Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பொண்ணுங்க மாதிரி உங்களுக்கு மார்பு பெருத்திருக்கிறது சங்கடமா இருக்கா?… இத அப்ளை பண்ணுங்க…

பொண்ணுங்க மாதிரி உங்களுக்கு மார்பு பெருத்திருக்கிறது சங்கடமா இருக்கா?… இத அப்ளை பண்ணுங்க…

242

பெரும்பாலான ஆண்களுக்கு மார்பில் பெண்களைப் போலத் தோன்றும் ஒழுங்கற்ற திரட்சியானது பார்ப்பதற்கு அசிங்கமாகவும், பார்க்க முடியாத ஒன்றாகவும் அமைகிறது. மார்புப் பகுதியில் ஒழுங்கற்று விரிந்து தோன்றும் இவைகள் மனிதனின் தசைத்திரட்சி கிடையாது. மாறாக தொங்கும் அமைப்பில் பெண் தன்மையைப் பிரதிபலிப்பது போல் அமைகிறது.

இந்தத் தோற்றம் ஏற்படும் ஆண்கள், தோற்றத்தில் மிகவும் ஸ்ட்ராங் ஆக இருந்தாலும் உளரீதியான மற்றும் உணர்ச்சி ரீதியான பிரச்சனைகளை உணர்கிறார்கள். 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு இந்தப் பிரச்சனை அதிக அளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. பருவமடையும் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை கூட பூப்களின் (boobs) தோற்றத்திற்கு வழிவகுக்கும்.

காரணங்கள் கைனகோமஸ்த்யா (Gynecomastia) அல்லது மார்பகப் பெருக்கம் என்பது இதைப்பற்றிய மருத்துவப் பெயராகும்.ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவதால் ஏற்படும் வீக்கமே இந்தத்திரட்சியாகும். பெண்களின் மார்பகத்தின் ஒழுங்கான வளைவுகளை அவர்கள் உடலில் அதிகளவில் உள்ள ஈஸ்ட்ரோஜென் கவனித்துக்கொள்கிறது .ஆனால் ஆண்களில், இது மிகவும் மோசமான தோற்றத்தை உருவாக்கிவிடுகிறது. இது தவிர ஆண்களுக்கு மூப்ஸ் உருவாவதற்கு காரணங்களாக ஹைப்பர் தைராய்டிசம், சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் நோய், உடல் பருமன், ஊட்டச்சத்துக் குறைதல், அதிகப்படியான மது மற்றும் போதைப்பொருளான மரிஜுவானா, கெமிக்கல் சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை போன்றவை அமைகின்றன.

அறிகுறிகள் மூப்ஸ்கள் ஒரே அளவில் இரு மார்பகங்களிலும் உருவாகும் எனக்கட்டாயமில்லை.இரண்டும் ஒரே மாதிரியாகவோ அல்லது சீரற்ற வளர்ச்சியிலோ அல்லது ஒரே ஒரு விரிந்த மூப்பாகக்(moob) கூட இருக்கலாம். மார்பக பகுதியில் வலி, சில நேரங்களில் மார்புக் காம்பிலிருந்து திரவம் வடிதல் போன்றவை கைனகோமஸ்த்யாவின் அறிகுறிகளாகும். ஒரு மருத்துவப் பயிற்சியாளருடன் கலந்து ஆலோசிக்கப்படவேண்டிய ஒரு கடுமையான நிலை இந்த அறிகுறிகள். அறுவைச் சிகிச்சை செய்வது, மார்பகப் பெருக்க நோயைக் குறைக்க ஒரு வேகமான வழியாகும் ஆனால் இம்முறையில் பின் விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, கீழ்வரும் பின்விளைவை ஏற்படுத்தாத சில வீட்டு வைத்தியங்களைப் பயன் படுத்தி இந்த நோயை ஓட்டுங்கள். சந்தோசமாக வாழுங்கள்.

மஞ்சள் மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் வேதிப்பொருளால் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதை உண்ணும் ஆண்களின் உடலில் அதிகரிக்கிறது. டெஸ்டோஸ்டிரோன் எண்ணிக்கை உயர்வதால் ஆண்களுக்கு மூப்கள் உருவாகும் வாய்ப்புகள் மிகக்குறைவு .ஒரு கப் தண்ணீ ரில் 1 முதல் 2 தேக்கரண்டி மஞ்சள் தூளைக் கலந்து அதை 10 நிமிடங்கள் இளங்கொதியில் வைக்கவும் . ஒரு சில வாரங்களுக்கு இந்தக் கலவையை 2 முதல் 3 தடவை தினமும் குடித்து வந்தால் மூப்களை விரட்டலாம்.

