Home பெண்கள் அழகு குறிப்பு வீட்டிலுள்ள சில பொருட்களை வைத்தே தொடைப்பகுதியில் உள்ள கருமையை ஈஸியா சரிசெய்யலாம்..!

வீட்டிலுள்ள சில பொருட்களை வைத்தே தொடைப்பகுதியில் உள்ள கருமையை ஈஸியா சரிசெய்யலாம்..!

24

தொடைகளின் உராய்வு, இறுக்கமான உடைகளை அணிவது, திடீர் ஹார்மோன் மாற்றங்கள் இது போன்ற பல காரணங்களினால் தொடைப்பகுதியில் உள்ள சருமம் கருப்பாக மாறிவிடுகிறது.

உடல் பருமன் அதிகமாக உள்ள சிலருக்கு தொடையில் கருமை அதிகமாக இருக்கும். இதை போக்கவே முடியாது என்று நினைக்கிறார்கள். ஆனால் மிக எளிமையாக நம்முடைய வீட்டிலுள்ள ஒரு சில பொருள்களை மைட்டும் வைத்தே தொடைப்பகுதியில் உள்ள கருமையைப் போக்கிவிட முடியும்.

எலுமிச்சையை பாதியாக வெட்டி, தொடையில் 15 நிமிடம் ஸ்கிரப் போல தேய்த்து, வெதுவெதுப்பான நீரால் கழுவி, துணியால் துடைத்து விட்டு, அந்த இடத்தில் ஆலிவ் ஆயில் தடவ வேண்டும்.

எலுமிச்சை சாறை தொடையில் தடவி, சர்க்கரை கொண்டு மென்மையாக 15 நிமிடம் ஸ்கரப் செய்து, கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

1 டீஸ்பூன் பால் பவுடர், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் ஆகியவற்றை கலந்து, அதனுடன் சில துளிகள் பாதாம் எண்ணெய் கலந்து, தொடையில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்துக் கழுவினால் தொடையில் உள்ள கருமை மிக விரைவில் மறைய ஆரம்பிக்கும்.

ஓட்ஸ் பொடி, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய அனைத்தையும் கலந்து பேஸ்ட் செய்து, தொடையில் தடவி 15-30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

சந்தனப் பவுடரை வெள்ளரிக்காய் சாறுடன் கலந்து பேஸ்ட் செய்து, தினமும் அதை தொடையில் தடவி உலரவிட்டு, கழுவி வர வேண்டும்.

ரோஸ் வாட்டர், எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து, இரவில் தூங்கும் முன், தொடையில் தடவி சிறிதுநேரம் ஊறவைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

கடலை மாவு, தயிர் மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் ஆகிய அனைத்தையும் கலந்து பேஸ்ட் செய்து, தொடையில் தடவி காயவைத்து, பின் நீரில் கழுவி வர வேண்டும்.

இவற்றில் ஒன்றையோ இரண்டையோ தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தொடைப்பகுதியில் எவ்வளவு கருப்பாக இருந்தாலும் விரைவில் அதை சரிசெய்துவிட முடியும்.