Home ஆண்கள் ஆண்குறியைப் பெரிதாக்கும் முறைகள்: ஆண்குறியை எப்படிப் பெரிதாக்குவது?

ஆண்குறியைப் பெரிதாக்கும் முறைகள்: ஆண்குறியை எப்படிப் பெரிதாக்குவது?

144

ஒரு மனிதனின் பாலியல் செயல்திறன் மற்றும் இனப்பெருக்கத் திறன் அவனது ஆண்குறியின் அளவுடன் பெரும்பாலும் தவறாகத் தொடர்புபடுத்தப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக, ஆண்குறியின் அளவு ஆண்களுக்கு பெரும் பதட்டம் உண்டாக காரணமாகிவிடுகிறது. சாதாரண அளவில் ஆண்குறி கொண்டுள்ள பல ஆண்கள் அவர்களது ஆண்குறி சிறியதாக இருப்பதாக கவலைப்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆண்குறியின் அளவு குறித்த கவலையானது அவர்களது பாலியல் நம்பிக்கை மற்றும் செயல்திறனை பாதித்துவிடும். மேலும் சிலருக்கு விறைப்புத் தன்மை அடைவதில் சிரமம் ஏற்பட இது காரணமாகிவிடலாம்.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் சிறுநீரக சிறப்பு மருத்துவரிடம். குறிப்பிடத்தக்க ஆண் நோயாளிகள் ஆண்குறி விரிவாக்க அறுவை சிகிச்சை குறித்து பல கேள்விகள் கேட்கிறார்கள். அவற்றில் பெரும்பாலானவர்களுக்கு, பிரச்சினை கீழே இல்லை, ஆனால் மேலே மூளையில் இருக்கிறது. அறுவை சிகிச்சை செய்து தங்களது ஆண்குறியை பெரிதாக்கிக் கொள்ள நினைக்கும் பல ஆண்களுக்கு அவர்களது ஆண்குறி சாதாரண அளவிலும், முழுமையான செயல்திறனுடனும் இருக்கிறது, ஆனால் அவர்கள் தங்களது ஆண்குறி சிறியதாக இருப்பதாக கற்பனை செய்து கொள்கிறார்கள் (இது பெனைல் டிஸ்மார்பிசம் குறைபாடு என அறியப்படுகிறது).

இது ஆண்குறி விரிவாக்க பொருட்கள் ஒரு பெரிய தொழில்துறையாக உருவாக வித்திட்டிருக்கிறது. ஆண்குறியை பெரிதாக்குவதாக கூறிக்கொண்டு ஆன்லைனில் பெரும்பாலும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படாத மாத்திரைகள், சப்ளிமெண்டுகள், எண்ணெய்கள் மற்றும் கிரீம்கள் கிடைக்கின்றன. இந்த சிகிச்சைகளில் பல பெரும்பாலும் பலனற்றவையாக, அதிக செலவுள்ளவையாக மற்றும் தீங்கு விளைவிக்கக் கூடியவையாக உள்ளன. இதில் அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை அல்லாதவை உள்ளிட்ட இரண்டு முறைகளிலும் தேர்வுகள் இருக்கின்றன.

அறுவை சிகிச்சை அல்லாத முறைகள் (Non-Surgical Methods)
மாத்திரைகள் மற்றும் களிம்புகள் (Pills and Ointments)

ஆண்குறியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாக கூறிக்கொண்டு மூலிகைகள், வைட்டமின்கள், ஹார்மோன்கள் அல்லது கனிமங்கள் அடங்கிய பல மாத்திரைகள், களிம்புகள், லோசன்கள், கிரீம்கள் இருக்கின்றன. ஆனால் இவற்றில் ஏதும் வேலை செய்யாது. எந்த மாத்திரை அல்லது லோசனும் ஆண்குறியின் விரிவாக்கத்திற்கு காரணமாவதாக மருத்துவச் சான்றுகள் ஏதுமில்லை. இவற்றில் சில உடலுக்கு கேடு விளைவிப்பதாகவும் இருக்கக் கூடும்.

