Home பாலியல் Problems In Adolescent Girls இளம்வயது பெண்களின் மாதவிடாய்ப் பிரச்சனைகள்

Problems In Adolescent Girls இளம்வயது பெண்களின் மாதவிடாய்ப் பிரச்சனைகள்

70

ஒரு பெண் பருமடைந்து முதல் மாதவிடாய் வந்த பிறகு, தனது மாதவிடாய் சுழற்சி பற்றி அவருக்கு பல்வேறு சந்தேகங்களும், கவலைகளும் எழுவது இயல்பானது. பெரும்பாலான பெண்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் கூட, எது இயல்பானது எது வழக்கத்திற்கு மாறானது என்பதைப் புரிந்துகொள்வதில் சிரமம் உள்ளது.

அதுமட்டுமின்றி, இளம்பெண்களில் பலர், தமக்கு ஏற்படும் சீரற்ற மாதவிடாய் சுழற்சி பற்றியோ, மாதவிடாய் வராமல் போவது பற்றியோ பெற்றோரிடம் தெரிவிப்பதில்லை. சிலருக்கு, வேறு ஏதேனும் உடல் பிரச்சனையின் காரணமாக இயல்புக்கு மாறான இரத்தப்போக்கு ஏற்படுவது பற்றிய விழிப்புணர்வு இருப்பதில்லை, இன்னும் சிலர் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் சாதாரணமான சிறு மாற்றங்கள் குறித்தும் கவலைப்பட்டு மருத்துவரிடம் செல்கின்றனர்.

வளர்ந்த இளம்பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தமாக ஏற்படும் பொதுவான பிரச்சனைகள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். இந்தப் பிரச்சனைகளுக்கு மருத்துவக் கவனிப்பு தேவைப்படும்.

1. மாதவிடாயின்மை (அமினோரியா) (Amenorrhea (Absence of Periods))

15 வயதிற்குள் அல்லது பருவமடைவதற்கான அறிகுறிகள் தென்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படாவிட்டால், அவருக்கு மாதவிடாயின்மை எனும் பிரச்சனை உள்ளது எனக் கூறலாம்.

வழக்கமாக இதற்குக் காரணமாக இருப்பது மரபியல் பிரச்சனைகளும் ஹார்மோன் பிரச்சனைகளுமே. சில சமயம் இனப்பெருக்க உறுப்புகள் உருவாவதில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் இப்பிரச்சனை ஏற்படலாம்.

ஹார்மோன்களின் சமநிலை இல்லாமல் போனாலும் இரண்டாம் நிலை மாதவிடாயின்மை ஏற்படலாம்.

இதற்கு சாத்தியமான காரணங்கள் (Possible Causes)

இரண்டாம் நிலை மாதவிடாயின்மை ஏற்படுவதற்கான மிகப் பொதுவான காரணம் கர்ப்பமாகவே இருக்கும். ஆகவே, பாலியல் செயல்களில் ஈடுபடும் பெண்கள் கர்ப்பப் பரிசோதனையும் செய்துகொள்ள வேண்டும்.

மற்ற காரணங்கள்:

கணிசமாக எடை குறைதல் அல்லது கூடுதல்
மன அழுத்தம்
பசியின்மை
அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி அல்லது மிகக் கடினமான உடற்பயிற்சி
தைராய்டு கோளாறுகள்
பல்வேறு ஹார்மோன் அளவுகளைப் பாதிக்கின்ற பிற பிரச்சனைகள்
நோய் கண்டறிதல் (Diagnosis)

மகளிர் நலவியல் மருத்துவர் (கைனக்காலாஜிஸ்ட்) பெண்ணின் மருத்துவ வரலாற்றை ஆய்வு செய்வார், அதன் பின் பிற மருத்துவப் பிரச்சனைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த, உடல் பரிசோதனையும் சில ஆய்வகப் பரிசோதனைகளையும் செய்வார்.

