Home பாலியல் Tamil x videos ஆபாச படங்களுக்கு அடிமையாகி இருக்கிறீர்களா?

Tamil x videos ஆபாச படங்களுக்கு அடிமையாகி இருக்கிறீர்களா?

192

ஆபாசப்படைப்புகள் என்பது இலக்கியம், ஆடியோ, புகைப்படங்கள், திரைப்படங்கள், அனிமேசன், பொம்மைகள் மற்றும் வீடியோ விளையாட்டுக்கள் உள்ளிட்ட தொடர்பு/ பரிமாற்ற சாதனங்களை பாலியல் உற்சாகத்தைத் தூண்டும் நோக்கத்திற்காக பயன்படுத்துவதாகும். நீண்ட காலம் ஆபாசப்படைப்புகளில் கவனம் செலுத்துவது ஒருவரது தனிப்பட்ட, தொழில்சார்ந்த மற்றும் சமூக நடத்தைகளில் பாதிப்பு ஏற்படும் வகையில் அடிமையாவதற்கு வழிவகுத்துவிடக்கூடும்.

காரணங்கள் (Causes)

ஆபாசப்படைப்புகளுக்கு அடிமையாவதற்கு வழிவகுக்கும் மிகவும் பொதுவான காரணிகள் பின்வருமாறு:

1. எளிதில் அணுகுதல் (Easy access)

’இணையம்’ மற்றும் ‘உலகளாவிய வலை” -இன் வருகையானது ஆபாசப்படைப்புகளின் விநியோகம் மற்றும் அணுகலில் கணிசமான அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிடி/ டிவிடி அல்லது புத்தகக் கடைகளுக்கு நேரில் சென்று ஆபாசப்படைப்புகளை ஒருவர் பெறுவது மிகச்சுலபமாக இருக்கிறது. மேலும் இவற்றை வீட்டிலேயே செளகரியமான நேரத்தில் பயன்படுத்த முடிகிறது. மவுசில் ஒரு கிளிக் செய்வதன் மூலமாகவே, எண்ணற்ற ஆபாச வலைதளங்களை நீங்கள் எளிதில் பார்வையிட முடியும்.

2. பாலியல் தொடர்பான தங்களது கேள்விகளுக்கு பதில் பெறும் முயற்சியாக (தகவல் தரும் ஒரு மூலமாக) (Attempt to solve their queries about sex (as a source of information))

இந்தியாவில், பாலுறவைப் பற்றிப் பேசுவது என்பது இன்னும் நமது சமூகத்தில் ஒரு தகாத செயலாகக் கருதப்படுகிறது, பலருக்கு இதைப் பற்றிய அடிப்படை விவரமே இருப்பதில்லை. இளம் வயதினருக்கு ‘பாலுறவு’ ஒரு ‘மர்மமான’ விசயமாக இருப்பதால், அவர்கள் தங்களது கேள்விகளுக்கான விடையை இணையத்தில் தேடுகிறார்கள். இணையத்தில் உள்ள ஆபாசத் தகவல்கள் அவர்களுக்கு உடனடியாக அவர்களது கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மூலங்களாக இருக்கின்றன. இந்த செயல்பாட்டின் போது ஒருவர் ஆபாசப்படைப்புகளுக்கு அடிமையாக வாய்ப்புகள் இருக்கின்றன.

3. பாலியல் கிளர்ச்சி (Sexual arousal)

சிலர் சுய இன்பம் அல்லது உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு தங்களை தூண்டிவிட்டுக் கொள்வதற்காக ஆபாசப்படைப்புகளைக் காண்கிறார்கள்.

4. உறவுகளைக் காத்துக்கொள்ள (Save relationship)

சிலர் நண்பர்கள் அல்லது உடன் பணிபுரிபவர்கள் முதலிய நெருங்கி தொடர்புகொள்ளும் நபர்களிடம் தங்களது பாலியல் ஆசைகளை வெளிப்படுத்துவது தீங்கு விளைவித்துவிடலாம் என நினைக்கக்கூடும். அத்தகைய நபர்கள் அவர்களது ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள ஆபாசப்படைப்புகளைப் பார்க்கக்கூடும்.