ஜெல்கிங் (Jelqing)

ஜெல்கிங் எனப்படுவது ஆண்குறியை ஈர்த்து, அதனை அடிப்பகுதியில் இருந்து நுனி வரை தொடர்ந்து மெதுவாக உருவிவிடக்கூடிய முறை ஆகும். இது உருவி விடுதல், மில்கிங் அல்லது ஆண்குறி நீட்சி எனவும் அழைக்கப்படுகிறது. ஆண்குறிக்குள் இரத்தத்தை துரிதமாக செலுத்தி, ஆண்குறியின் விறைப்புத் திசுவின் இரத்தம் வைத்திருக்கும் திறனை அதிகப்படுத்துவதே இந்த இழுத்துவிடுதல் பயிற்சியின் அடிப்படை ஆகும். எனினும், ஜெல்கிங்கினால் ஆண்குறியின் அளவை அதிகரிக்கச் செய்ய முடியும் என்ற அறிவியல்பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை.

இழுவை (Traction)

ஆண்குறி இழுவை சிகிச்சை என்பது தொய்ந்த ஆண்குறியை நீளும் ஆண்குறியாக மாற்றும் வகையில் அதிகரிக்கும் இயந்திர இழுவை (துரித இழுவை) செய்யப்படும் முறை ஆகும். இந்த துரித இழுவையானது ஆண்குறியின் மீது எடைகளை பிரயோகிக்கும் வடிவமாகவோ அல்லது ஆண்குறி இழுவை சாதனம் என அழைக்கப்படும் சிறப்பு சாதனத்தைப் பயன்படுத்துவதாகவோ இருக்கலாம். இவ்வாறு எடைகளை ஆண்குறியில் தொங்கவிடுவதால் அது நீள்வதாக ஆதாரம் ஏதுமில்லை. மேலும் இதனால் ஆண்குறியில் காயம் ஏற்பட்டுவிடக்கூடும். இதில் மற்றொரு முறை ஆண்குறி இழுவை சாதனத்தைப் பயன்படுத்துவதாகும். ஆண்குறி அசாதரணமாக வளைந்திருக்கக் கூடிய நிலையான பெரோனியின் நோய் என அறியப்படும் நிலைகளில் ஆண்குறி இழுவை சாதனங்கள் பெரும்பாலும் ஆய்வுசெய்ய பயன்படுகின்றன.

இந்த ஆண்குறி இழுவை சாதனம் பிளாஸ்டிக்கால் ஆன ஆதரவு ரிங், ஒரு சிலிக்கான் பேண்ட் மற்றும் இரண்டு மாறும் தண்டுகளால் ஆனது. ஆண்குறியானது இழுவை சாதனத்தில் உள்ள தொட்டிலில் தொங்கவிடப்படுகிறது. ஒவ்வொரு சிலவாரங்களுக்குப் பிறகும், மாறும் தண்டுகள் மற்றும் தொட்டில் ஃபிரேமுக்கு சிறு உலோக நீட்டிப்பு செய்வதன் மூலம் படிப்படியாக மென்மையாக துரித இழுவை அதிகரிக்கப்படுகிறது. இந்த துரித இழுவை சாதனம் தினமும் 6 முதல் 8 மணி நேரம் வரை (சில ஆய்வுகளில் ஆறு மாதங்கள் வரை) பயன்படுத்தப்படும். சில ஆராய்ச்சிகளில் இந்த இழுவை சாதனம் 3-4 மாதங்களுக்கு தினமும் 6 முதல் 9 மணி நேரம் வரை பொருத்தப்பட்டதில் சராசரியாக ஆண்குறி நீளம் 1.7 – 1.8 செ.மீ அதிகரித்துள்ளது. இழுவை சாதனங்கள் ஆண்குறியை நீட்டிப்பதற்கான மற்றும் குறைபாட்டை சரிசெய்வதற்கான சில சாதகமான ஆதாரங்கள் இருக்கின்றன. இதனைப் பயன்படுத்தும் நபர் மிகவும் தாங்கும் திறனுடையவராக இருக்க வேண்டும். இதனைப் பயன்படுத்தும் நபருக்கு மிகவும் அதிக உடன்பாடும், உறுதியும் தேவை. எனினும், அவர்கள் ஒரு அனுபவமிக்க மருத்துவரின் (சிறுநீரக சிறப்பு மருத்துவர் அல்லது நோயியல் சிறப்பு மருத்துவர்) வழிகாட்டுதலின் கீழ் இதனை பயன்படுத்த வேண்டும்.