சிகிச்சை (Treatment)

இந்தப் பிரச்சனைக்கான சிகிச்சையானது, நபரின் வயது, ஒட்டுமொத்த ஆரோக்கியம், காரணம், அவரது விருப்பத் தேர்வுகள் போன்றவற்றைப் பொறுத்து அமையும். இந்தப் பிரச்சனைக்குக் காரணமாக இருக்கும், மருத்துவப் பிரச்சனையைச் சரிசெய்தல், உணவுப் பழக்கத்தில் மாற்றம் செய்தல், எடை குறைத்தல் அல்லது ஹார்மோன் சிகிச்சைகள் போன்ற சிகிச்சை முறைகள் உள்ளன. பருவமடையும் காலத்தில் வழக்கமாக ஏற்படும் மாற்றத்தின் காரணமாகவே மாதவிடாயின்மை ஏற்பட்டுள்ளது என மருத்துவர் கண்டறிந்தால், இன்னும் சிறிது காலம் அதன் போக்கு எப்படி உள்ளது எனக் கவனிக்குமாறு மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

2. மாதவிடாய் வலி (Dysmenorrhea)

மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலி

காரணங்கள் (Causes)

இது இரண்டு வகைகளில் காணப்படலாம்:

முதன்மை மாதவிடாய் வலி என்பது மாதவிடாய் தொடங்கியதில் இருந்தே காணப்படும், வேறு ஏதேனும் நோய்களின் காரணமாக ஏற்படாமல், புரோஸ்டோகிளான்டின் எனப்படும் வேதிப்பொருளால் ஏற்படும் வலியாக இருக்கும். இந்த ஹார்மோன் சிறிதளவு அதிகரித்தாலும், லேசான தசைப்பிடிப்பு வலிகள் ஏற்படும். எனினும், இந்த ஹார்மோன் மிகவும் அதிகமானால் தசைப்பிடிப்பு வலி, முதுகுவலி, தலைவலி, குமட்டல், வாந்தி போன்றவை அதிகமாக இருக்கலாம்.
இரண்டாம் நிலை மாதவிடாயின்மை என்பது, கருப்பையில் நார்த்திசுக்கட்டிகள் (ஃபைப்ராய்டுகள்) அல்லது பாலிப் எனப்படும் கட்டிகள் அல்லது கீழ் இடுப்புப்பகுதி அழற்சி நோய் (PID) போன்ற உடல் பிரச்சனைகளால் ஏற்படுகிறது.
நோய் கண்டறிதல் (Diagnosis)

முதலில் பெண்ணின் மருத்துவ வரலாற்றை மருத்துவர் கேட்டறிவார், அதன் பின் சில உடல் பரிசோதனைகள் செய்யப்படும்.

பிற மருத்துவப் பிரச்சனைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக, சில மருத்துவச் சோதனைகள் செய்யப்படலாம். அல்ட்ராசவுண்ட், லேப்ராஸ்கோப்பி மற்றும் ஹிஸ்ட்ரோஸ்கோப்பி போன்ற பிற கூடுதல் சோதனைகளும் செய்யப்படலாம்.

3. சிகிச்சை (Treatment)

நோய் கண்டறிந்த முடிவுகளின் அடிப்படையில், தகுந்த சிகிச்சை முடிவு செய்யப்பட்டு வழங்கப்படும். வயது, ஒட்டுமொத்த ஆரோக்கியம், அவரது விருப்பத் தேர்வுகள் போன்றவற்றைப் பொறுத்து சிகிச்சை முறை தேர்வு செய்யப்படும்.

மாதவிடாய் வலிக்கு அளிக்கப்படும் சில சிகிச்சைகள்:

ஸ்டிராய்டல்லாத அழற்சி எதிர்ப்புத் தடுப்பு மருந்துகள் (நாப்ராக்சின் அல்லது ஐப்யூபுரூஃபேன் போன்றவை)
உடற்பயிற்சி
உணவுப்பழக்கத்தில் மாற்றம்
ஹார்மோன் சிகிச்சை
மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளின் தொகுப்பு (PMS)

மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளின் தொகுப்பு (PMS) என்பது, ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் வருவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பு தோன்றும் பல்வேறு அறிகுறிகளின் தொகுப்பாகும். அது தற்காலிகமாக இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் இருக்கலாம்.

