Home ஜல்சா 17 வயது மாணவனுடன் திருமணமான 26 வயது பெண் ஓட்டம்!

17 வயது மாணவனுடன் திருமணமான 26 வயது பெண் ஓட்டம்!

24

17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த திருமணமான இளம்பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கர் (33), இவருடைய மனைவி முத்துமாரி (26) இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

சங்கர் தனது வேலை விடயமாக வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 5ஆம் திகதி சொந்த ஊருக்கு திரும்பிய சங்கர் தனது வீட்டில் மனைவி மற்றும் குழந்தை காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இதுகுறித்து சங்கர் பொலிசில் புகார் அளிக்க, பொலிசார் நடத்திய விசாரணையில், முத்துமாரி அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.

சங்கர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் முத்துமாரிக்கும், சிறுவனுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதனிடையில் முத்துமாரி, தன்னுடைய குழந்தையுடன் மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இதையடுத்து முத்துமாரி மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவரை கைது செய்தனர். மேலும் முத்துமாரியுடன் ஓட்டம் பிடித்த சிறுவனை காப்பகத்தில் ஒப்படைத்தார்கள்.