Home வீடியோ மூன்று மார்பகங்களை உடைய அமெரிக்கப் பெண் பொலிஸாரால் கைது (Video, Photo)

மூன்று மார்பகங்களை உடைய அமெரிக்கப் பெண் பொலிஸாரால் கைது (Video, Photo)

23

தனக்கு மூன்று மார்­ப­கங்கள் இருப்­ப­தாக கூறிக்­கொண்ட அமெ­ரிக்க யுவ­தி­யான ஜெஸ்மின் ட்ரைடெவில், மது­போ­தையில் வாகனம் செலுத்­திய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

21 வய­தான இந்த யுவ­தியின் உண்­மை­யான பெயர் அலி­சியா ஹெஸ்லர் ஆகும். பிளாஸ்திக் சத்­தி­ர­சி­கிச்சை மூலம் தான் மூன்­றா­வது மார்­ப­க­மொன்றை ஏற்­ப­டுத்­திக்­கொண்­ட­தாக கூறி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யவர்.

இவர் நேற்­று­முன்­தினம் புளோ­ரிடா மாநி­லத்தின் டெம்ப்பா நகரில் மது­போ­தையில் வாகனம் செலுத்­திய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார் என பொலிஸார் தெரி­வித்­துள்ளனர்.

ஜெஸ்மின் ட்ரைடெ­விலின் மூன்­றா­வது மார்­பகம் போலி­யா­னது என பலர் கரு­து­கின்­றனர். கடந்த செப்­டெம்பர் மாதம் விமானப் பய­ண­மொன்­றின்­போது பய­ணப்­பொ­தியில் வைத்­தி­ருந்த தனது போலி மார்­ப­க­மொன்று காணாமல் போன­தாக அவர் முறைப்­பாடு செய்­தி­ருந்த தகவல் வெளி­யா­னமை மேற்­படி கருத்தை வலுப்­ப­டுத்­து­வ­தாக இருந்தது.

ஆனால், தான் சத்­தி­ர­சி­கிச்சை மூலம் மூன்­றா­வது மார்­ப­கத்தை உரு­வாக்­கிக்­கொண்­ட­தாக ஜெஸ்மின் ட்ரைடெவில் தொடர்ந்து கூறி வரு­கிறார். “இது உண்­மை­யான மார்­பகம். மக்கள் நம்­பா­விட்டால், நம்­பாமல் போகட்டும்” என அவர் கூறு­கிறார். ஜெஸ்மின் ட்ரைடெவில் பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்­டமை இது முதல் தட­வை­யல்ல. 2013 ஆம் ஆண்டு மோசடி குற்­றச்­சாட்­டொன்றின் கார­ண­மாக அவர் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

தன்னை வீட்டில் கூண்டொன்றில் அடைத்து வைத்து பாலியல் அடிமையாக நடத்தியதாக 18 வயதான இளைஞர் ஒருவர் இவர் மீது புகார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.