மீன் சால்மன், டுனா, மற்றும் மெக்கரல் போன்ற மீன்கள், ஒமேகா -3 கொழுப்பு அமிலத்தைக் கொண்டுள்ளன. இது இயற்கையான டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பு மற்றும் ஒரு சிறந்த ஈஸ்ட்ரோஜன் அளவு குறைப்பான் ஆகும். குறைந்த ஈஸ்ட்ரோஜன் எண்ணிக்கை மூப்களை சீக்கிரம் விரட்ட உதவும். உங்கள் மார்பகத்தின் வடிவத்தைத் திரும்ப பெற மீன் எண்ணெய் உணவுகள் மற்றும் குளிர்நீர் மீன்களை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

கடல் உணவு இந்நோயினால் பாதிக்கப்பட்டவர் , ஒமேகா -3 கொழுப்பு அமிலத்தைக் கொண்டிருக்கும் மீன்களைத் தவிர பிற துத்தநாகம் நிறைந்த கடல் உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். மார்பகப் பெருக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களுக்குத் தேவையான ஒரு முக்கியமான கனிமம் துத்தநாகம் ஆகும். டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியைத் தூண்டும் இக்கனிமம் மூப்களை தூர விரட்ட உதவுகிறது . எனவே , துத்தநாகம் நிறைந்த சிப்பிகள் மற்றும் நண்டுகளை உட்கொள்ளுவது இதற்குச் சரியான தீர்வு.

ஆளி விதைகள் லிக்நன்சைக் கொண்டிருக்கும் ஆளி விதைகள் ஆண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவுகளைக் குறைக்க உதவுகிறது. மேலும், இந்த விதைகள் டெஸ்டோஸ்டிரோன் அளவை மேம்படுத்துகின்ற ஒமேகா -3 கொழுப்பு அமிலத்தையும் அதிக அளவில் கொண்டுள்ளன. தினமும் வெதுவெதுப்பான தண்ணீரில் போட்ட ஆளி விதைகளைப் பயன்படுத்தி மூப்களை எளிதாக கரைத்திடுங்கள். மாற்றாக, மாப்பின் மற்றும் ரொட்டி போன்ற பேக்கிடு உணவுகளின் மேல்பாகத்தில் இந்த விதைகளைத் தூவியோ அல்லது நிரப்பியோ பயன்படுத்தலாம். கூடுதலாக, தினந்தோறும் ஆளி விதை எண்ணெயைப் பயன்படுத்துவது கூட பயனளிக்கும்.

எப்சம் உப்பு நச்சு நீக்குதல் (டீ- டாக்ஸிபிகேசன்) கூட ஆண்களின் மார்பகப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. குளியல் தொட்டியில் 2 கப் எப்சம் உப்பு சேர்க்கவும். இக்கரைசலில் உங்கள் உடலை சிறுது நேரம் ஊற வையுங்கள்.எப்சம் உப்பிலுள்ள மெக்னீசியம் சல்பேட்டானது உங்கள் உடலை (detoxify)டி-டாக்சிபை செய்ய உதவும். ஒரு வாரத்திற்கு மூன்று முறை 15 நிமிட இந்த வகைக் குளியல் போதுமானது. உயர் BP மற்றும் இதயக் கோளாறுகள் கொண்ட நோயாளிகள் இதை முயற்சிக்கக்கூடாது.

குளிர் அழுத்தம் (கோல்ட் கம்ப்ரஸ்) கோல்ட் கம்ப்ரசானது பொதுவாக வீங்கும் நரம்பு செல்களைச் சுருக்க பயன்படுத்தப்படுகிறது. கைனகோமஸ்த்யா மார்பு பகுதி முழுவதும் வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் , கோல்ட் கம்ப்ரஸ் கொடுக்கும் பொழுது வலியிலிருந்து நிவாரணம் மற்றும் வீக்கக் குறைவு ஏற்படுகிறது. ஒருநாப்கின் அல்லது மெல்லிய துண்டில் சில ஐஸ் க்யூப்ஸ் வைத்து வலியினால் ஏற்படும் அசௌகரியத்தைக் குறைப்பதற்காக ஒவ்வொரு மார்பகத்தின் மீதும் மாற்றி மாற்றி கோல்ட் கம்ப்ரஸ் செய்யவும். பனிக்கட்டியை நேரடியாக பயன்படுத்தாதீர்கள். உங்கள் தோலால் சில நேரங்களில் இதைத் தாங்க இயலாது.

