Home ஜல்சா உள்ளாடை ஜோதிடம் ..

உள்ளாடை ஜோதிடம் ..

57

captureநீங்கள் அணிந்திருக்கும் உள்ளாடையின் நிறம் என்ன? உள்ளாடைகள் உங்களுடைய ‘மூடை‘ முற்றிலுமாக மாற்றுகிற ரகசியம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா? உள்ளாடைகளில் அணிய வேண்டிய நிறம் எது, ஏன் நிச்சயம் கருப்பு நிறத்தைத் தவிர்க்க வேண்டும்? அழகழகான வண்ணங்கள் மனதுக்குப் புத்துணர்ச்சியைத் தரும். என்னென்ன கலரில் என்ன சூட்சுமம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

நாம் ஒவ்வொரு நாளும் என்ன கலரில் உள்ளாடைகள் அணிகிறோம் என்பதை கவனிப்பதே இல்லை. ஆனால், அதை கவனிக்க வேண்டியது அவசியம். வண்ணங்கள் உங்கள் மேனியில் பல அதிர்வுகளை உண்டாக்குவதோடு, உங்களுடைய ஆற்றலையும் மாற்றுகின்றன.

உடலின் மூலச் சக்கரம் உள்ள இடத்தில், நாம் உள்ளாடைகள் அணிவதால், அதன் வண்ணங்களில் கவனம் செலுத்துவது மிக முக்கியம். உடலின் மூலச்சக்கரமானது, அடிவயிற்றுக்கும் கீழே தான் அமைந்திருக்கிறது. சரியாக, அந்த இடத்தில் தான் நம்முடைய உள்ளாடை பதிந்திருக்கிறது. இப்போது தெரிகிறதா, உள்ளாடையின் நிறம் எவ்வளவு முக்கியம் என்று?

ஒவ்வொரு நிறமும் வெவ்வேறு வகையான அதிர்வுகளை உண்டாக்குகிறது. நீங்கள் அணியும் உள்ளாடையின் நிறத்தை நீங்கள் கவனிக்கிறீர்களோ இல்லையோ அவை உங்கள் சருமத்தின் வழியாக ஒட்டுமொத்த உடலையும் மூளையையும் ஆட்கொள்கிறது என்பதுதான் உண்மை.

கருப்பு நிறத்தில் உள்ளாடைகள் அணிவதைத் தவிர்த்திடுங்கள். குறிப்பாக, படுக்கையறைக்குச் செல்லும்போது கருப்பு நிற உள்ளாடை அணிவது மோசமான தேர்வாக இருக்கும். ஏனெனில், கருப்பு, வெள்ளை, கிரே ஆகிய நிறங்களால் எத்தகைய அதிர்வுகளும் உடலில் உண்டாவதில்லை.

உள்ளாடைகளைப் பொருத்தவரை, கருப்பு ஒரு கவர்ச்சியான நிறம் அல்ல. அது உங்களுடைய ஆற்றலை இழக்கச் செய்துவிடும். அதனால் படுக்கையறைக்குச் செல்லும்போது, சிவப்பு நிற உள்ளாடை நல்ல தேர்வாக இருக்கும்.

உள்ளாடைகளில் ஒவ்வொரு கலருக்கும் ஆற்றல் உண்டு. என்ன கலரில், அப்படி என்ன ஆற்றல் ஒளிந்திருக்கிறது என தெரிந்து கொள்ள வேண்டாமா?
ப்ளூ : நான் ஒரு சிறந்த நிர்வாகி. நம்பகத்தன்மையும் தன்னம்பிக்கையும் அதிகமுடையவன் என்பதைக் குறிக்கிறது.

ரெட் : பாலுறவுகளில் அதிக ஈடுபாடு உடையவர். வெளிப்படைத்தனமையும் தொலைநோக்குப் பார்வையும் கொண்டவர்.

கிரீன் : பாதுகாப்பானவர். அடுத்தவர் மேல் அக்கறை செலுத்தக்கூடியவர்.

அக்குவா கிரீன் : அமைதியான, நல்ல குணமுடையவர்

மரூன் : நேசமும் மென்மையான உணர்வும் உடையவர்

வெளிர் காவி நிறம் : ஆன்மீக ஈடுபாடுடையவர்

மஞ்சள் : புத்திசாலி, சமூகத்தின் மேல் பற்றுடையவர்

ஆரஞ்ச் : சிறந்த செயல்வீரர்

பிங்க் : எப்போதும் தழுவிக் கொள்ளத் தயாராக இருக்கும் இரக்க குணமுள்ளவர்.

பர்ப்பிள் : சிறந்த குரு. கடமை தவறாதவர்.

வெளிர் நீலம் : படைப்பாற்றல் மிக்கவர்

கோல்டு கலர் : வசதி படைத்தவர்

சில்வர் கலர் : காதல் ரசனை மிக்கவர். நேர்மையானவர்.

பொதுவாகவே, வீட்டை அலங்கரிப்பதில் இருந்து, ஆடை வரை சிவப்பு நிறத்தை விரும்புபவராக இருந்தால், அவர் பாலுறவில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படக்கூடியவராகவும் வெளிப்படைத் தன்மை உடையவராகவும் இருப்பார்.

பிரௌன் கலர் உங்களுடைய ஆற்றலைக் குறைத்துவிடும். அதேபோல், கருப்பு, வெள்ளை, கிரே கலர்கள் படுக்கையறைக்குச் செல்லும்போது வேண்டவே வேண்டாம். ஏன் தெரியுமா?

கருப்பு : பிறரைக் கட்டுப்படுத்த முயற்சி செய்பவர்

வெள்ளை : தனிமையை விரும்புபவர்

கிரே: உணர்வு ரீதியாக பிறருடன் நெருங்க இயலாதவர் என்று அர்த்தம்.

அழகிய உள்ளாடைகள் அணிவதன் மூலம், வாழ்க்கைத் துணையை நீங்கள் உங்கள் வசப்படுத்த முடியும். முதல்முறை இம்ப்ரஸ் பண்ண இரண்டாவது வாய்ப்பு கிடைக்காது. அதனால், உள்ளாடை தேர்வில் கவனமாக இருங்கள்…