Home பெண்கள் உடல் நலத்துடன் முக அழகை பெற இதோ சில குறிப்புக்கள்..!

உடல் நலத்துடன் முக அழகை பெற இதோ சில குறிப்புக்கள்..!

15

உடல் நலத்திற்கு சமமாக முக அழகும் முக்கியம். முக அழகையும் உடல் நலத்துடன் பெற்றால் மகிழ்ச்சி தானே. அந்த வகையில் பழங்களை கொண்டு எப்படி உடல் நலத்தோடு முக அழகு பெறுவது என்று பார்ப்போம். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சளித் தொல்லையையும், காய்ச்சலையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. சருமத்திற்கும் ஏற்றது. இதனை பழமாகவோ, ஜூசாகவோ பருகி வரலாம்.

பப்பாளி பழத்தை சாப்பிட்டு வருவதும், ஆரோக்கிய சருமத்திற்கு முக்கியமானது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் ஆப்பிளின் பங்களிப்பு மகத்தானது. சருமம் உலர்ந்து போவதை தடுத்து பளபளப்பை தக்க வைப்பதற்கும் ஆப்பிள் சாப்பிட்டு வர வேண்டும்.

உடல் நலத்துடன் முக அழகை பெற இதோ சில குறிப்புக்கள்..!

அதைத்தொடர்ந்து, இளமை தோற்றத்தை தக்க வைக்கும் மாதுளை, குளிர்காலத்தில் சரும ஜொலிப்பிற்கு உதவும். தோல் சுருக்கங்களை போக்குவதுடன், வயதான தோற்றத்தை தவிர்த்திட குளிர்காலத்தில் தவறாமல் மாதுளை சாப்பிட்டு வர வேண்டும்.