Home பெண்கள் அழகு குறிப்பு வெள்ளையான சருமம் வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க

வெள்ளையான சருமம் வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க

20

ஆரஞ்சு தோல், தயிர் உலர்ந்த ஆரஞ்சு தோல் மற்றும் தயிர் ஆகியவை நம் வீட்டில் எளிதாகக் கிடைக்கக் கூடியவை தான். ஆரஞ்சு தோலை பொடி செய்து, சூரிய ஒளியில் நன்றாக உலர வைத்து, காற்றுப்புகாத சிறு பெட்டியில் அடைத்து வையுங்கள். பின் ஒரு ஸ்பூன் ஆரஞ்சுத் தோலுடன் தயிரைக் கலந்து, அந்தப் பேஸ்ட்டை முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் வரை காய விட்டு, பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் முகம் கண்ணாடியாக ஒளிரும்.

பால், தேன், எலுமிச்சை சாறு இது மற்றொரு எளிய வழி. ஒரு ஸ்பூன் பால், தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை நன்றாகக் கலந்து கொள்ளவும். பின், அந்தப் பேஸ்ட்டை முகத்திலும் கழுத்திலும் தடவி, 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து, சாதாரண நீரில் கழுவினாலே போதும். வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து விடும். சருமமும் மிருதுவாகும்

ஓட்ஸ், தயிர், தக்காளி மாஸ்க் ஒரு ஸ்பூன் ஓட்ஸ் உடன் தேவையான அளவு தக்காளி ஜூஸையும், தயிரையும் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும். அந்தப் பேஸ்ட்டை முகத்திலும் கழுத்திலும் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் வரை கழித்து சுத்தமான நீரால் கழுவவும். மாஸ்க்கை ஸ்க்ரப் செய்து துடைக்கும் போது தோலில் உள்ள அழுக்குகள் நீங்கும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.