Home சூடான செய்திகள் ஆஆஆ… என வாயை பிளக்கும் அளவுக்கு ஆண்களின் உடம்பில் உள்ள ஆண்களுக்கே தெரியாத ரகசியங்கள் இதோ..

ஆஆஆ… என வாயை பிளக்கும் அளவுக்கு ஆண்களின் உடம்பில் உள்ள ஆண்களுக்கே தெரியாத ரகசியங்கள் இதோ..

31

ஆண்களின் உடல் பற்றிய பல ஆச்சர்யமூட்டும் அதிர்ச்சிகரமான தகவல்களை ஆண்களே அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆணுடல் பற்றிய சுவாரஸ்யங்கள்

பெண்களின் மார்பகங்களில் மட்டும் தான் பால் சுரக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஆணும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவன் தான் என்பதை நாம் நினைவில் கொள்வதே இல்லை. ஆண்களின் மார்புப் பகுதியிலும் பால் சுரக்க வைக்க முடியும். ஆனால் குழந்தை பசியாறும் அளவுக்கு சுரக்கவோ குழந்தைக்கு பாலூட்டவோ முடியாது. அது ஹார்மோன்களால் தீர்மானிக்கப்படுகிறது.

பெண்கள் மாதவிலக்கால் படும் அவதி அவர்களுக்கு மட்டுமே புரியும் என்று கூறுவார்கள். ஆனால் ஆண்களுக்கும் மாதவிலக்கு பருவம் உண்டு என்றால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை. மாதத்தின் சில நாட்களில் இந்த அறிகுறிகள் இருக்கும். அந்த சமயங்களில் பெண்களைப் போல அவர்களுக்கு ரத்தப்போக்கு உண்டாவதில்லை. ஆனால், உலகில் 26 சதவீதம் பேர் இந்த விஷயத்தை உணர்ந்திருக்கிறார்களாம்.

மாதத்தின் குறிப்பிட்ட அந்த நாட்களில், கொடூரமான பசி, அதீத கோபம், சோர்வு ஆகியவை உண்டகும். ஏன் சில சமயங்களில் அழுகை கூட வருமாம். பெண்களைப் போலவே ஆண்களுக்கும் ஹார்மோன் சுழற்சி உண்டு.

ஆண்களுடைய பாதங்கள் பெண்களின் பாதங்களைவிட அகலமாக இருக்கும். ஆண் பெண் இருவரும் ஒரே உயரமுடையவராக இருந்தாலும் கூட, ஆணின் பாதத்தைவிட பெண்ணின் பாதம் அகலம் குறைவாகத்தான் இருக்குமாம்.

ஆண்களின் தாடை மற்றும் கன்னப்பகுதிகளில் முடி வளர்வதைத் தான் நாம் தாடி என்கிறோம். இந்த தாடி 5000 முதல் 25000 முடி வரை வளர்ந்திருக்குமாம்.

ஆண்களுடைய தாடி வருடத்துக்கு 6 இன்ச் வரையிலும் வளரக்கூடியது.

ஆண்கள் தங்களுடைய வாழ்நாள் முழுக்க 27 அடி நீளம் வரையிருக்கும் முடியை ஷேவ் செய்கிறார்களாம்.

ஆண்கள் ஒரு வருடத்துக்கு ஷேவ் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் மொத்தம் 60 மணி நேரம். வாழ்நாளில் 5 மாத காலங்கள் ஷேவ் செய்ய எடுத்துக் கொள்ளப்படுகிறதாம்.