அரசியல் ஆட்டம்.
கடந்த சில நூற்றாண்டுகளில் நாம் அதிரடியாய் வளர்ந்து விட்டோம், ஆனால் நம் உடல் இன்னும் கற்காலத்தில் இருந்து விழிக்க வில்லை. உதாரணமாக உங்களிடம் ஒரு வருடத்துக்கான உணவு சேகரிப்பு இருக்கும். ஆனால் உணவிலிருந்து ஆற்றலை கொழுப்பாக உங்கள் தொப்பையில் உடல் சேமிக்கும். நாளை பஞ்சம் வந்துவிட்டால் என்ற பயத்தில். அம்பானியின் உடல் கூட இதை செய்யும் என்பது தான் நகை முரண். அடுத்து உங்கள் மனமும் இது போல் சம்மந்தமின்றி செயல்படும். உங்களுக்கு தோல்வி வருகிறது. அடுத்து மன அழுத்தம். உடனே உருளைக்கிழங்கு வறுவலை, ஜிலேபி, சாக்லேட்டை நாடுவது ஏன்? உடனடி ஆற்றலுக்கும் நீங்கள் தீர்க்க வேண்டிய வாழ்வியல் பிரச்சனைக்கும் என்ன சம்மந்தம்? வனத்தின் ஆபத்தில் இருந்து தப்பிக்க வேண்டிய ஆதிமனிதனின் ஆற்றல் தேவையை தொடர்புறுத்தியே இதைப் புரிய முடியும்.

உங்கள் மனைவி ஒரு கற்பின் கனலி. ஆனாலும் குறியை செலுத்தி பின்வாங்கி மீண்டும் செலுத்தும் கஜினி முகமது முறை மற்றும் உங்கள் ஆணுறுப்பின் வாய்ப்பகுதிக்கு பின்னே உள்ள கழுத்து போன்ற கரைமேடு அமைப்பால் நீங்கள் உங்கள் மனைவியை நீங்கள் சந்தேகிக்கிறீர்கள் என்று பொருளாகிறது.
ஏன்? இந்த புணர்ச்சி பிரயத்தனம் மற்றும் வடிவாக்க நூதனத்தின் பிரதான நோக்கங்கள் உங்கள் மனைவியின் புழையில் தேங்கியுள்ள சற்று நேரத்துக்கு முன்பு புணர்ந்த கள்ளக் காதலனின் விந்தை அகற்றுவதே. கள்ளக் காதலன் இல்லை என்கிறீர்களா? ஆனால் நம் மனித வரலாற்றின் முக்கிய அக்கறையே பரம பதம் அடைவதல்ல கள்ளக் காதலனோடு மோதுவது அல்லது அவனை சமாளிப்பதாக இருந்துள்ளது.
ஆண் உறுப்பின் வடிவத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு ஆப்பின் வடிவை ஏறத்தாழ கொண்டுள்ளது. உறுப்பின் தலைப் பாகம் சுற்றளவில் தண்டை விட பெரிது. உறுப்பின் தலையின் கழுத்து போன்ற கரைமேடு அமைப்பும் சேர்ந்து கொள்ள பிளாஸ்கை அலம்பும் பிரஷ் போல நம் ஆணுறுப்பு வேலை செய்கிறது. உங்கள் பிளாஸ்கை சுத்தம் செய்ய பயன்படும் முன்–பின் இயங்கு முறை அலிகுல் துளைப்பு முறைமையுடன் எவ்வளவு ஒத்துள்ளது யோசியுங்கள். இது அன்னிய விந்தை சமர்த்தாய் வெளியேற்றும் முறை.
இன்னொரு விசித்திரமான தகவல்: ஒரு சராசரி சிம்பன்சியின் குறியை விட இரட்டிப்பு நீளம் மனித ஆணினுடையது. நீளமான உறுப்பால் பெண்குறிக்குள் முழுக்க பொருந்தி பழைய விந்தை வெளியேற்ற முடியும். சிம்பன்சிக்கு இந்த ஆப்பு வடிவ வசதியும் இல்லை.

