Home பெண்கள் உடல் கட்டுப்பாடு யோகாசனங்கள் செய்யும் போது செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்

யோகாசனங்கள் செய்யும் போது செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்

43

பதஞ்சலி முனிவரின் கூற்று படி, யோகாசனம் (தோரணைகள்) என்பது “ஸ்திரம் சுகம் ஆசனம்” என வரையறுக்கப்படுகிறது. இதற்கு ஒரு நிலையை செளகரியமாகவும் சிரமமின்றியும் தக்கவைத்துக் கொள்ளுதல் என்று பொருளாகும். யோகாசனங்கள் ஒரு குறிப்பிட்ட நிலையில் நீடித்த நீண்ட நேரங்களுக்கு செளகரியமாக நிற்பது அல்லது அமர்வதற்கான ஆற்றலை அதனை பயிற்சி செய்பவருக்கு தருகின்றன.

யோகாசனம் பொதுவாக பொருத்தமான உடலமைப்பை மேம்படுத்துவதற்கான உடற்பயிற்சி வடிவமாகக் கருதப்படுகிறது. இது சரிதான், ஆனால் யோகாசனம் வெறும் உடற்பயிற்சி மட்டுமே அல்ல. யோகாசனம் உடற்பயிற்சியில் இருந்து வேறுபடுகிறது. ஏனெனில் இது ஒரு ‘இருத்தல் நிலை’ ஆகும். இந்நிலையானது இதனை செய்யும் நபரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஒரு நிலையிலும், சாந்தமாகவும் மற்றும் அமைதியாகவும் இருப்பதற்கான ஆற்றலைத் தருவதாகும்.

யோகாசனங்களைச் செய்யும் போது உகந்த முடிவுகளைப் பெற அடிப்படையில் செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக் கூடாதவைகள் சில பின்வருமாறு (Following few basic Do’s and Don’ts while performing Yogasanas provide optimum results):

செய்ய வேண்டியவை (Do’s)

குளித்துவிட்டு செயல்படவும்: யோகாசனம் செய்வதற்கு முன்னர் குளித்துவிட வேண்டும். குளிப்பது சோர்வைப் போக்கும். மேலும் உடலின் விறைப்புத் தன்மையை குறைத்து நெகிழ்ச்சித் தன்மையை மேம்படுத்தும்.
சரியான தரைவிரிப்பைப் பயன்படுத்தவும்: யோகா மேட் அல்லது நிலையான மற்றும் உங்களது முதுகுக்கு ஆதரவளிக்கும் இயற்கையான பொருட்களால் உருவாக்கப்பட்ட தரை விரிப்பை பயன்படுத்தவும். பஞ்சு அல்லது காற்றால் நிரப்பப்பட்ட மெத்தைகளைத் தவிர்க்கவும்.
படிப்படியாக செல்லவும்: நீங்கள் முதலில் எளிமையான யோகாசனங்களில் ஆரம்பித்து, பின்னர் படிப்படியாக கடினமான தோரணைகளை செய்யவும். யோகாசனத்தின் அழகே இருக்கக் கூடிய அனைத்து யோகாசனங்களையும் நீங்கள் செய்தாக வேண்டும் என்ற கட்டுப்பாடு உங்கள் மீது சுமத்தப்படாததுதான். நீங்கள் உங்கள் தேவைகளுக்கு பொருந்தும் மற்றும் வழக்கமாக பயிற்சி செய்வதற்கு ஏற்ற சீரான தொகுப்பை தேர்வு செய்து கொள்ளலாம்.

மெதுவாக இருங்கள்: யோகாசனங்களை எப்போதும் கட்டுப்பாடான இயக்கங்களுடன் மெதுவாகவும் மென்மையாகவும் பயிற்சி செய்யவும். நீங்கள் உடல்நிலைக் குறைபாடு அல்லது காயத்தின் காரணமாக யோகாசனங்கள் செய்வதை நிறுத்தி இருந்தால், எளிமையான ஒன்றுக்கு முன்னுரிமை அளித்து, படிப்படியாக உங்களது பயிற்சியினைத் தொடரவும்.

ஆழ்ந்து சுவாசிக்கவும்: நீங்கள் ஆழ்ந்து சுவாசித்து யோகாசனங்கள் செய்தால் அது பயனுள்ளதாக இருப்பதுடன், அதன் அதிகபட்ச நன்மைகளையும் பெற முடியும். மேலும், நீங்கள் தோரணையை செய்யத் துவங்கி அதனை விடுவிக்கும் போது முறையான சுவாச முறையை பின்பற்றுவதில் (எ. கா. நீங்கள் முன்னோக்கி வளையும் போது மூச்சை வெளிவிட வேண்டும், மீண்டும் பின்னோக்கி வரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும்) உறுதியாக இருக்க வேண்டும். உங்களது மூக்கு வழியாக மட்டுமே நீங்கள் சுவாசிக்க வேண்டும், உங்களது வாய்வழியாக சுவாசிக்கக் கூடாது.

