Home கருத்தடை 15 வயசிலேயே மகள் கையில் கர்ப்பத் தடை மாத்திரை தந்த கிம் கர்தஷியான் அம்மா!

15 வயசிலேயே மகள் கையில் கர்ப்பத் தடை மாத்திரை தந்த கிம் கர்தஷியான் அம்மா!

83

எனக்கு 15 வயது இருக்கும்போது முதல் முறையாக செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்பினேன். அதை விமர்சிக்காமல், எனது தாயார், பத்திரமான செக்ஸுக்காக கர்ப்பத் தடை மாத்திரைகளை கையில் கொடுத்தார் என்று கூறியுள்ளார் களேபரக் கவர்ச்சிக்குச் சொந்தக்காரியான கிம் கர்தஷியான்.
31 வயதானாலும் கிம்முக்கு கவர்ச்சி மட்டும் குறைந்தபாடில்லை. அவரது கவர்ச்சிக்கு அடிமையானவர்கள் எத்தனையோ லட்சம் பேர் உலகம் முழுவதும் குவிந்து கிடக்கின்றனர். இதைப் பயன்படுத்தி கிம் பெயரில் கம்ப்யூட்டர் வைரஸ்களை பரப்ப ஒரு கும்பலே இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி ஒரு கிரேஸ் இந்த அமெரிக்க அழகிக்கு.
சமீபத்தில் ஓப்ரா வின்பிரேக்கு ஒரு விரிவான பேட்டியைக் கொடுத்திருந்தார் கிம் கர்தஷியான். அதில் தன்னைப் பற்றி யாரும் அறிந்திராத பல சுவாரஸ்யான தகவல்களை பரிமாறிக்கொண்டார். இதைக்கேட்டு ஓப்ராவை வாயைப் பிளந்து போய் விட்டார் என்றால் அவை எப்படிப்பட்டவை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
கிம் கர்தஷியான் உதிர்த்த முத்துக்களிலிருந்து சில துளிகள்…
கிம்முக்கு 14 வயதாக இருக்கும்போதே ஆண்களுடன் சகஜமாக பழகி வந்துள்ளார். இருந்தாலும் அவரது தாயார் கிறிஸ் ஜென்னர் மகளின் சுதந்திரத்தைத் தடுக்கவில்லை.
கிம் தன்னுடன் 2 வருடமாக பழகிய ஆண் நண்பருடன் முதல் முறையாக ஜாலியாக இருக்க விரும்புகிறேன், எனது கன்னித் தன்மையை அவனிடமே இழக்க விரும்புகிறேன் என்று தனது தாயாரிடம் சொன்னபோதும் அவர் ஆட்சேபிக்கவில்லையாம். கையில் கர்ப்பத் தடை மாத்திரையை மட்டும் எடுத்துக் கொடுத்தாராம்.
கிம் முதல் முதலில் கன்னித்தன்மையை இழந்தபோது அவருக்கு வயது ஜஸ்ட் 15 தானாம். இதுகுறித்து தனது தாயாருடன் விவாதித்தபோது அவர் ஆட்சேபிக்கவில்லை என்று கூறிய கிம், பல நல்ல ஆலோசனைகளை அவர் தனக்கு வழங்கியதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தனது தாயார் இப்படி பெருந்தன்மை மற்றும் திறந்த மனதுடன் தன்னிடம் நடந்து கொண்டது பெருமையாக இருப்பதாகவும் புளகாங்கிதப்பட்டார் கிம்.
கிம் இப்படிச் சொன்னபோது எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் விழித்த ஓப்ரா, வாவ் என்று மட்டும் சொன்னார். அடுத்த கேள்விக்கு டக்கென மாறினார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவரும், அவரது முன்னாள் காதலர் ரே ஜேயும் கசமுசா கோலத்தில் இருந்த செக்ஸ் டேப் வெளியான விவகாரம் தனது தொழிலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக பேட்டியின்போது தெரிவித்தார் கிம்.
ஆனால் அந்த டேப்தான் தன்னை உலகம் முழுவதும் மேலும் பிரபலமாக்க உதவியதாகவும் கூறினார் கிம். அதை நான் நெகட்டிவாக பார்க்கவில்லை என்றும், எனக்கு பெரும் விளம்பரமாக அது அமைந்தது என்றும் சொல்லிக் கொண்டார் கிம்.
சரி அந்த டேப்பை நீங்கள்தான் ரிலீஸ் செய்தீர்களா என்று ஓப்ரா கொக்கி போட்டபோது, நிச்சயம் இல்லை என்றார் கிம். உண்மையில் அந்த டேப்பால் எனது தாயார், வளர்ப்புத் தந்தை ப்ரூஸ் ஜென்னர், சகோதரிகள் கர்ட்னி, கோலே, கென்டல், கைலி, சகோதரன் ராப் ஆகியோர் பெரும் அவமதிப்பை சந்தித்தனர் என்றும் கூறினார் கிம்.
இப்படி களேபரமாக போனது கிம்மின் பேட்டி. கிம் தற்போது 35 வயதான கென்யே வெஸ்ட் என்ற ரேப் பாடகரை டாவடித்து வருகிறார் என்பது தெரியும்தானே….இதுகுறித்தும் கிளுகிளுப்பான பதிலைக் கூறினார் கிம். நான் இதற்கு முன்பு என்னை விட குறைந்தது 5 வயது குறைந்தவர்களைத்தான் காதலித்துள்ளேன், ஆனால் தற்போதுதான் முதல் முறையாக என்னை விட வயது அதிகமான ஒருவரை காதலித்து வருகிறேன். இது நன்றாக இருக்கிறது என்றார்…