Home சூடான செய்திகள் விக்ரமுடன் ஜோடி சேரும் லட்சுமி ராய்!

விக்ரமுடன் ஜோடி சேரும் லட்சுமி ராய்!

15

தாண்டவம் படத்தில் முதல் முறையா விக்ரமுடன் இணைகிறார் லட்சுமி ராய்.

கடந்த ஆண்டில் மிகவும் வெற்றிகரமான நாயகி என்ற பெயரைத் தட்டிச் சென்றவர் லட்சுமி ராய்தான்.

இந்த ஆண்டும் அவர் கைவசம் பெரிய படங்கள், நல்ல வேடங்கள் இருப்பதால், நம்பிக்கையுடன் உள்ளார்.

யூ டிவி நிறுவனம் தயாரிப்பில் விஜய் இயக்கும் ‘தாண்டவம்’ படத்தில் நாயகிகளில் ஒருவராக லட்சுமி ராய் இணைந்துள்ளார். இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக அனுஷ்கா ஏற்கெனவே நடித்து வருகிறார். ‘மதராச பட்டினம்’ படத்தில் நடித்த எமி ஜாக்சனும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

அடுத்த வாரத்திலிருந்து இப்படத்தின் படப்பிடிப்புகளில் லட்சுமி ராய் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்காக லட்சுமிராய் 25 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து லட்சுமி ராய் கூறும்போது, கடந்த வருடத்தில் நான் நடித்து வெளியான மங்காத்தா’, ‘காஞ்சனா’ படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவில் எனக்கு ஒரு நிலையான இடத்தைக் கொடுத்தது. அதேபோல், இப்படத்திலும் எனது கதாபாத்திரம் பாராட்டும்படி இருக்கும் என நம்புகிறேன் என்றார்.