Home ஜல்சா 9 மாதங்கள் கடத்தி வைத்து, கற்பழிக்கப்பட்ட பின் மீண்டு வந்து சாதித்த எலிசபெத் ஸ்மார்ட்!

9 மாதங்கள் கடத்தி வைத்து, கற்பழிக்கப்பட்ட பின் மீண்டு வந்து சாதித்த எலிசபெத் ஸ்மார்ட்!

43

12-1473672330-1thesurvivalstoryofelizabethsmartஇச்சை எனும் உணர்வு எட்டிப்பார்க்கும் போது, மனிதர்களுக்குள் இருக்கும் மனிதம், ஈரம், கனிவு, மனிதாபிமானம், கருணை போன்ற அனைத்து நல்ல குணங்களும் இறந்துவிடுகின்றன. இச்சை உணர்வின் வெளிப்பாட்டின் உச்சமாக கற்பழிக்கவும் மனிதர்களை தூண்டுகிறது. கற்பழிப்பு என்பது மரணத்தையும் விட கொடுமையான செயல். கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே விலைமதிப்பற்றதாகவும், ஆண்களுக்கு இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என்ற இலைமறைகாயான சமூக நிலையின் காரணத்தால், பெண்களை பழிவாங்க ஆண்கள் கற்பழிக்க துணிவது சாதாரணம் ஆகிவிட்டது. கற்பழிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்கள் வாழ்க்கையை மண்ணுக்கும், தீக்கும் இரையாக்கி மடிந்துள்ளனர். ஆனால், சிலர் மட்டுமே ஃபீனிக்ஸ் போல மீண்டும் புதியதாய் பிறந்து வானத்தை தொட்டு சாதித்துள்ளனர். அப்படிப்பட்ட சாதனை பெண் தான் இந்த எலிசபெத் ஸ்மார்ட்….

ஜூன் 5, 2002! அந்த சம்பவம் நடந்தது ஜூன் 5, 2002 அன்று. அப்போது எலிசபெத் ஸ்மார்ட்-க்கு வயது 14. சால்ட் லேக் சிட்டியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த எலிசபெத் ஸ்மார்ட் -ஐ படுக்கை அறையில் இருந்து இழுத்து வந்தனர் பிரைன் டேவிட் மற்றும் வண்டா இலீன் பார்ஸி.

கத்தி முனையில் மிரட்டல்! பிரைன் மற்றும் பார்ஸி எலிசபெத் ஸ்மார்ட்-ஐ கத்தி முனையில் சத்தம் போடக் கூடாது என மிரட்டினர். கத்தினால், குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்று விடுவோம் என கூறினார். இதனால் பயந்து போன சிறுமி எலிசபெத் ஸ்மார்ட், அமைதியாக அவர்களுடன் வீட்டிற்கு வெளியே போனால்.

கொன்றுவிடுங்கள்! ஒருவேளை என்ன கற்பழித்து அல்லது கொல்வதாக இருந்தால், என்னை இங்கேயே கொன்றுவிடுங்கள். வெளியே அழைத்து செல்ல வேண்டாம். என் வீட்டில் நான் ஓடிவிட்டதாக தவறாக எண்ணுவதை தன்னால் தாங்கிக் கொள்ள முடியாது என கூறினார் எலிசபெத் ஸ்மார்ட்.

கற்பழிப்பு! எலிசபெத் ஸ்மார்ட்-ஐ கடத்தி சென்ற பிரைன் மற்றும் பார்ஸி, அவரை தவறான விஷயத்தில் ஈடுபடுத்தினர். ஏறத்தாழ 9 மாதங்கள் எலிசபெத் ஸ்மார்ட்-ஐ தினமும் நான்கு முறை கற்பழித்துள்ளனர். அதுவும், பலரால்,வெவ்வேறு நபர்களால்.

அப்பா, அம்மா! அவ்வப்போது, எலிசபெத் ஸ்மார்ட்டிடம், நீ ஒழுங்காக நாங்கள் சொல்லும்படி இல்லாவிட்டால், பெற்றோரை கொன்றுவிடுவோம் என மிரட்டியும். அவர்கள் இருக்கும் இடத்திற்கு, எலிசபெத் ஸ்மார்ட்-ஐ முழுவதுமாக மூடப்பட்ட உடை அணிவித்து அழைத்து சென்று, இவரது பெற்றோருக்கே தெரியாதபடி, தொலைவில் இருந்து காட்டி வந்துள்ளனர்.

போலீஸ் கைது! 2003-ல் பிரைன் மற்றும் பார்ஸி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஒன்பது மாத கொடுமைகளுக்கு பிறகு எலிசபெத் ஸ்மார்ட் வீடு திரும்பினார். பிரைன் மற்றும் பார்ஸி-க்கு 15 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பாதை திரும்பிய எலிசபெத் ஸ்மார்ட்! உனக்கு நேர்ந்த சம்பவம் மிகவும் கொடுமையானது. ஆனால், அதை நீ தாண்டி வந்துவிட்டாய். இனிமேல் உன் வாழ்வில் ஒரு நிமிடம் கூட வீணாக விட்டுவிடாதே. உன்னை சீரழித்தவர்களுக்கு நீ கொடுக்கும் சரியான தண்டனை, அவர்கள் முன் மகிழ்ச்சியாக வாழ்வதே ஆகும், என எலிசபெத் ஸ்மார்ட்-ன் தாய் அறிவுறுத்தினார்.

ஸ்மார்ட் பவுண்டேஷன்! தனக்கு நேர்ந்த கொடுமை வேறு யாருக்கும் நடக்க கூடாது என எலிசபெத் ஸ்மார்ட், ஸ்மார்ட் பவுண்டேஷன் ஆரம்பித்தார். இந்த பவுண்டேஷன் மூலமாக, குழந்தைகளுக்கு ஏற்படும் சித்திரவதைகளை எதிர்த்து போராடினர்.

புத்தகம்! பின்னாளில், தனக்கு நேர்ந்த சோகமான சம்பவங்களை “மை ஸ்டோரி எலிசபெத் ஸ்மார்ட்” என்ற புத்தகமாக எழுதி வெளியிட்டார் எலிசபெத் ஸ்மார்ட். நமது வாழ்வில் அடக்கிகொள்ள முடியாக சோகம் ஏற்பட்டால், இறந்துவிட வேண்டும், வீழ்ந்துவிட வேண்டும் என்றில்லை. நம்மை அந்த நிலைக்கு தள்ளியவர்கள் முன், முன்னேறி வந்து சாதித்து வாழ்ந்து காட்ட வேண்டும், எலிசபெத் ஸ்மார்ட்-ஐ போல.

Previous articleமுதலிரவை செல்போனில் படம் பிடிக்க முயன்றதால் கணவனை பிரிய மனைவி முடிவு தம்பதிக்கு ‘வனிதா சகாயவாணி’ அமைப்பு அறிவுரை
Next articleமுத்தம் பற்றிய முழுத் தகவல் அறிக்கை!