மனித இருப்புக்கு அவசியமான குணாதசியங்கள், உடற் கூறுகள் மட்டுமே நிலைக்கும் என்பது ஒரு பரிணாம விதி. உதாரணமாய் கற்காலத்திலிருந்து நம் மூளை அளவு பெரிதும் அதிகரித்துள்ளது. பரிணாமத்தில் அடுத்து அளவில் அதிகரித்தவை நம் சுந்தரலிங்கங்கள். நூற்றாண்டுகளாய் குறியின் அளவு, அதன் கரைமேடு அமைப்புடன் முன்–பின் துளைப்பு முறையும் நிலைத்துள்ளது. இது ஒரு சங்கடமான விசயத்தை நமக்கு சொல்லுகிறது. நம் பெண்கள் ஆதியிலிருந்து கள்ள உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஏனென்றால் லிங்கத்தின் பணி விந்து பாய்ச்சல் மட்டுமல்ல. அது ஒரு விந்து வெளியேற்றும் கருவி.
இந்த அமைப்போ இயங்கு முறையோ ஆதிமானிட வாழ்வின் எச்சம் மட்டுமே என்று சொல்லலாமா? இன்று நாம் கற்பொழுக்கத்தை கலாச்சார ரீதியாய் நுட்பமாய் பாதுகாக்கிறோம், தாலியால் நினைவுறுத்துகிறோம், தொடர்ந்து மதத் தீவிரவாதத்தால் கண்காணிக்கிறோம். பிறகு எதற்கு நமக்கு ஒரு பழப்பூச்சியின் தந்திரம்? ஆனால் ஆய்வுகள் கற்பொழுக்கப் பதற்றம் ரொம்ப சிக்கலாய் நம் புணர்ச்சி முறைமையுடன் பிணைந்துள்ளதைச் சொல்கின்றன.

கேலப் மற்றும் பலர் 600க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகளின் உடலுறவு முறைமைகளை ஆய்ந்தனர். இந்த இளைஞ இளைஞிகள் ஜோடி மாற்றிப் புணர்ந்த போது, துணை மீது மற்றபடி கள்ள உறவு சந்தேகம் எழுந்த போது அல்லது ஜோடியை வெகு காலம் பிரிந்து மீண்டும் சந்தித்த போது, இவர்களில் ஆண்கள் ஆழ்ந்த மூர்க்கமான பெண்குறி துளைப்புகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த மூன்று சூழல்களிலும் பாலுறவு விசுவாசம் பற்றின கேள்விகள் ஆணுக்கு எழுகின்றன. ஆழமாய், வேகமாய் துளைப்பதன் மூலம் அவன் பழைய விந்தை (இருக்கிறதோ இல்லையோ) தன்னுணர்வின்றி வெளியேற்ற முயல்கிறான்.
கோல்ட்ஸ் மற்றும் ஷேக்கல்போர்டின் (அச்சில் உள்ளது) ஆய்வு விந்து வெளியேற்றுதல் விழைவுக்கான மற்றொரு சமூகச் சூழலை காட்டுகிறது. இல்லாளை சந்தேகப்படும் கணவன்கள் உடனடி அவளுடம் புணர முற்படுகின்றனர். மனைவியை வன்புணர்ச்சி செய்த பெரும்பாலான கணவர்கள் இத்தகைய சந்தேகிகள் என்கிறது இவர்களின் ஆய்வு முடிவு. டால்ஸ்டாயின் அன்னா கரனினாவில் அன்னாவின் கள்ள உறவை அறியும் அலெக்செ அலெக்சொண்டுரோவிச் கெரனின் அவளை வன்புணர முயலும் இடம் நினைவுள்ளதா? அங்கு அவனுக்கு தன் ஆண்மையை நிரூபிப்பது தாண்டி உள்ளூர மற்றொரு நோக்கம் இருந்துள்ளது.
குறியின் முன்தோல் நீக்கப்பட்டவர்கள் நீண்ட நேரம் அதிக விசையூக்கத்துடன் அல்குல் புணர்ச்சியில் ஈடுபடுகின்றனர். மேலும் குறி அதிக ஆழத்திற்கு துளைத்து, மீண்டும் கழுத்துப் பகுதி வரை மீட்டு வருகின்றனர் (ஓஹரா மற்றும் ஓஹரா (1999)). ஓஹரா மற்றும் ஓஹரா முன்தோல் நீக்கின, நீக்காத ஆண்களிடம் உறவு கொண்ட 139 பெண்களை ஆய்ந்தனர்.

