Home சமையல் குறிப்புகள் வெனிலா  ஐஸ்க்ரீம்

வெனிலா  ஐஸ்க்ரீம்

19

என்னென்ன தேவை?

சுண்டக் காய்ச்சிய பால் – 1 1/2 கப்,
க்ரீம் – 1 கப்,
வெண்ணெய் – 1 டீஸ்பூன்,
கன்டென்ஸ்டு மில்க் – 100 கிராம்,
அரைத்த சர்க்கரை – 1/2 கப்,
வெனிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்.

அலங்கரிக்க…

செர்ரி, துண்டுகளாக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?

வெண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் கலந்து நன்றாக அடிக்கவும். பிறகு வெண்ணெய் சேர்த்து மீண்டும் அடிக்கவும். அதை 2 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும். மீண்டும் 3 முறை அடித்து எடுத்து, கப்பில் வைத்து பாதாம், பிஸ்தா, முந்திரி, செர்ரி சேர்த்து அலங்கரிக்கவும்.