Home சூடான செய்திகள் முதல் முறை தாம்பத்தியத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அறிவுரைகள்

முதல் முறை தாம்பத்தியத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அறிவுரைகள்

27

முதல் முறை உடலுறவு கொள்வது என்பது உங்களுக்கு கண்டிப்பாக நடுக்கத்தையும் மிரட்டலையும் ஏற்படுத்தும். உங்கள் துணைக்கும் அதுவே முதல் முறை என்றால், இருவருமே ஒரே சூழ்நிலையில் தான் நிற்பீர்கள். இரண்டு பேருக்குமே ஒரு விதமான மன அழுத்தம் ஏற்படும்.

உங்கள் இரண்டு பேருக்குமே முதல் முறையாக இருந்தாலும் சரி அல்லது ஒருவருக்கு மட்டும் முதல் முறையாக இருந்தாலும் சரி, கீழே உள்ள முறைகளை பின்பற்றுங்கள்… தாம்பத்தியம் என்பது சந்தோஷம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்ததாகும். எப்போது என்பதை எண்ணி அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள்.

நீங்கள் உங்கள் துணையும் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு முன் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் தயாராக இருக்க வேண்டியது முக்கியமாகும். கூடுதலாக, நீங்கள் முடிவு செய்த தேதியிலேயே கண்டிப்பாக செய்ய வேண்டும் என்றெல்லாம் அவசியம் இல்லை. அது நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம், ஆனால் எது நடக்கிறதோ அதன் படி செல்லுங்கள்.

ஒரு வித அலங்கோலத்துடன் தாம்பத்தியம் சரியாக நடக்க வாய்ப்பில்லாமல் போகலாம். இது கண்டிப்பாக நல்ல அனுபவமாக இருந்தாலும் ஆஹா ஓஹோ என சொல்லும் அளவிற்கு இருக்காது. இரண்டு பேரும் ஒத்துபோய் அதில் ஈடுபடுவதற்கும், உங்கள் துணைக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பதை தெரிந்து கொள்ள சிறிது காலம் ஆகலாம்.

அதனால் சூழ்நிலையை எளிதாக்கி கொள்ளுங்கள். அமைதியாக இருந்து ஒருவருக்கொருவர் அனுபவியுங்கள். உடனே உடலுறவின் உச்சக்கட்டத்தை அடைய வேண்டும் என நினைக்காதீர்கள். அது நடக்கும் நேரத்தில் நடக்கட்டும், அதற்காக முந்தைய செயல்களை அவதி அவதியென செய்யாதீர்கள். முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது வலி ஏற்படுவது இயல்பான ஒன்றே.

நாங்கள் ஏற்கனவே சொன்னதை போல் சில நேரம் சற்று இரத்தக் கசிவு இருக்கலாம். ஆனால் வலி என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் வலியைப் பற்றிய பதற்றம் நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

ஆனால் அந்த வலி என்பது கொஞ்ச நேரத்திற்கு மட்டுமே. சிறிது நேரம் கழித்து அதில் நீங்கள் சுகம் காண ஆரம்பித்து விடுவீர்கள். அதனால் அமைதியாக இருந்து, அந்த தருணத்தை கொண்டாடுங்கள்.