Home சூடான செய்திகள் ஷாருக் மனைவியை – ரொம்ப ஹாட் – என்று சொன்ன ரித்திக் ரோஷன்

ஷாருக் மனைவியை – ரொம்ப ஹாட் – என்று சொன்ன ரித்திக் ரோஷன்

15

 

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானின் மனைவி கௌரி 2 குழந்தைகளுக்கு தாயான பிறகும் சிக்கென்று இருக்கிறார். அப்படி கட்டுக்கோப்பாக உடம்பை வைத்திருக்கும்போதே ஷாருக் பிரியங்கா சோப்ரா இடையே தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. இந்நிலையில் கௌரி கான் ரொம்ப ஹாட் என்று நடனத்தாலும், பார்வையாலும் வசீகரிக்கும் ரித்திக் ரோஷன் சொல்லியுள்ளார்.

ரித்திக் சொல்வது உண்மை தான். நடிக்காவிட்டாலும் பாலிவுட் நடிகை போன்று உடல்வாகு உள்ளவர் கௌரி. கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரபல வோக் பத்திரிக்கையின் அட்டையில் கௌரியின் படம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் கௌரியை பாலிவுட்டின் முதல் பெண்மணி என்று குறிப்பிட்டிருந்தனர்.

கடந்த 2009ம் ஆண்டில் அவர் தனது கணவர் ஷாருக்குடன் சேர்ந்து இயக்குனர், பேஷன் டிசைனர் கரண் ஜோஹாரின் பேஷன் ஷோவில் கேட் வாக் செய்தார். தற்போது ஷாருக் பிரியங்கா சோப்ராவுடன் அதிக நேரம் செலவழிப்பதால் கௌரி டென்ஷனில் உள்ளார்.

இது குறித்து கணவரிடம் கேட்டால் தகராறு தான் என்று பாலிவுட்டில் பரவலாகப் பேசப்படுகிறது. இது குறித்து ஷாருக்கும் வாய்திறக்கவில்லை, பிரியங்காவும் அமைதி காத்து வருகிறார்.

இப்படி இருக்கையில் ஏன் ரித்திக் ரோஷன் அப்படிச் சொன்னார் என்பது தெரியவில்லை..!