முறைபடுத்துங்கள்: எந்த வடிவ உடற்பயிற்சியிலும் உகந்த முடிவுகளைப் பெற அது முறைபடுத்தப்பட வேண்டும், யோகாசனத்திலும் கூட. யோகாசனம் செய்வதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள், தொடர்ந்து அதனை பின்பற்றுங்கள்.
கோடை காலத்தில் குறைத்துக் கொள்ளுங்கள்: கோடைகாலத்தில், ஈரப்பதம் குறைவாக இருப்பதன் காரணமாக விரைவில் சோர்வடைதல் இயற்கையானதுதான். எனவே, உங்களது அசல் திறனைக் காட்டிலும் குறைவான யோகாசனங்களைச் செய்யவும்.
முறையாக ஓய்வெடுங்கள்: யோகாசனங்கள் செய்யும் போது முறையாக ஓய்வெடுங்கள். பயிற்சிகள் முடிந்த பிறகும் கூட ஓய்வெடுப்பதில் உறுதியாக இருங்கள்.
செய்யக்கூடாதவை (Don’ts)

அவசரப்படாதீர்கள்: அவசர அவசரமாக நீங்கள் யோகாசனங்களை பயிற்சி செய்ய வேண்டாம். இதன் காரணமாக காயங்கள் ஏற்பட்டு விடலாம். மேலும் நீங்கள் விரும்பிய முடிவுகள் உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ’மெதுவாகவும் சீராகவும்’ இருத்தலே யோகாசனம் செய்யும் போது அடிப்படை விதியாக இருக்க வேண்டும்.

கஷ்டப்படுத்திக் கொள்ள வேண்டாம்: ஆரம்பத்தில் உங்களது உடல் விறைப்பாக இருப்பதன் காரணமாக யோகாசனங்கள் செய்வதை நீங்கள் கடினமாக உணரலாம். இருப்பினும், உங்களை கஷ்டப்படுத்திக் கொள்ள வேண்டாம், நீங்கள் பரிபூரணத்தை அடைவதற்கு சில காலம் பிடிக்கும், நீங்கள் தொடர்ந்து முறையாக பயிற்சி எடுத்துக் கொள்ளும் போது உங்கள் தசைகள் மிருதுவாகும். எனவே, தோரணையின் போதோ, விடுவிக்கும் போதோ மற்றும் தக்க வைக்கும் போதோ உடலின் எந்த பகுதிக்கும் அதிகப்படியான கஷ்டத்தைத் தராதீர்கள்.
இயற்கை உபாதைகளைக் கட்டுப்படுத்த வேண்டாம்: யோகாசனங்கள் செய்யும் போது நீங்கள் சீராக இருக்கும் போதும், தும்மல், இருமல், கொட்டாவி முதலிய இயற்கை அவசரங்கள்/ உபாதைகளைக் கட்டுப்படுத்தக் கூடாது. மேலும், நீங்கள் இயற்கையின் அழைப்பை ஏற்க வேண்டி இருந்தால், நீங்கள் அதனை முடிக்க உடனடியாக செல்ல வேண்டும்.

உணவு/ பானம் எடுத்துக் கொள்ள வேண்டாம்: வெறும் வயிற்றில் யோகாசனம் செய்வதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் நீங்கள் யோகா பயிற்சியின் போது இடையில் ஏதும் சாப்பிடவோ அல்லது பருகவோ கூடாது.

ஒப்பிடாதீர்கள்: நீங்கள் மிகவும் நெகிழ்வான ஒரு மனிதரை சந்திக்க நேரிடலாம், உங்களுக்கு அவர்களுடன் உங்களை ஒப்பிடத் தோன்றலாம். அவர்களுடைய நெகிழ்வுத் தன்மையில் தோரணைகளை தக்க வைக்க நீங்கள் முயற்சி செய்வது உங்களுக்கு காயங்கள் ஏற்படலாம். முறையான தொடர் பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பின் மூலமாக நீங்களும் கூட அந்த நெகிழ்வுத் தன்மையை அடைய முடியும். எனவே, ஒப்பிட வேண்டாம்.
எனவே, நீங்கள் யோகாசனங்கள் செய்யும் போது உகந்த பலன்களைப் பெறுவதற்கு மேற்கண்ட கருத்துக்களில் கவனம் கொள்வதில் உறுதியாக இருங்கள்.