வெற்றிட சாதனங்கள் (ஆண்குறி குழாய்கள்) (Penile pumps)

Penis Enlargement Methods: Know More

வெற்றிட விறைப்பு சாதனம் (VED) முக்கியமாக ஆண்மையின்மை (விறைப்புத் தன்மை சீர்கேடு – ED) சிகிச்சைக்காக வடிவமைக்கப்பட்டது. ஆண்குறி குழாய்கள் ஆண்குறியைச் சுற்றி நிறுவப்படும் குழாய் வடிவ சாதனமாகும். மேலும் இதனைச் சுற்றி காற்று அடித்து உந்தப்பட்டு ஒரு வெற்றிடம் உருவாகும். இந்த வெற்றிடம் ஆண்குறியினுள் இரத்தத்தை ஈர்க்கும், இது விறைப்புத்தன்மை உருவாக காரணமாகலாம். புரோஸ்டேட் புற்றுநோய்க்கான புரோஸ்டேட்டக்டமி சிகிச்சை மேற்கொள்ளும் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை அடைய ஒரு மறுவாழ்வு நடவடிக்கையாக இதனைப் பயன்படுத்தும் போது, இது ஆண்குறியை பாதுகாப்பதற்கு அல்லது ஆண்குறி நீளம் சற்றே அதிகரிப்பதற்கு உதவுதாக அறியப்படுகிறது. ஆண்குறிக் செயற்கை உள்பதியவைத்தல் சிகிச்சை மேற்கொள்ளும் ED ஆல் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களுக்கு இதனைப் பயன்படுத்தி ஆய்வு செய்ததில், இது அவர்களது ஆண்குறி நீளம் பராமரிக்கப்பட உதவுவதாக அறியப்படுகிறது.

மக்கள் ஆண்குறியின் நீளம் அதிகரிக்க ஒரு உடல் சிகிச்சையாக (பல மாதங்களுக்கு ஒவ்வொரு வாரமும் மூன்று முதல் நான்கு 30 நிமிடங்கள் கொண்ட அமர்வுகள்) VED -ஐ முயற்சிக்கிறார்கள். எனினும், இதனால் ஆண்குறியின் நீளம் அதிகரிப்பதற்கான எந்த மருத்துவச் சான்றுகளும் இல்லை. மேலும், ஆண்குறி குழாய்களை அதிகம் பயன்படுத்துவதால் ஆண்குறி திசு சேதமாகிவிடக்கூடும் (ஃபைப்ரோசிஸ் என அறியப்படும் வடு உருவாக்கத்திற்கு வழிவகுக்கும்), இது பலவீனமான விறைப்புத்தன்மை ஏற்பட வழிவகுத்துவிடும். இதில் வெற்றிட வரம்பி பயன்படுத்தப்படாத போது, அதன் துரித நிலை அதிகரித்து ஆண்குறியில் காயம் ஏற்பட காரணமாகிவிடும். மேலும் கடுமையான சூழல்களில், ஆண்குறி திசுவில் தீவிர காயம் ஏற்படக் கூடும்.

அறுவை சிகிச்சை முறைகள் (Surgical Methods)

ஆண்குறி நீட்டிப்பு அறுவை சிகிச்சை (Penis Lengthening Surgery)