பழங்கள் மற்றும் காய்கறிகள்: பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் பலவகையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஃபைபர் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. இவையனைத்தும் உங்கள் உடலின் அதிகப்படியான கொழுப்பை எரிக்க மற்றும் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.மார்பகங்களின் அளவைக் குறைப்பதற்காக உங்கள் உணவில் ஆப்பிள், ஆனைக்கொய்யா(அவோகேடோ), வாழை, பப்பாளி, பெர்ரி, செலரி(சிவரிக்கீரை), கேரட், கீரை, தக்காளி போன்றவற்றை

உடற்பயிற்சி: உடற்பயிற்சியே மோப்களை விரட்ட மிகச்சிறந்த தீர்வாகும். உடற்பயிற்சிக் கூடத்திற்குத் தினமும் தவறாமல் சென்று பயிற்சியாளரின் அறிவுரைப்படி கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்து உங்கள் உடலை பிட்டாக வைத்துக்கொள்ளுங்கள். இதனால் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து மூப்கள் உங்களை விட்டு நீங்குகிறது . கார்டியோ மற்றும் எடைப்பயிற்சியைச் சரியாகப் பின்பற்றுங்கள். நீங்கள் தசைககளை உறுதியாக்க, புஷ்-அப்கள் மற்றும் ஸ்ட்ரென்த் பயிற்சிகளை முயற்சிகாலம். இது உங்கள் வளர்சிதை மாற்றம் மற்றும் கொழுப்பு எரியும் செயல்பாட்டை வேகப்படுத்துகிறது மற்றும் ஹார்மோன் மட்டத்தில் சமநிலையைப் பராமரிக்கிறது. நீச்சல், ஜாகிங், மற்றும் நடைபயிற்சி ஆகியன கூட இதற்கான சிறந்த உடற்பயிற்சிகளாகக் கருதப்படுகின்றன.

ரோவிங், உடலின் மேல் பகுதியை பிட்டாக வைத்துக்கொள்ள ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். இதற்காக ஒரு ரோவிங் இயந்திரத்தை பயன்படுத்தலாம் அல்லது ரோவிங்கிற்காக வெளியே செல்லலாம். விளையாட்டு டென்னிஸ், கூடைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகளும் உங்கள் உடலைக் கட்டுக்கோப்பாக்க உதவும் சிறந்த சாதனங்கள். விளையாட்டு என்பது முழு உடலையும் சுறுசுறுப்பாக வைத்து கொழுப்பு சேரும் உடலின் அனைத்துப் பகுதிகளையும் இயக்கி கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.இந்த விளையாட்டுகளில் நீங்கள் தொடர்ந்து ஈடுபடுவதால் அந்த மென்மையான, பெண் போன்ற மார்பகங்களை எளிதில் நீக்கிவிடலாம். இஞ்சி ரூட் டீ சிறிது தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் புதிதாக நறுக்கிய இஞ்சியைச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்களுக்கு இதை மூடி வைக்கவும். பிறகு வடிகட்டி வைக்கவும்.3 முதல் 6 மாதங்களுக்கு தினமும் சற்று வெதுவெதுப்பான வடிகட்டிய இந்த டிக்காசனை குடித்து வந்தால் உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரித்து , கொழுப்புத் திசுக்கள் எரிந்து மூப்களின் வளர்ச்சி தானாக ஒடுங்குகிறது. மூப்களைப் போக்கும் மகத்தான சில மூலிகை உணவுகள்: பேஷன் ப்ளவர் (பாசிப்லோரா) ஆண்களின் மார்பகப் பெருக்க நோய்க்கு முக்கிய காரணம் உடலின் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவின் ஏற்றத்தாழ்வேயாகும்.