இவர்களில் 73% மேற்கூறிய தகவலை உறுதிபடுத்தினர். லௌமன் மற்றும் பலரின் (1997) ஆய்வும் இதை உறுதி செய்கிறது. முன் தோல் நீக்கப்பட்ட ஆணின் புணர்ச்சி நடவடிக்கைகள் மாறுகின்றன. அவனது குறியின் கூருணர்வு குறைகிறது. உறுப்பின் தலைப்பகுதி சுற்றளவு முன்தோல் அற்ற தண்டினுடையதை விட அதிகரிக்கிறது. இதுவே அவனது அல்குல் துளைப்பு கால நீட்டிப்பு, நீண்ட உள்செலுத்தல்–வெளியேற்ற செயல்முறையின் காரணம். இதனால் முன்தோல் நீக்கப்பட்டவருடன் புணர்ந்த பெண்களின் புழையின் கசிவு பெருமளவில் வெளியேற்றப்பட்டு வறட்சி ஏற்படுகிறது. இந்த பெண்கள் குறி எரிச்சல், வலி ஆகிய புகார்கள் சொல்கிறார்கள் (ஓஹரா மற்றும் ஓஹரா (1999)). கசிவு நீர் அகற்றலிலிருந்து ஆண்குறி சிறந்த விந்து அகற்றல் கருவி எனபது நிரூபணமாகிறது.
முன்தோல் நீங்கிய உறுப்பு இவ்விசயத்தில் திறனுறுதி மிக்கது. பிளெடெக் மற்றும் பலர் (2002) ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை சொல்கிறார்கள்: முன்தோல் நீக்கியவர்களின் குழந்தைகளிடம் பெற்றோரின் சாயல் அதிகம்.
இந்த முன்தோல் விவகாரத்தை பரவலாய் ஆய்ந்து விவாதித்து தான் நாம் தீர்மானிக்க முடியும். அனுபவஸ்தர்கள் எழுதுங்கள்.
சுன்னத்தை கொண்டாடுகிறேன் என்று ராமசேனையினர் விசனிக்க வேண்டாம். முன்தோலை விடுங்கள், உங்களுக்கு தான் வால் உள்ளதே!
நம் ஊரில் தங்க நாணயம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பரிசுப் பொருட்களுக்கு அடுத்த படியாய் சுளுவாய் கிடைப்பது வீட்டு வேலை மற்றும் மகப்பேறுக்காய் மனைவி. வேறு எதை அடைவதற்கும் குறைந்த பட்ச திறமை, உழைப்பு அதிர்ஷ்டம் வேண்டும். என்னை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கால் நொண்டி. என்னை மணப்பதற்கு இரண்டு பெண்கள் தயாராய் இருந்ததாய் அம்மா சமீபத்தில் சொன்னாள். அதுவும் வரதட்சணை தந்து. எனக்கு கொஞ்சம் எச்சில் ஊறினாலும் போராடி காதலித்து மணந்தது தான் சாதனை; அந்த சாகசம் இல்லாமல் பெண்ணை அடைவது குமாஸ்தாத்தனம் என்று நினைத்துக் கொண்டேன். வாழ்வில் ஒரு பெண்ணைக் கூட கவர முனையவோ, சுயமுயற்சியில் அடையவோ செய்யாத கொடானு கோடி மந்தவேக மனிதர்கள் தினமும் ஊத்தை டிபன் பாக்சுடன் மாலை வீடு திரும்பும் இந்த ஆமைப் பந்தயச் சூழலில் நம் குறி மட்டும் சோராமல் தீவிர விந்துப் போட்டியிடுகிறது. ஜட்டிக்குள் இருட்டடிப்பு செய்யப் பட்ட பெரும் வரலாறு இது.

Previous articleஉடலுறவில் எத்த‍னை வகையான‌ இன்பங்கள் உள்ள‍ன ?
Next articleஉயிர் அணுவுக்கும், பாலுறவுக்கும் தொடர்பு உண்டா?