ஆண்குறியின் பின்னால் உள்ள எலும்புடன் அதனை இணைக்கும் தசை நார் அதன் தண்டு சிறிதளவு வெளியேறும்படி வெட்டிவிடப்படுகிறது. இந்த தசை நார் வெட்டி விடப்படும் போது, ஆண்குறி கீழே தொங்கும், இதனால் அது நீண்டதாகத் தோன்றும். இந்த தசை நார் பொதுவாக விறைப்புத்தன்மை அடைந்த ஆண்குறி மேல்நோக்கி இருப்பதற்கு உதவுவதற்கு செயல்படுகிறது. எலும்பில் இருந்து இந்த தசை நார் வெட்டப்பட்ட பிறகு, ஆண்குறி விறைப்புத்தன்மையில் இருக்கும் போது சற்று கீழே இறங்கி இருக்கலாம். இந்த நடைமுறையினால் ஆண்குறியின் நீளம் சராசரியாக 1.3 செ.மீ அதிகரிக்கலாம். எனினும், இந்த அறுவை சிகிச்சையினால் ஆண்களுக்கு திருப்தி ஏற்படும் விகிதம் மிகவும் குறைவாகவே (35%) இருக்கிறது.

பிற ஆண்குறி நீட்டிப்பு முறைகள் ஆண்குறியின் வெளிப்பகுதியை நீட்டிப்பதற்காக தோல் மடிப்பை பயன்படுத்துவதை உள்ளடக்கியதாகும். மேலும், தசை நார் வெளிப்பாடு தோல் மடிப்பு நடைமுறையுடன் இணைந்து செய்யப்படும் போது 1-2 செ.மீ நீளம் அதிகரிக்கக் கூடும். வடுக்கள், கணு உருவாக்கம், கீழறங்கி தொங்கும் ஆண்குறி, தொற்று மற்றும் ஆணுறுப்பில் குறைபாடு உள்ளிட்டவை இந்த வளர்ச்சி அறுவை சிகிச்சையின் முக்கிய வரம்பெல்லையாகும்.

ஆண்குறி சுற்றளவு அதிகரிப்பு அறுவை சிகிச்சை (Penis girth increasing surgery)

இந்த அறுவை சிகிச்சை முறையில், ஆண்குறியின் தடிமன் (சுற்றளவு) அதிகரிக்கிறது. ஆண்குறியின் அடிப்பகுதியில் உள்ள தோலில் வெவ்வேறு திசுக்களை (கொழுப்பில்லாத அல்லது அடித்தோல் ஒட்டு) அல்லது மக்கும் பொருளை பொருத்துதல் இதனை அடைவதற்கான ஒரு முறை ஆகும். ஆண்குறியில் உள்ள பஞ்சு போன்ற விறைப்புத் திசுவுக்கு கூடுதல் பலமளிக்க (கேவர்னோசல் பெரிதாக்கல் நடைமுறை) உடலில் உள்ள நரம்புகளை (சேபனஸ் நரம்பு ஒட்டுக்கள் போன்றவை) பயன்படுத்துவது மற்றொரு நடைமுறை ஆகும். கொழுப்பு உட்செலுத்துதல்கள் மீண்டும் உறிஞ்சப்பட்டு சுருங்கி விடுவதால் ஏமாற்றமளிக்கும் முடிவுகளைக் கொண்டிருக்கின்றன. மேலும் இதில் கொழுப்பு உருண்டையாக பரவுவதால் கட்டிகள் ஏற்பட காரணமாகிவிடுவதுடன், ஆண்குறியின் வடிவமும் உருமாறிவிடக் கூடும். ஆண்குறியின் தோலுக்கு கீழ் மக்கும் ஃப்ரேம்களை உள்நுழைப்பதால் சிறந்த முடிவுகள் ஏற்படுகின்றன.

லிப்போசக்சன் (Liposuction)

முன்னால் நீட்டிக்கொண்டிருக்கும் தொப்பை உள்ள பருமனான ஆண்களுக்கு ஆண்குறியின் அடிப்பகுதி கொழுப்பான தோலில் புதைக்கப்பட்டதைப் போன்று தோன்றலாம். இந்த கொழுப்பை லிப்போசக்சன் முறையில் நீக்குவதம் மூலமாக ஆண்குறியானது தோலினுள் குறைவாக புதைந்திருப்பது போல் தோன்றும் மற்றும் தண்டுப்பகுதி பெருமளவு வெளியே தெரியும். ஆண்குறியானது ஒன்று அல்லது இரண்டு சென்டி மீட்டர் நீண்டிருப்பது போல் தோன்றும், எனினும் அந்த நபர் உணவு மற்றும் உடற்பயிற்சியை பராமரிக்கவில்லை எனில், அவருக்கு மீண்டும் எடை மற்றும் கொழுப்பு கூடி குறைந்த நாட்களே இந்த விளைவுகள் தோன்றலாம். லிப்போசக்சன் நடைமுறையும் அதன் அபாயங்களைக் கொண்டிருக்கிறது.

