Home சமையல் குறிப்புகள் இறால் வறுவல்

இறால் வறுவல்

25

சுவையான இறால் வறுவல் எப்படி செய்யலாம் எனப் பார்க்கலாம். இறால் மிகவும் ருசியானது மட்டுமில்லாமல் ஆரோக்கியமானது.

தேவையான பொருட்கள்

இறால் – 1/2 கிலோ
மிளகாய்த்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 1/4 டீஸ்பூன்
சோள மாவு – 1/4 டீஸ்பூன்
அரிசி மாவு – 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு -1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

இறாலை தோல் நீக்கி சுத்தம் செய்து நன்றாக கழுவி வைத்து கொள்ளவும்.

பிறகு, மேலே கொடுத்துள்ள அனைத்துப் பொருள்களையும் இறாலோடு சேர்த்து கலந்து சுமார் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இறாலைப் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.

சுவையான இறால் வறுவல் ரெடி!