Home பெண்கள் உடல் கட்டுப்பாடு இந்த டயட்டை 3 நாள் மட்டும் ட்ரை பண்ணுங்க… உடம்பு எப்படி குறையுதுன்னு நீங்களே உணர்வீங்க..

இந்த டயட்டை 3 நாள் மட்டும் ட்ரை பண்ணுங்க… உடம்பு எப்படி குறையுதுன்னு நீங்களே உணர்வீங்க..

38

மூன்றே நாட்களில் உடல் எடையினை குறைக்க உதவும் இயற்கையான உள்ள அற்புதமான டயட் மெனு இதோ!

காலை உணவு

காலை உணவாக ஒரு கப் குறைவான கொழுப்புள்ள தயிர் அல்லது ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

ஸ்நாக்ஸ்

ஸ்நாக்ஸாக 1 டம்ளர் பழச்சாறு அல்லது காய்கறி சாறு குடிக்கலாம் அல்லது ஏதேனும் 2 பழங்கள் அல்லது காய்கறியை ஜூஸ் போடாமல் சாப்பிடலாம்.

மதிய உணவு

மதிய வேளையில் உணவாக, ஒரு கப் காய்கறி சாலட் மற்றும் 1 டம்ளர் பழச்சாறு குடிக்க வேண்டும்.

இரவு உணவு

இரவு நேரத்தில் ஓட்ஸ், நாட்டுச் சர்க்கரை, தேன், உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் ஆகியவை கலந்து தயாரிக்கப்பட்ட க்ரனோலா 1 1/2 கப், பழங்கள், நட்ஸ் மற்றும் 1 டம்ளர் பால் குடிக்க வேண்டும்

டயட் பின்பற்றும் முறை

இந்த மூன்று நாள் டயட்டை ஒருமுறை பின்பற்றி, மறுமுறை பின்பற்ற ஒரு வாரம் இடைவெளி விட வேண்டும்.

குறிப்பு

இந்த டயட்டைத் தொடர்ந்து 3 நாட்கள் பின்பற்ற வேண்டும். நான்காம் நாள் எப்போதும் போன்று உணவை சாப்பிடலாம். ஆனால் சீஸ் இருக்கும் உணவுகள், இறைச்சிகள், சிக்கன், மீன் போன்ற உணவு வகைகளை உடனே சேர்க்காமல், சில நாட்கள் கழித்து சாப்பிட வேண்டும்.

முக்கியமாக நான்காவது நாளில் இருந்து சில நாட்கள் மட்டும் சைவ உணவுகள் மட்டும் சாப்பிடுவது நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் இந்த டயட்டின் போது, குடிக்கும் தண்ணீரின் அளவை மட்டும் குறைக்கக் கூடாது.