Home பாலியல் உடலுறவில் உச்சத்தை அடைய ஆறு வழிகள்..!!

உடலுறவில் உச்சத்தை அடைய ஆறு வழிகள்..!!

78

சமீபகாலமாக உடலுறவின் போது விரைவாக ஆண்கள் உச்சத்தை அடைவது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.உச்சமடையும் நேரத்தை அதிகரிப்பதற்காக கண்ட விளம்பரங்களை நம்பி மருந்து,மாத்திரைகளை எடுத்துக்கொண்ட பல ஆண்கள் பக்க விளைவுகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.உடலுறவில் உச்சமடைவதை நீட்டிப்பதற்கும், மருந்துகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ஆனால் உடலுறவின் போது சில முன் முயற்சிகளை எடுத்தாலே நீங்கள் உச்சமடையும் நேரத்தை அதிகரிக்க முடியும்.அவை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

ஆழ்ந்து மூச்சு விடுங்கள்: உடலுறவில் ஈடுபடும் போது பல ஆண்கள் தங்கள் மூச்சை பிடித்து வைத்துக் கொள்கின்றனர்.அது மிகவும் தவறு.மூச்சை பிடித்து வைத்துக் கொண்டு உடலுறவில் ஈடுபட்டால்,மிக விரைவாகவே நீங்கள் உச்சத்தை அடையும் வாய்ப்புகள் அதிகம்.எனவே உடலுறவின் போது ஆழமாகவும், மெதுவாகவும் மூச்சு விடுங்கள்.

முன் விளையாட்டுகளில் ஈடுபடுங்கள்: பலர் தாங்கள் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்னால் தனது பெண் துணையை தொடுதல்,முத்தமிடுதல்,கட்டியணைத்தல்,சீண்டுதல் போன்ற முன் விளையாட்டுகளில் ஈடுபடுவதே இல்லை.முன் விளையாட்டுகள் இல்லாத உடலுறவு எப்போதும் இன்பத்தை தராது.முன் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களின் உடலுறவு நீண்ட நேரத்திற்கு நீடிப்பதாகவும்,திருப்தியை அளிப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மெதுவாக செயல்படுங்கள்: உடலுறவு தொடங்கிய சில நொடிகளிலேயே சிலர் வேகமாக செயல்படுவார்கள்.அவ்வாறு செய்யாமல் மிக மெதுவாக உங்கள் உடலுறவை தொடங்கினால்,உங்கள் பெண் துணையிடம் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும்.நீங்கள் உச்சமடையும் நேரமும் அதிகரிக்கும்.

வேறு யோசனைகள் வேண்டாம்: உடலுறவில் ஈடுபடும் போது உங்கள் எண்ணம் முழுவதும் உங்கள் செக்ஸ் மீதே இருக்க வேண்டும்.பெண் துணையின் மீது செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது,நீங்கள் வேறு சிந்தனைகளுக்கு சென்றால் கண்டிப்பாக விரைவில் நீங்கள் உச்சமடைவீர்கள்.

விறைப்புத் தன்மை: சில ஆண்களின் குறியில் விறைப்புத்தன்மை குறைபாடு இருக்கும்.இந்த குறைபாடு உள்ளவர்கள் தாங்களோ அல்லது தங்கள் பெண் துணையின் மூலமோ கைகளால் மசாஜ் செய்து ஆண் குறியில் விறைப்புத் தன்மையை கொண்டு வந்துவிட்டு உடலுறவில் ஈடுபடுங்கள்.

புரோஸ்டேட் மசாஜ் கருவிகள்: புரோஸ்டேட் மசாஜ் கருவிகள் உங்கள் ஆண் குறியை தூண்டிவிடுவதோடு,விறைப்புத்தன்மையையும் ஏற்படுத்தும்.எனவே உடலுறவில் ஈடுபடுவதற்கு சில நிமிடங்கள் முன்பு இந்த மசாஜ் கருவியை பயன்படுத்துவது நல்ல பயனை தரும்.