இது டெஸ்டோஸ்டிரோன் அளவைக் கூட்டும் க்ரைசினைக்(Chrysin) கொண்டிருக்கிறது. மது மற்றும் போதைப்பொருள்களின் உபயோகத்தை வெறுக்க வைக்கும் பண்பு இந்த மூலிகையின் கூடுதல் சிறப்பாகும். இந்த மூலிகைத் தேநீரை உருவாக்க , ஒரு கப் சூடான நீரில் ஒரு தேக்கரண்டி உலர்ந்த பாசிப்லோரா மலரைச் சேர்க்கவும். ஒரு நாளுக்கு பல இடைவெளிகளில் இந்த மூலிகைத் தேநீரை அருந்தவும். சிலிபம் மரியனம் (மில்க் திஸ்ஸல்): ஆல்கஹால் மற்றும் போதை மருந்துகளுக்கு அடிமையாதல் கல்லீரல் நோய்களை ஏற்படுத்தும்.இதனால் கைனகோமஸ்த்யா ஏற்படலாம். இந்த நிலையில் இந்த மூலிகை உட்கொள்வதாள் மில்க் திஸ்ஸலில் காணப்படும் சில்மினின் என்னும் உட்பொருளானது கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. 3 கப் தண்ணீரில், 1 தேக்கரண்டி நொருக்கப்பட்ட மில்க் திஸ்ஸல் விதைகளைச் சேர்த்து, 20 நிமிடங்களுக்குக் கொதிக்க விடவும்.சுவைக்குத் தேன் சேர்த்துக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை வீதம் ஒருவாரத்துக்குக் குடித்து வரலாம் அல்லது மூப்களின் அறிகுறிகள் மறையும் வரை பயன்படுத்தலாம்.

சீமைக் காட்டு முள்ளங்கி (DANDELION) (டேன்டேலியன்): கைனகோமஸ்த்யாவைக் குணப்படுத்த உதவும் மற்றொரு சிறந்த மூலிகை டான்டேலியன் ஆகும். இது இயற்கையில் சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரித்து அதன் வழியே உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் மற்றும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனை நீக்குகிறது. மேலும், உடலில் கொழுப்பு சேர்வதை கட்டுப்படுத்துகிறது. ஆண்களின் மூப்களைக் குறைக்க , 1 தேக்கரண்டி உலர்ந்த டான்டேலியன் இலைகளை சூடான நீரில் சேர்த்து 10 நிமிடங்களுக்கு இளம் சூட்டில் வைத்து வடிகட்டிய பிறகு ஒரு நாளுக்கு 2-3 முறை குடித்து வரவும். நெருஞ்சி ( ட்ரிபுலஸ் டெரெஸ்டிரிஸ்): இந்த மூலிகை நேரடியாக டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியைத் தூண்டுவதில்லை.மாறாக, லுட்டேனைசிங் உற்பத்தியைத் தூண்டுவதால் அதன் மூலம் ஆண்களின் உடலில் ஆன்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டுகிறது . இதன் வேர்கள் அல்லது உலர்ந்த விதைகளை இந்த மருத்துவத்துக்குப் பயன்படுத்தலாம்.

ஆண்களின் மார்பகப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நெருஞ்சியின் உபயோகம் சிறந்த வழிகளில் ஒன்றாகும். ரெட் க்ளோவர்: ஆண்களின் மூப்களைக் குறைத்து சிறந்த மார்பகக் கட்டமைப்பை வழங்க வல்லது இந்த ரெட் க்ளோவர் . ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைக்கும் கெனிஸ்டைன் என்னும் ஐஸோஃபிளவினைக் கொண்டிருப்பதே இதற்குக்காரணம். தேநீர் வடிவில் இதை எடுத்துக் கொள்ளலாம். கார்டிசெப்ஸ் (ஒரு வகைக் காளான்) டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதற்கு கார்டிசெப்ஸ்(Cordyceps) ஒரு நம்பகமான தேர்வாகும். இதை தேநீர் வடிவில் எடுத்துக்கொள்ளலாம். மூப்களை ஒழிக்க இதுவும் ஒரு பயனுள்ள தீர்வாகும். இதன் மூலிகைத் தேநீரை தயாரிப்பதற்கு, கொதிக்கவைத்த நீரில் உலர்ந்த கார்டிசெப் துண்டுகளைச் சேர்க்கவும்.