ஆண்குறி விரிவாக்க நடைமுறைகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கான சரியான நபர்கள் யார்? (Who are the right candidates for penis enhancement procedures and surgery?)

5 செ.மீ நீளத்திற்கும் குறைவான மிகவும் சிறிய ஆண்குறி (நுண்ணிய ஆண்குறி) கொண்ட ஆண்கள் இந்த நடைமுறைகள் பற்றிய ஆபத்துகள் மற்றும் நன்மைகளை விரிவாக தெரிந்து கொண்ட பிறகு ஆண்குறி விரிவாக்க அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.
தங்களது ஆண்குறியின் அளவு குறித்து ஏக்கப்படும் மற்றும் ஆண்குறி விரிவாக்க நடைமுறைகளுக்காக அறுவை சிகிச்சை நிபுணரை சந்திக்கும் பெரும்பாலான ஆண்கள் அவர்களது ஆண்குறியின் புற அமைப்பு குறித்து பயந்தவர்களாகவும், அவர்களது சாதாரண அளவில் உள்ள ஆண்குறி குறித்த தேவையற்ற கவலை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அத்தகைய ஆண்களுக்கு முதலில் எந்த நடைமுறையும் செய்யப்படுவதற்கு முன் அத்தகைய மனநிலையில் இருந்து வெளிவர ஆலோசனை தரப்படுகிறது. இத்தகைய அதிகரித்தல் நடைமுறைகள் எப்போதும் வெற்றிகரமாக இருப்பதில்லை, அறுவை சிகிச்சைக்குப் பிறகு திருப்தி ஏற்படுதல் பொதுவாக மோசமாக இருக்கிறது மற்றும் தொற்று, வடு உருவாக்கம், முடிச்சு உருவாக்கம், முரண்பாடான ஆண்குறி குறுக்கம், உட்செலுத்தப்படும் பொருள் இடம்பெயர்வு மற்றும் பாலியல் பிறழ்ச்சி போன்ற சிக்கல்கள் பொதுவாக ஏற்படும் முதலியவை அவர்களுக்கு விளக்கி புரிந்துகொள்ள வைக்கப்படுகிறது. இந்த மனநிலையில் உள்ள பெரும்பாலான ஆண்களுக்கு முறையான ஆலோசனை வழங்குவதால் அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நினைப்பு குறைந்துவிடலாம்.
சுருக்கமாக, ஆண்குறி விரிவாக்க அறுவை சிகிச்சையினால் 1-2 செ.மீ நீளமும், 1-2.5 செ.மீ சுற்றளவும் அதிகரிக்கக் கூடும். ஆனால் இந்த நடைமுறைகள் தேவையற்ற சிக்கல்களை விளைவிக்கும் ஆபத்தையும், ஏமாற்றமளிக்கும் திருப்திகர விகிதத்தையும் கொண்டதாக இருக்கின்றன. ஆண்குறி விரிவாக்கத்திற்கான காஸ்மெடிக் அறுவை சிகிச்சைகள் மிகவும் சர்ச்சைக்குரியதாக இருக்கின்றன. பெரும்பாலான இந்த நடைமுறைகள் இன்னும் ஆய்வுக்குட்பட்டவையாகவே இருக்கின்றன. மேலும் மற்ற எந்த குறைந்தபட்ச அளவீடுகளும் தோல்வியடைந்த பிறகு இறுதியாக உண்மையிலேயே மிகவும் சிறிய ஆண்குறி கொண்டுள்ள ஆண்களுக்கு மட்டுமே இவை பரிந்துரைக்கப்படுகின்றன.