இந்த அறிகுறிகளில் சில:

உளவியல் அறிகுறிகள்: எரிச்சல், பதற்றம், மனநிலை மோசமாதல், கோபம், உணர்ச்சி மிகுதல், தூக்கத்தில் பிரச்சனைகள் போன்றவை
நீர் கோர்த்துக்கொள்ளுதல்: கை கால் வீங்குதல், மார்பகங்கள் கனமாவது போன்ற உணர்வு, மார்பகங்கள் இறுக்கமடைதல், மாதவிடாயின்போது எடை கூடுதல்.
வயிறு சம்பந்தப்பட்ட அறிகுறிகள்: அடிவயிற்றில் வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை.
சருமப் பிரச்சனைகள்: முகப்பருக்கள், அரிப்பு, பிற சருமப் பிரச்சனைகள் மோசமாதல் போன்றவை.
நரம்பியல் மற்றும் இரத்தக்குழாய் சம்பந்தப்பட்ட அறிகுறிகள்: தலைவலி, வியர்த்தல், கை கால்களில் உணர்திறன் அதிகரித்தல், தசைப் பிடிப்பு வலிகள்
பசியில் மாற்றங்கள், சாபிடுவதர்கான உந்துதல், பாலுறவில் விருப்பம் குறைதல் போன்ற பிற அறிகுறிகளும் இருக்கலாம்.
காரணங்கள் (Causes)

உடலில் சுழற்சி முறையில் நடைபெறும் ஹார்மோன்களின் (ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரோன்) அளவிலான ஏற்ற இறக்கம் முக்கியக் காரணமாக உள்ளது.

மூளையில் இருக்கும் செரோட்டோனின் வேதிப்பொருளின் அளவிலான ஏற்ற இரக்கத்தால் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று கருதப்படுகிறது, மேலும் களைப்பு, சாப்பிடுவதற்கான உந்துதல் மற்றும் தூக்கத்திலான பிரச்சனைகள் போன்றவற்றுக்கும் இது காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பிற உயிரியல், உளவியல், சமூகவியல் மற்றும் கலாச்சாரக் காரணிகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

சிகிச்சை (Treatment)

சில பெண்களுக்கு, வாழ்க்கை முறையில் சில எளிய மாற்றங்களைச் செய்தாலே, PMS அறிகுறிகள் குறையக்கூடும். பின்வரும் மாற்றங்களைச் செய்யுமாறு உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம்:

சரிவிகித உணவுப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்
வழக்கமான உடற்பயிற்சி
போதுமான அளவு தூக்கம் மற்றும் ஓய்வு
புகைபிடிப்பதைத் தவிர்த்தல்
பின்வருபவை போன்ற மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம்:

அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (போன்ற ஆஸ்பிரின் அல்லது ஐப்யூபுரூஃபேன் போன்றவை)
வாய்வழி கருத்தடை மருந்துகள்
வைட்டமின் சத்து மருந்துகள்
ஆன்டிடிப்ரசன்ட் மருந்துகள்
ஹார்மோன் சிகிச்சைகள்
பலருக்கு மாதவிடாயின்போது அல்லது அதற்குப் பிறகு சங்கடப்படுத்தும் அறிகுறிகள்ஏற்படுகின்றன. சில பெண்களுக்கு, இந்த அறிகுறிகள் தினசரி செயல்பாடுகளை எதிர்கொள்ளமுடியாத அளவுக்குக் கடுமையாக இருப்பதுண்டு. மாதவிடாயின்போது அறிகுறிகள் மிகக்கடுமையாக இருந்தால், அல்லது தினசரி செயல்பாடுகளைச் செய்ய முடியாதபடி அவைதொந்தரவாக இருந்தால், உங்கள் பெற்றோரிடம் பேசுங்கள், மருத்துவரிடம் சென்றுஆலோசனை பெற்று தகுந்த நடவடிக்கை எடுங்கள்.