ஆபாசப்படைப்புகளுக்கு அடிமையாவதன் விளைவுகள் (Consequences of porn addiction)

ஆபாசப்படைப்புகளுக்கு அடிமையாவது ஒருவரின் வாழ்க்கையைப் பல விதங்களில் பாதிக்கிறது:

1. வேலை, நிதிநிலை மற்றும் மதிப்பு (Work, finances and reputation)

ஆபாசப்படைப்புகளுக்கு அடிமையான நபர்களுக்கு, வேலை செய்யும்போதும் தொடர்ந்து மீண்டும் மீண்டும் அந்த ஞாபகம் வரும், இதனால் அவர்கள் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகும்.  ஒரு (2000வது ஆண்டு) கணக்கீட்டின்படி, உலகளவில் பாலியல் தொழில்களில் ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி முதல் 50 ஆயிரம் கோடி வரை விற்பனை நடக்கிறது.  சிலர் தங்கள் அலுவலக நேரங்களில் ஆபாச படம் பார்த்து பிடிபட்டு தங்களது வேலையை இழந்ததற்கான சான்றுகளும் உள்ளன.

2. உறவில் பிரச்சனைகள் (Relationship issues)

ஆபாச வீடியோக்களைப் பார்ப்பது என்பது மனதளவில் ஒரு கற்பனை பாலியல் உலகத்தில் இருப்பதைப் போன்றதாகும். இதனால், ஒருவர் தனது துணைவரிடம் நடைமுறையில் சாத்தியமற்ற விஷயங்களை எதிர்பார்க்கலாம், அதாவது ஆபாசப்படங்களில் வருபவர்களைப் போல தனது துணையும் இருக்க வேண்டும், அந்த அளவுக்கு பாலுறவில் ஈடுபட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கிக் கொள்ளக் கூடும். இதனால், உண்மையான ஒரு நபருடன் பாலுறவு கொள்வதில் ஒருவருக்கு ஆர்வம் இல்லாமல் போய்விடலாம் அல்லது அது சாத்தியமில்லாமல் போகலாம். உறவில் இருக்கும் நெருக்கம் குறைந்து, காலப்போக்கில் இவர் துரோகம் செய்வது போன்ற உணர்வு துணைவருக்கு ஏற்பட்டு இறுதியில் விவாகரத்தில் முடியக்கூடும்.

3. சமூக உறவுகள் (Social relationships)

ஒருவர் ஆபாசப் படைப்புகளை ரசிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கும்போது, பொழுதுபோக்கிலும் சமூக உறவுகளிலும் அவருக்கு ஆர்வமில்லாமல் போகலாம்.

4. பாலியல் குற்றங்கள் (Sexual offence)

“ஆபாசப்படைப்பு என்பது கோட்பாடு; பாலியல் பலாத்காரம் என்பது பயிற்சி” என்றொரு பிரபலமான பெண்ணியக் கூற்று இருக்கிறது. ஆபாசப் படங்களைப் பார்ப்பது ஆண்களுக்கு பாலியல் கிளர்ச்சியைத் தூண்டுகிறது, தகுந்த பாலியல் அறிவு இல்லாத ஆண்கள் ஆபாசப் படங்களைப் பார்த்து பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்முறைக்கு அதனைப் பயன்படுத்தக்கூடும்.

ஆபாசப்படைப்புகளுக்கு அடிமையானவர்கள், அதிலிருந்து மீள சில வழிகள் (Steps to overcome porn addiction):

உங்களிடம் நீங்களே சில நிமிடங்கள் பேசி, எந்தச் சூழ்நிலையில் நீங்கள் ஆபாசப் படைப்புகளுக்கு அடிமையானீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். ஆபாசப்படைப்புகளுக்கு அடிமையானதால் உங்களுக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்திய விசயங்களுக்கான தனிப்பட்டியல் உருவாக்குங்கள். ஆபாசப்படைப்புகளுக்காக இவ்வளவு நேரமும் பணமும் செலவழிப்பது தகுந்ததா என்று எண்ணிப் பாருங்கள். இதற்கான நியாயமான பதில் உங்களுக்கு கிடைத்த பிறகு, இதிலிருந்து நீங்கள் எளிதில் விடுபடலாம்.
ஒருவேளை நீங்கள் கவலை/ கோபம்/ மன இறுக்கம்/ சலிப்பு போன்றவற்றிலிருந்து விடுபடுவதற்கான ஒரு வழியாக ஆபாசப்படைப்புகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அத்தகைய அறிகுறிகளைச் சமாளிப்பதற்கான புதிய வழிகளைக் கண்டறியுங்கள். அதற்கு பதிலாக இசை கேட்பது, சைக்கிளிங், யோகா போன்ற ஏதேனும் மாற்று செயல்பாடுகளில் கவனம் செலுத்துங்கள்.
நீங்களாகவே உங்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், பாலியல் பிரச்சனைகளுக்கான சிகிச்சையில் அனுபவம் வாய்ந்த மருத்துவ ஆலோசகரிடம்/உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறவும்.

Previous articleTamil Doctor x உடற்பயிற்சி செய்தால் விந்தணு அதிகரிக்கும்!
Next articleSex Girl Doctor பெண்மையை மென்மையாய் கையாளுங்கள்!