Home ஆண்கள் ரொம்ப நாளா ஆண்களுக்கு ஏன்னு விளங்காமா இருந்த கேள்விக்கான பதில்!

ரொம்ப நாளா ஆண்களுக்கு ஏன்னு விளங்காமா இருந்த கேள்விக்கான பதில்!

43

இந்த தலைப்பை ஆண்களால் ஜஸ்ட் லைக் தட் என எடுத்துக் கொள்ள முடியாது, விளையாட்டின் போது, எதிர்பாராத விதமாகவோ, சண்டையின் போதோ ஆண்கள் தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது இந்த உயிர் போகும் வலியை உணர்ந்திருப்பார்கள். கவட்டி அல்லது விரைகளில் அடிப்பட்டால் ஏற்படும் அந்த வலியை வார்த்தைகளில் கூறிவிட முடியாது. பெண்களின் பிரசவ வலி தான் உலகின் மிகவும் பெரிய வலி என முதல் இடம் கொடுத்தால், ஆண்களுக்கு விதைகளில் அடிப்படும் போது ஏற்படும் வலி கண்டிப்பாக இரண்டாம் இடம் பிடிக்கும். சரி! ஏன் அந்த இடத்தில் அடிப்பட்டால் மட்டும் அப்படி ஒரு வலி ஏற்படுகிறது என நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா?

விதைப்பை, விரைகள்! விதைப்பை மற்றும் விரைகள் என்பது நரம்புகளாலான கட்டு / மூட்டை அல்லது தொகுப்பு என கூறலாம். உடலுறவின் போதான தீண்டலின் போது சுகத்தை கூட்டும் இந்த நரம்புகளின் தொகுப்பு சற்று கடினமாக அல்ல அழுத்தமாக பிடித்துவிட்டாலே மிகுதியான வலியை ஏற்படுத்திவிடும்.

நரம்பு வலி! உடல் முழுவதும் நரம்புகள் பரவி இருக்கின்றன. ஆகையால் நரம்புகளில் ஏற்படும் வலியானது கரண்ட் ஒயரில் பரவுவது போல, உடல் எங்கிலும் வலி பரவ காரணியாக இருக்கிறது. இதனால் தான் நரம்பில் வலி ஏற்படும் போது மற்ற உடல் பாகங்களிலும் வலி உண்டாகிறது.

சிறுநீரகம் அருகில்! ஆண்களின் விதைப்பை, விரைகள் சிறுநீரகத்தின் அருகாமையில் அமைந்துள்ளது. மேலும், இதன் முக்கிய நரம்பு வயிறு பகுதியை சென்றடைகிறது. இதன் காரணமாகவே, இந்த நரம்பு பகுதியில் அடிப்படும் போது வயிறு, இடுப்பு சுற்றி மிகுதியான வலி உண்டாகிறது.

15 நிமிடங்கள்! இந்த நரம்பு தொகுப்பில் அடிப்படும் போது ஏற்படும் வலியானது ஓரிரு நிமிடங்களில் இருந்து 15 நிமிடங்கள் வரை நீடிக்கும். அடியின் தாக்கத்தை சார்ந்து வலியின் நேரம் அதிகரிக்கலாம். சில சமயங்களில் மயக்கம் அடையவும், உயிருக்கே அபாயமாகவும் கூட ஏற்படலாம்.

மிகுதியாக… 15 நிமிடத்திற்கும் மேலாக வலி நீடித்திருந்தால் மருத்துவ பரிசோதனை செய்து பாருங்கள் என மருத்துவர்கள் அறிவுரைக்கிறார்கள். மிகுதியான அடியின் காரணத்தால் விதைப்பை உள்ளே கிழிசல், இரத்தம் வழிதல் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. சில சமயங்களில் வீக்கம் கூட ஆகலாம். எனவே, 15 நிமிடத்திற்கு மேல் வலி நீடித்தால் தயக்கம் இல்லாமல் மருத்துவரை அணுகுங்கள் என நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.