Home ஆண்கள் விந்து வேகமாக வெளியேறாமல் இருக்க என்ன செய்யணும்?

விந்து வேகமாக வெளியேறாமல் இருக்க என்ன செய்யணும்?

72

சில ஆண்களுக்கு உடலுறவு நேரத்தில் சரியாக செயல்படாமல் போவதுண்டு. சில ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும். ஆனால் சிலருக்கோ உடலுறவின் போது, மிக வேகமாகவே விந்து வெளியேறிவிடுவதாலும் பெண்களால் உறவில் திருப்தியடைய முடியாமல் போகிறது.

இப்படி உறவின்போது, விரைவாக விந்து வெளியேறாமல் இருப்பதற்கு சில வழிகள் உண்டு. அவற்றை முறையாகக் கடைபிடித்தாலே போதும். வேகமாக விந்து வெளியேறுவதைத் தவிர்க்க முடியும்.

விந்து வேகமாக வெளியேறுவதை எப்படி தவிர்க்கலாம்?

உடலுறவின் போது, ஆண்கள் தங்களுடைய மூச்சின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

உடலுறவின் போது, மூச்சை நன்கு இழுத்து விட வேண்டும். நுரையீரலுக்குத் தேவையான காற்றை உள்ளே செலுத்தி நிரப்ப வேண்டும். இந்த பயிற்சியை ஆண் அடிக்கடி செய்யும்போது, வேகமாக விந்து வெளியேறுவதைத் தடுக்க முடியும்.

உடலுறவு கொள்ளும் நேரத்தில் பெண்ணுறுப்புக்குள் ஆணுறுப்பை செலுத்தியிருக்கும் சமயத்தில் தன்னுடைய முழு எடையையும் பெண்ணுடம்புக்குக் கொடுக்காமல், உடலை லேசாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடில், ஆணுறுப்பின் ஓரங்களும் ஆணுறுப்பும் அதிகமாக சூடாகி, விந்து மிக விரைவாக வெளியேறிவிடும்.

உடலுறவு மேற்கொள்ளும் இடம் அமைதியானதாக இருக்க வேண்டும். ஆணின் மனம் சிதறும்படியான சத்தம் இருக்கக்கூடாது. ஆணின் சிந்தனை சிதறக்கூடாது. அப்படி சிதறினால் விந்தணு வேகமாக வெளியேறிவிடும்.

ஆண்கள் பெரும்பாலும் மிக வேகமாக உச்சத்தை எட்டிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான விஷயம். அப்படி ஆணுக்கு வேகமாக விந்து வெளியேறியதும் உறவை முடித்துக் கொண்டு, ஓய்வெடுக்க உடல் நினைக்கும். அதனால் பெண் இன்பம் காண முடியாமல் போகும்.
ஆகவே மிக மெதுவாக உறவில் ஈடுபட வேண்டும். விந்துவை விரைவாக வெளியேற்றக்கூடாது.

முன் விளையாட்டுகளில் அதிகமாக ஈடுபடும் ஆண்களுக்கு விந்து வேகமாக வெளியேறுவதில்லை என்று கூறப்படுகிறது. அதனால் ஆண் பெண்ணிடம் நீண்ட நேரம் கொஞ்சி விளையாட வேண்டும். நிறைய பேச வேண்டும்.

அப்படி முன் விளையாட்டுகளில் ஈடுபடுகிறபோதே ஆணுறுப்பை உட்செலுத்தினாலும் கூட, அதை வேகமாக அசைக்காமல் மென்மையாக சிறிது நேரம் இயங்கச் செய்யலாம். பின் வெளியே எடுத்து, சிறிது நேரம் ஓய்வெடுத்து, கொஞ்சிப் பேசி அதன்பின் உடலுறவு கொள்வதால், விந்து வேகமாக வெளியேறாது. அப்படி செய்யும் போது, நீண்ட நேரம் உறவில் ஈடுபட முடியும்.

இப்படி செய்வதன் மூலம், ஆண் பெண் இருவருக்குமே இன்பம் அதிகரிக்கும். நீண்ட நேரம் விந்து வெளியேறாமல் இருந்தால் ஆண், பெண் இருவரும் உறவில் திருப்தியடைய முடியும். உடலில் சக்தியும் வீணாகாது.