Home பெண்கள் தாய்மை நலம் வயிற்றில் உள்ள கருவை பாதிக்கும் உணவுகள்

வயிற்றில் உள்ள கருவை பாதிக்கும் உணவுகள்

25

Mom-and-babyபெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். தாய் பாதுகாப்பாக இருந்தால் தான் வயிற்றில் உள்ள சிசுவும் பாதுகாப்பாக இருக்கும். ஆரோக்கியமற்ற உணவுகள் தாய் மற்றும் கருவில் இருக்கு சிசு என இருவரையுமே பாதிக்கும். உங்கள் வயிற்றில் உள்ள குழந்தை பாதுகாப்பாக இருக்க தவிர்க்க வேண்டிய விடயங்களை பார்க்கலாம்.
காப்ஃபைன் அளவு அதிகமாக உள்ள பானங்களான சோடா, கோலா போன்றவைகளை தவிர்க்கவும். கர்ப்ப காலத்தின் போது அளவுக்கு அதிகமாக காப்ஃபைனை உட்கொள்வது, குறிப்பாக முதல் மூன்று மாதங்களில், கருச்சிதைவுகளை ஏற்படுத்தும். அல்லது பிற உடல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும். தொடர்ச்சியாக காப்ஃபைனை உட்கொள்ளும் போது, குறைவான அளவு மற்றும் எடையுடன் பிறத்தல், குறைப்பிரசவம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும் என ஆய்வுகள் கூறுகிறது.

பச்சையான, சமைக்கப்படாத உணவுகளான பச்சை முட்டைகள், இறைச்சிகள் மற்றும் மீன் போன்றவற்றை தவிர்த்து விடுவது நல்லது. பச்சையான, சமைக்கப்படாத கடல் உணவுகள் தாய்க்கு சில தொற்றுக்களை ஏற்படுத்தும். பச்சை முட்டைகள் அல்லது இறைச்சிகளை உட்கொண்டாலும் கூட கர்ப்பிணி பெண்ணுக்கு குறிப்பிட்ட சில ஒட்டுண்ணி நோய்கள் உண்டாகலாம். ஒரு வேளை, கர்ப்பிணி பெண்ணுக்கு இவ்வகையான உணவுகளினால் தொற்று அல்லது நோய் ஏற்பட்டால், அது தொப்புள் கொடி வழியாக குழந்தையையும் அடையலாம். இதனால் குறைப்பிரசவம் ஏற்படக் கூடும் அல்லது மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தையாக பிறக்க கூடும்.

கர்ப்பிணிகள் தாங்கள் குடிக்கும் தண்ணீர் மற்றும் உணவின் மீது பாதுகாப்பாக இருக்க வேண்டும். தெருவோரம் கிடைக்கும் உணவுகளை உண்ணுவதால் தொற்றுக்கள் ஏற்படலாம். மேலும் கர்ப்ப காலத்தில், பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருக்கும். இதனால் மற்ற நேரங்களை காட்டிலும் இந்நேரத்தில் எளிதில் தொற்றுக்களுக்கு ஆளாகலாம்.