இதன் கசப்புத் தன்மையை அகற்ற இரண்டு மணி நேரம் இளங்கொதியில் வைத்து பிறகு பருகவும். நன்னாரி சர்ஸ்பரிலா எனும் நன்னாரியால் உடல் தசைகள் அதிகரிக்கிறது. இந்தத் தாவரத்தில் விளையாட்டு வீரர்கள் உடல் கட்டமைப்புக்குப் பயன்படுத்தும் ஸ்டெரால் அதிக அளவில் உள்ளது. இது மார்புச் சதைகளை வலுவாக்கி அதை நல்ல வடிவில் திரும்பப்பெற உதவுகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், ஒரு கப்பில் சுடு நீருடன் 1 தேக்கரண்டி இதன் நறுக்கப்பட்ட வேர்களைப் போடவும். 10 நிமிடங்கள் இளஞ்சூட்டில் வைத்து பின் வடிகட்டவும். மூப்களை விரட்டும் மூலிகை பானம் இதோ ரெடி!!!. சூர்நகம் (டெவில்ஸ் க்ளா): ஆண்களின் பாலியல் இயல்பைத் தூண்டுவதற்காக பண்டைய காலங்களிலிருந்து இந்த மூலிகை பயன்படுத்தப்பட்டது. T-செல் எண்ணிக்கையை அதிகரிக்கும் இது ஆண்களின் பூப்களை குறைக்க பரிந்துரைக்கப்படும் சிறந்த மூலிகை தீர்வாகும் . மூலிகைத் தேநீரை இதன் வேர்களைப் பயன்படுத்து எளிதாகத் தயாரிக்கலாம் .

இந்த மூலிகையின் வேர்களை நீருடன் கலந்து இளஞ்சூட்டில் கொதிக்க வைத்து வடிகட்டிப் பயன்படுத்துங்கள். குறிப்பிட்ட மாற்றத்தை விரைவில் உணர்வீர்கள். கமிபோரா வைட்டீ (Commiphora wightii) இந்த மூலிகை அதன் மருத்துவ குணங்களுக்காக பிரபலமானது. இது ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைத்து டெஸ்டோஸ்டிரோன் எண்ணிக்கையைஅதிகரிக்கிறது. இந்த மூலிகையை வழக்கமாக உட்கொள்ளல், மார்புப் பகுதியைச் சுற்றி உருவாகும் கூடுதல் சதைகளைக் குறைக்க உதவுகிறது. பெட்டெர் ரிசல்ட்டுக்கு இந்த மூலிகையின் சாற்றைப் பயன்படுத்துங்கள். க்ரீன் டீ க்ரீன் டீ ஒரு அற்புத கொழுப்புக் கரைப்பான் ஆகும். உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் கைனகோமஸ்த்யாவை குணப்படுத்தவும் உதவும் ஒரு சிறந்த இயற்யான ஆன்டி-ஆக்சிடன்ட். கூடுதல் உடல் கொழுப்பைக் குறைப்பதற்கு இதன் கஷாயம் அல்லது தேநீரை எடுத்துக்கொள்ளுங்கள்.

செய்ய வேண்டியவை: • இயற்கை உணவைச் சாப்பிடுங்கள். • நிறையத் தண்ணீர் அருந்துங்கள். • உடல் எடையின் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருங்கள். • உப்பை அளவாக உட்கொள்ளுங்கள். • சர்க்கரை நுகர்வை குறையுங்கள். • உங்கள் உடலை பிட்டாக வைத்திருங்கள். • ஜன்க் உணவுகளைத் அறவே தவிருங்கள். • உங்கள் தினசரி உணவை ஒரே அடியாகச் சாப்பிடுவதை நிறுத்தி பல வேளைகளாகப் பிரித்து உண்ணுங்கள் • மருந்துகளுக்கு குட் பை சொல்லுங்கள். • மது அருந்தாதீர்கள் • புகைப்பிடிக்காதீர்கள். • பட்டினியிலிருக்காதீர்கள். • காரீயம் மற்றும் பிற மாசுப் பொருட்களிலிருந்து விலகி இருங்கள். • கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளை உண்ணாதீர்கள்.

Previous article40+ தம்பதிகளுக்கான 18+ டிப்ஸ்!
Next articleஇளம் பெண்களுக்கு இந்த பிரச்சனை அதிகளவில் இருக்காம்! அதிர்ச்சி தகவல்..