Home உறவு-காதல் Frist sex முதல் முறையா ஒரு பொண்ணுகிட்ட பேசும் போது எப்படி நடந்துக்கணும் தெரியுமா?

Frist sex முதல் முறையா ஒரு பொண்ணுகிட்ட பேசும் போது எப்படி நடந்துக்கணும் தெரியுமா?

71

உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பெண்ணுடன் பழக சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறதா? அதை நல்ல முறையாக பயன்படுத்துவது எப்படி என்பது பற்றி தெரியவில்லையா? முதல் முறையாக பேசும் போதே அசடு வடிந்து கொண்டு பெண்களுக்கு அறவே பிடிக்காது.
பெண்களிடம் எப்படி பேசினால் பிடிக்கும் என்பது பெண்களுக்கு தான் நன்றாக தெரியும். எனவே உங்கள் நல்ல தோழிகளிடம் கேட்டு தெரிந்துகொள்வது சிறந்ததாக இருக்கும்.

கேலி செய்ய வேண்டாம் வெளிதோற்றத்தை பார்த்து கேலி செய்வது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காத ஒன்று. எனவே அந்த பெண்ணின் நடை உடை பாவனை ஆகியவற்றை பற்றி விளையாட்டாக கூட கேலி கிண்டல் செய்ய வேண்டாம்.

குறைவாக பேசுங்கள் முதல் சந்திப்பிலேயே உங்களை பற்றிய பெருமைகளை எல்லாம் வளவளவென்று பேச வேண்டாம். அந்த பெண்ணுக்கு ஒரு விஷயத்தை பற்றி பேசுவது பிடிக்கவில்லை என்றால் அதை பற்றியே பேசி போரடிக்க வேண்டாம்.

உடல் அசைவுகளை புரிந்துகொள்ளுங்கள் அதிகப்படியான ஆண்களுக்கு பெண்களின் உடல் அசைவுகளை பார்த்தே அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிவதில்லை. அந்த பெண்ணுக்கு நீங்கள் நடந்துகொள்வது பிடிக்கிறது என்றால் தொடருங்கள். அதுவும் நீண்ட நேரம் ஒன்றை பற்றி பேசி போரடிக்க வேண்டாம். பிடிக்கவில்லை என்றால் ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டு விட்டுவிடுங்கள்.

நகைச்சுவையாக பேசுங்கள் நம்மை சிரிக்கவைப்பவர்களை நமக்கு மிகவும் பிடிக்கும். அதே வகையில் நீங்கள் நகைச்சுவையாக பேசி அந்த பெண்ணை சிரிக்க வைத்தால் அவருக்கு உங்களை பிடிக்கும்.

சுற்றி இருப்பவர்களை கவனியுங்கள் ஒரு விஷயம் பற்றி பேசுவதற்கு முன்பாக, உங்களை சுற்றி யார் இருக்கிறார்கள், என்ன சூழ்நிலை நிலவுகிறது என்பதை கவனித்து அதற்கு தகுந்த படி நடந்துகொள்ள வேண்டும்.

அனைத்து பெண்களையும் மதியுங்கள் உங்களுடன் பேசும் பெண்ணை மிகைப்படுத்தி பேச வேண்டும் என்பதற்காக மற்ற பெண்களை மட்டம் தட்டி பேசாதீர்கள்.

பாராட்டுங்கள் உங்களுடன் பேசும் பெண்ணின் ஸ்டைலை பற்றி வெளிப்படையாகவும், மரியாதையாகவும் பாராட்டுங்கள். ஆனால் அவர்களது உடலை பற்றி பாராட்டுவது வெறுப்பை உண்டாக்கும்.

கற்பனை வேண்டாம் முதல் சந்திப்பில் அந்த பெண் நட்பு ரீதியாக உங்களிடன் நன்றாக பேசிவிட்டால் உடனே காதல் என்று கற்பனை செய்துகொள்ள வேண்டாம்.